Posts

Showing posts from October 14, 2016
ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு வரும் செவ்வாய் கிழமை (18.10.2016) அன்று விசாரணைக்கு வருகிறது. SUPREME COURT OF INDIA Case Status Status : PENDING   Status of  :  Special Leave Petition (Civil)     29245     OF     2014   V. LAVANYA & ORS.    .Vs.     THE STATE OF TAMIL NADU & ORS.   Pet. Adv.  :  MR. T. HARISH KUMAR    Res. Adv.  :   MR. M. YOGESH KANNA   Subject Category  :  SERVICE MATTERS  -  RECRUITMENT/TRANSFER/COMPASSIONATE APPOINTMENT   Appealed Against  :   WA 1031/14  OF  HIGH COURT OF MADRAS   Listed 4 times earlier                                                               Likely to be Listed on  :   18/10/2016   Last updated on 08-10-2016
'நெட்' தேர்வு பதிவு அக்., 17ல் துவக்கம் தேசிய தகுதித்தேர்வான, 'நெட்' தேர்வுக்கு, அக்., 17ல், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு துவங்குகிறது. பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின் படி, கல்லுாரி உதவி பேராசிரியராகவும், இளநிலை ஆராய்ச்சி மாணவராகவும் சேர, நெட் தேர்ச்சிபெற வேண்டும். இந்த தேர்வு, நாடு முழுவதும், 90 நகரங்களில், 2017 ஜன., 22ல் நடக்கிறது.  இதில் பங்கேற்க, சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்ய வேண்டும். அதற்கான ஆன்லைன் பதிவு, வரும், 17ல் துவங்குகிறது; நவ., 16ல் முடிகிறது. இளநிலை ஆராய்ச்சி மாணவராக சேர, 2017 ஜன., 1ல், 28 வயதை தாண்டியிருக்கக் கூடாது. உதவி பேராசிரியர் பணி தேர்வில் பங்கேற்க, வயது வரம்பு இல்லை என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. 
ஒரே நாளில் இரு போட்டித்தேர்வுகள்!!! தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) தேர்வும், அகில இந்திய வங்கித் தேர்வும் அக்.,22ல், ஒரே நாளில் நடக்கவுள்ளதால் இரண்டிற்கும் விண்ணப்பித்து உள்ள தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர். அரசு பொறியியல் கல்லுாரிகளில் சீனியர் விரிவுரையாளர், விரிவு ரையாளர் மற்றும் ஜூனியர் விரிவுரையாளர் என 222 காலி பணியிடங்களுக்கு அக்.,22ல் மதுரை உட்பட 9 மாவட்டங்களில் டி.ஆர்.பி., சார்பில் தேர்வு நடக்கிறது. முன்னர் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு அடிப்படையில், அக்.,21ல் ஓட்டு எண்ணிக்கை நடப்பதாக இருந்தது. எண்ணிக்கை முடிந்த மறுநாளே (அக்.,22) பள்ளி, கல்லுாரி மையங்கள் கிடைக்குமா என்ற சந்தேகத்தால் ஒன்பது மாவட்டங்களில் டி.ஆர்.பி., தேர்வும் நடக்குமா என சர்ச்சை எழுந்தது.  இப்பிரச்னை குறித்து டி.ஆர்.பி., ஆலோசித்து வந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், அக்.,22 தேர்வு சிக்கலுக்கும் தீர்வு கிடைத்தது. இந்நிலையில் மத்திய அரசின் ஐ.பி.பி.எஸ்., (இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் அன்ட் பெர்சனல் செலக்ஷன்) வங்கி தேர்வும் அக