10 February 2017

ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க TRB உத்தரவு.

சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்த 
கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பதில் அவர்கள் நேர்முக உதவியாளர்கள் (பி.ஏ.,க்கள்) பங்கேற்க டி.ஆர்.பி., உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்,  மூன்று ஆண்டுகளுக்கு பின் இந்தாண்டு, ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) ஏப்., அல்லது மே 
மாதம் நடத்த டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.

இதையொட்டி பிப்.,13 முதல், அனைத்து மாவட்டங்களிலும் கல்வித்துறை சார்பில் டி.இ.டி., தேர்வுக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படவுள்ளது. இந்நிலையில் இத்தேர்வு குறித்த, அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள் ஆலோசனை கூட்டத்தை, 

பிப்.,3ல் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால் 'பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் துவங்கியதால் டி.ஆர்.பி., கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் பங்கேற்க வேண்டாம்,' என கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவரின் வாய்மொழி உத்தரவால் அவர்கள் பங்கேற்கவில்லை. இதற்கு டி.ஆர்.பி., மற்றும் கல்வித்துறை அதிகாரிக்கு இடையே நிலவிய 'ஈகோ' யுத்தம் தான் 
காரணம் என தகவல் வெளியாகியது.

இந்நிலையில், சி.இ.ஓ.,க் களுக்கு பதில் நேர்முக 

உதவியாளர்களை அழைத்து கூட்டம் நடத்த டி.ஆர்.பி., 
முடிவு செய்தது. இதுதொடர்பான கூட்டம் சென்னையில்
 இன்று (பிப்.,10) நடக்கிறது. இதில் டி.ஆர்.பி., தலைவர் 
விபு நாயர், இயக்குனர்கள், உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்
.கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வித்துறை
 உயர் அதிகாரி கவனமின்றி சி.இ.ஓ.,க்கள் கூட்டத்தை டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது.

இதனால் அந்த அதிகாரி அதிருப்தி அடைந்து கூட்டத்தில் 

பங்கேற்க சி.இ.ஓ.,க்களுக்கு மறைமுக தடை விதித்தார். 
இதனால் சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்களை அழைத்து
 டி.ஆர்.பி., இன்று கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தது," என்றார்.

TRB - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீர் மாற்றம். - தினகரன் செய்தி


ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி 

காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.ஆசிரியர் தேர்வு
 வாரியத்தின் தலைவராக கடந்த  3 ஆண்டுகளாக ஐஏஎஸ் 
அதிகாரி விபு நய்யார் பணியாற்றி வந்தார். 

இந்நிலையில்,இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் 
ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 29, 30ம் தேதிகளில்
 தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு  வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்து 
தற்போது விண்ணப்ப படிவங்கள் வினியோகம் தொடங்க 
உள்ளது.

 தேர்வு நடத்துவது ெதாடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய

 தலைவர் விபு நய்யாருக்கும், பள்ளிக் கல்வித்துறை 
செயலாளர்சபீதாவுக்கும்இடையேகருத்துவேறுபாடுஇருந்து
வந்ததாககூறப்படுகிறது.இதனால், தகுதித் தேர்வு அட்டவணை வெளியிடுவதை விபுநய்யார் வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

இதையடுத்து, விபுநய்யாரை டான்சிக்கு மாற்றி அரசு  நேற்று உத்தரவிட்டது. அவருக்கு பதிலாக உள்ளாட்சி

 நிர்வாகத்துறையின் பொறுப்பு அதிகாரியாக உள்ள காகர்லா 
உஷா ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 அவர் நேற்று மாலை ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், உள்ளாட்சித் துறையுடன் தொழில் துறையின் பொறுப்பை கவனித்து வந்தார். ஆசிரியர் 

தேர்வு வாரிய தலைவர் பொறுப்புடன் சேர்த்து 3 துறைகளை
 இனி கவனிப்பார்.

ஆசிரியர் காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கத் திட்டம் -இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9,000, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000

பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் அந்த வகுப்பைச் சேர்ந்த தகுதியான நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளனர்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்தி:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முறையாக நிரப்பப்படும் வரை அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பிட திட்டமிடப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,000, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.9,000, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000 என்ற வீதங்களில் ஒரு கல்வி ஆண்டில் கோடை விடுமுறை தவிர்த்து 10 மாதங்களுக்கு மட்டும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
 காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் பள்ளி அமைந்திருக்கும் உள்ளூர் மற்றும் கிராமத்தில் உள்ள அந்தந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த வேலைவாய்ப்பற்றவர்கள் மட்டுமே நியமனம் செய்யப்படுவர்.
 பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களை கல்வியாண்டு முடியும் வரை (கோடை விடுமுறை தவிர்த்து) அல்லது காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஒதுக்கீடு செய்யப்படும் ஆசிரியர்களைக் கொண்டு முறையாக நிரப்பப்படும் வரை இதில் எது முந்தையதோ அதுவரையில் பணியில் தொடர அனுமதிக்கப்படுவர். இது முற்றிலும் தாற்காலிகமானது.
 ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தாற்காலிகமாக, தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு வரும் 11ஆம் தேதி திருச்சி மிளகுபாறை ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வாழவந்திநாடு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், கணிதம், வேதியியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் தலா ஒரு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பட்டதாரி ஆசிரியர்கள் நிலையில் தமிழ், அறிவியல், சமூக அறிவியல், உடற்கல்வி ஆசிரியர் பாடங்களுக்கு தலா ஒரு ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
 செங்கரை அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளியில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நிலையில் ஆங்கிலம், இயற்பியல் பாடங்களில் தலா 1 பணியிடம் காலியாக உள்ளது.

முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் பாடத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், சமூக அறிவியல் பாடத்தில் பட்டதாரி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.

முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட மேல்நிலைப் பள்ளியில் கணித பாடத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் தலா ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
 தேர்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள், அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றிருப்பின் அதன் சான்றிதழ்
 இதரப் பள்ளிகளில் பணியாற்றியிருப்பின் முன் அனுபவச் சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றுடன் காலை 8 மணிக்கு முன்னர் தேர்வு நடைபெறும் இடத்துக்கு செல்ல வேண்டும்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...