26 January 2014

அரசுக் கல்லூரி உதவி பேராசிரி யர் தேர்வு மதிப்பெண் பட்டியல் தேர்வு பட்டியல் இன்று (26.01.14 ) ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது

அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் முறை மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படஉள்ளனர். உதவி பேராசிரியர் பணிக்கு மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு சென்னையில் கடந்த நவம்பர் மாதம் இறுதி முதல் டிசம்பர் முதல் வாரம் வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. 

பணிஅனுபவம், பி.எச்டி. பட்டம், ஸ்லெட், நெட் தேர்ச்சி, எம்.பில். ஆகியவற்றுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.மொத்த மதிப்பெண் 24ஆகும். நேர்முகத்தேர்வுக்கு 10 மதிப்பெண் ஒதுக்கீடுசெய்யப் பட்டுள்ளது. 

சான்றிதழ் சரிபார்ப்பின் போது, சில மையங்களில் உதவி பேராசிரியர் பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி பெறுவதற்கு (பி.எச்டி. அல்லது முதுகலை படிப்புடன் நெட், ஸ்லெட் தேர்ச்சி) முன்பு இருந்த பணிஅனுபவத்துக்கும் மதிப்பெண் வழங்கப்பட்ட தாகவும், தற்போது அந்த தவறு களை கண்டறிந்து, குறைந்தபட்ச தகுதிக்கு பின்னர் பெற்ற பணிஅனுபவத்துக்கு மட்டுமே மதிப்பெண் வழங்கப் பட்டிருப்ப தாகவும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரி வித்தனர். 

பணி அனுபவத்துக்கு ஓராண்டுக்கு 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சம் 7.5 ஆண்டு களுக்கு 15 மதிப்பெண் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே, உதவி பேராசிரியர் தேர்வில் இந்த மதிப்பெண் வெற்றி தோல்வியை முடிவு செய்யக்கூடிய தாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த கட்ட தேர்வான நேர்முகத்தேர்வுக்கு ஒரு காலியிடத் துக்கு 5 பேர் என்ற வீதத்தில் ஏறத்தாழ 5,500 பேர் தேர்வு செய்யப்படுவர்
ஆசிரியர் பணியிட மாறுதலில் ஊழல்: கல்வித்துறை மீது "களங்கம்"

ஆசிரியர் பணியிட மாறுதலில் பள்ளிக் கல்வித்துறையில் ஊழல் நடக்கிறது" என துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளர் அண்ணமாலை கூறினார்.அவர் கூறியதாவது: இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் வழங்க வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தைரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் பிப்.,2 ல், ஊர்வலம் நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜூனில் நடக்கும் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தவிர ஆண்டு முழுவதும் பணியிட மாறுதல் பணத்தை பெற்றுக் கொண்டு நடக்கிறது. இந்த மாறுதல் நடவடிக்கையை முதல்வர் ஜெ., தடுக்க வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வில் மற்ற மாநிலங்களை போல இன வாரியான இட ஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும். பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து அதற்கான பணத்தை செலுத்தி பணியின்போது இறந்த 120 பேருக்கும், ஓய்வு பெற்ற 60 பேருக்கும் உடனடியாக பணப் பலன்களை வழங்க வேண்டும்.

 தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் 1800 காலி பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியர் 12 ஆயிரத்து 596 பேரும்; 12 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு 17 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களை விட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு பணி வழங்கும் வரை அடுத்த தகுதித்தேர்வை நடத்தக் கூடாது. இவ்வாறு கூறினார்.
12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது?

  ஆறு மாதங்களாக டி.என்.பி.எஸ்.சி., இழுத்தடிப்பு தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக் குறியாகியுள்ளது. தேர்வு முடிவை மேலும் ஒரு மாதம் தள்ளிவைத்து வெளியிட, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்காக நடந்த தேர்வை, 12.21 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என, கூறப்பட்டது. 

குரூப் - 4 தேர்வை, பட்டதாரிகளும் எழுதியுள்ளனர். இவர்கள், குரூப் - 2 தேர்வையும் எழுதியுள்ளனர். 2012ல் நடந்த குரூப் - 2 தேர்வில், நேர்முகத் தேர்வு அல்லாத உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவை, இன்னும், தேர்வாணையம் வெளியிடவில்லை. குரூப் - 2 தேர்வு முடிவிற்கு முன், குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட்டால், முதலில், கிடைத்த வேலையில் சேரலாம் என,முடிவெடுத்து, பட்டதாரிகளும், குரூப் - 4 வேலையில் சேர்வர். 

பதவி உயர்வு : பின், குரூப் - 2 தேர்வு முடிவை வெளியிடும்போது, அதில் தேர்ச்சி பெற்றால், குரூப் - 4 வேலையை கைவிட்டு, அதிக சம்பளம், விரைவாக, அதிகாரி நிலைக்கு பதவி உயர்வு ஆகிய சிறப்புகளை கொண்ட, குரூப் - 2 வேலைக்கு வருவர்.இதனால், குரூப் - 4 நிலையில், மீண்டும் காலி பணியிடம் ஏற்படும். இதற்கு, மீண்டும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த வேண்டியிருக்கும். இந்த சிக்கலை மனதில் கொண்டு,முதலில், குரூப் - 2 தேர்வு முடிவை வெளியிட்டு, பணி நியமனம் வழங்கியபின், குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட, தேர்வாணையம் திட்டமிட்டு உள்ளது. 

குரூப் - 2 சான்றிதழ் சரிபார்ப்பு, இரு வாரம் வரை நடக்கும் என்பதால், 20 நாள் முதல், 25 நாள் கழித்தே, குரூப் - 4 தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள், தெரிவித்தன.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...