Posts

Showing posts from April 22, 2015
10ம் வகுப்பு தேர்வில் போனஸ் மதிப்பெண் பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது.  *பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதால், எந்த விடை எழுதி இருந்தாலும் அதற்கு மதிப்பெண் வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. * பத்து மதிப்பெண் 'கிராப்' பகுதி கேள்வியில், 47 (பி) கேள்வியில் வைப்புதொகை மற்றும் வட்டி ஆகியவற்றை 'எக்ஸ் மற்றும் ஒய்' அச்சுக்களில் மாற்றி எழுதிஇருப்பினும் முழு மதிப்பெண்கள் வழங்கலாம் என தேர்வு துறை இயக்குனர் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசு பள்ளிக்கூடங்களுக்கு ஆய்வக உதவியாளர் 4360 பேர் எழுத்துத்தேர்வு மூலம் நியமனம் 24-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளராகபணிபுரிய 4360 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களை அரசு தேர்வுத்துறை எழுத்துத்தேர்வு வைத்து தேர்ந்து எடுக்கப்பட உள்ளது. இதற்காக விண்ணப்பிக்க 24-ந்தேதி முதல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அறிவிக்கும் நோடல் மையத்தில் இருந்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் எஸ்.எஸ்.எல்.சி.படித்திருக்கவேண்டும். 18 வயதுக்கு குறைவு இல்லாமல் இருக்கவேண்டும். விண்ணப்பிக்க மே 6-ந்தேதி கடைசி நாள். எழுத்துத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் மே 31-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான முழு அறிவிப்பு இன்று (புதன்கிழமை) வெளியாக உள்ளது.