10 May 2014

ஆசிரியர் பணியிடம் ரூ.8 லட்சம்: ஆசிரியர்கள் குற்றச்சாட்டு DINAKARAN 

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாட்டில் தொடக்க கல்வி துறை மற்றும் பள்ளி கல்வித்துறையில் காலிப்பணியிடங்களை கலந்தாய்வில் காட்டாமல் நிர்வாக மாறுதல் என்ற பெயரில் ஓரு ஆசிரியர் பணியிடம் ரூ.5 லட்சம் முதல் 8 லட்சம் வரை விற்பனை செய்யப்படுவது தடுக்கப் பட்டு கலந்தாய்வுக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் பள்ளி உதவியாசிரியர்கள் மீது தவறே செய்யாமல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

எனவே பாதிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் வரும் 20ம் தேதி முதல் தொடக்க கல்வி இயக்குநர் அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரட்டைப் பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம் இரட்டைப் பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது இவ்வழக்கில் பெரிய விசயமாக கருதப்படுகிறது

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...