Posts

Image
  நீட் தேர்வு 2024: ஹால் டிக்கெட் ரிலீஸ் எப்போது? கடந்த ஆண்டு தேர்வுக்கு எத்தனை நாட்களுக்கு முன்பு வெளியானது? தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் நீட் தேர்வுக்கான (NEET UG) ஹால் டிக்கெட்டை வெளியிட உள்ளது. மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட உள்ளதால், விண்ணப்பதாரர்களுக்கான சிட்டி இன்டிமேசன் ஸ்லிப்பை தேசிய தேர்வு முகமை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டதும், மாணவர்கள் https://exams.nta.ac.in/NEET/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். முன்னதாக, 2021 ஆம் ஆண்டில், நீட் தேர்வுக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி அட்மிட் கார்டு வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து செப்டம்பர் 12 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. 2022 ஆம் ஆண்டுக்கு, ஜூன் 29 ஆம் தேதி சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் வெளியிடப்பட்டது, ஜூலை 12 ஆம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு, ஜூலை 17 ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. இறுதியாக, முந்தைய (2023) ஆண்டில், நீட் தேர்வு சிட்டி இன்டிமேசன் ஸ்லிப் ஏப்ரல் 30 அன்று வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து மே 7 ஆம் தேதி தேர்வுக்கு முன்னதாக மே 4 அன்
Image
  பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஏற்கனவே அறிவித்தபடி பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தோ்வை தமிழகம் முழுவதும் 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனா். இதேபோல் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த தோ்வை சுமாா் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனர். இதனிடையே பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி அண்மையில் நிறைவடைந்தது. தொடர்ந்து மதிப்பெண்களை கணினியில் பதிவேற்றம் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புக்கும், மே 10ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Image
 "அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு" - ராமதாஸ் குற்றச்சாட்டு அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.  தமிழகத்தில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது ஏற்கெனவே நலிவடைந்த நிலையிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி
Image
  மாவட்ட நீதிமன்றங்களில் 2329 காலியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கீழ் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2329 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த வேலைக்கு யாரெல்லாம் தகுதியானவர்கள், விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் நகல் பரிசோதகர், நகல் வாசிப்பாளர், இளநிலை கட்டளை பணியாளர், முதுநிலை கட்டளை பணியாளர், கட்டளை நிறைவேற்றுனர், கட்டளை எழுத்தர், ஒளிப்பட நகல் எடுப்பவர், மின் தூக்கி இயக்குபவர், ஓட்டுனர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:- நிரப்பப்படும் பதவிகள் 1) நகல் பரிசோதகர் (Examiner) 2) நகல் வாசிப்பாளர் (Reader) 3) முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் 4) இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் (Junior Bailiff)/ கட்டளை பணியாளர் (Process Server) 5) கட்டளை எழுத்தர் (Process Writer) 6) ஒளிப்பட நகல் எடுப்பவ
Image
4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு! தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை - அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது.  அதன்படி மார்ச் 28 முதல் ஏப்ரல் 29 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படும், ஆகஸ்ட் 4-ஆம் நாள் போட்டித் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை மே 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டித்து தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தவிட்டுள்ளது.  இந்த அறிவிப்பு ஆசிரியர் பணிக்காக காத்திருப்போரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில
Image
 ' டெட்' தேர்வு அறிவிப்பு எப்போது? - ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு பட்டதாரிகள் மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ( என்சிடிஇ ) விதிமுறைகளின் படி, ஆண்டுக்கு 2 தடவை 'டெட்' தேர்வு நடத்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. 2024-ம் ஆண்டு 'டெட்' தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியிடப்பட்டு ஜூலையில் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகால அட்டவணையில் அறிவித்திருந்தது.  இந்நிலையில், ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் 'டெட்' தேர்வு குறித்த அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்னும் வெளியிடவில்லை. இதனால், 'டெட்' தேர்வை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பி.எட். பட்டதாரிகளும், இடைநிலை ஆசிரியர் பயிற்சிய
Image
  மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: கணக்கெடுப்பு பணிகள் மே முதல் வாரத்தில் தொடக்கம் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 15 வயதுக்கு மேலாக எழுத, படிக்க தெரியாதவர்களை கணக்கெடுக்கும் பணிகள் மே முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத்‌ திட்டம்‌’ 2022-ம்ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.  இந்த திட்டத்தின் கீழ் 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்த திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது. தொடர்ந்து இந்தாண்டு பாரத எழுத்தறிவுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகியுள்ளன.  இதுதொடர்பாக பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் துறையின் இயக்குநர் சு.நாகராஜ முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற