பள்ளிக்கல்வி இயக்குநர்கள் மாற்றம், புதிய பள்ளிக்கல்வி இயக்குநராக திரு. இராமேஸ்வர முருகன் நியமித்து உத்தரவு
பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இயக்குநர்களை மாற்றி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய உத்தரவின் படி
பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் - திரு. இராமேஸ்வர முருகன்,
அரசுத் தேர்வுகள் துறை இயக்குனர் - திரு. தேவராஜன்,
தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் - திரு.இளங்கோவன்
RMSA இயக்குனர் - திரு.சங்கர்
TRB இயக்குனர் - திருமதி. வசுந்திரதேவி
DTERT இயக்குனர் - திரு.கண்ணப்பன்
மெட்ரிக் பள்ளி இயக்குனர் திரு. பிச்சை
பாடநூல் கழக இயக்குநர் - திரு.அன்பழகன்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
30 July 2013
ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கு.
ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்வில் மதிப்பெண்களை நிர்ணயிப்பதில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்துள்ளனர்.மனுவை தாக்கல் செய்த பழனிமுத்து கூடுதல் பிரமாண பத்திரத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை ஐகோர்ட் தலைமை நீதிபதி அகர்வால், சத்தியநாராயணன் அமர்வு விசாரித்துள்ளது. மனு மீதானவிசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

TET: பாடப்புத்தக அட்டையில் இருந்தும் கேள்விகள்: டி.இ.டி.,தேர்வுக்கு நிபுணர்கள் ஆலோசனை
"பள்ளி பாடப்புத்தக அட்டையில் இருந்து கூட, ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படலாம்; எனவே, புத்தகங்களை, ஒரு வரி விடாமல், முழுமையாக படிக்க வேண்டும்" என, டி.இ.டி., தேர்வு எழுதுவோருக்கு, பேராசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
தமிழ் பாடம் குறித்து, மதுரை, "நேஷனல் இன்ஸ்டிடியூட்பாங்கிங்" பயிற்சி மைய உதவி பேராசிரியர் கணேசன்: ஆசிரியர்தகுதி தேர்வு எழுதுவோர், 1ம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரையுள்ள, பள்ளி பாடப்புத்தகங்களை, முழுமையாக படித்தாலே, எளிதில் வெற்றி பெறலாம்.
தமிழ் பாடத்தை பொறுத்தவரை, புத்தக அட்டையில்இருந்து கூட, கேள்விகள் கேட்கப்படலாம். அனைத்து புத்தகங்களையும், ஒரு வரி விடாமல் படிக்க வேண்டும். தேர்வு எழுதும் போது, கேள்விக்கு உடனே பதிலளிக்காமல், சற்று நிதானமாக சிந்தித்து, பதிலளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
சமூகத்தில் நடக்கும் செய்திகள், பெரும்பாலும் கேள்விகளாக அமையும். சமூக நிகழ்வுகளையும், அறிந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். சில நேரங்களில், சாதாரண கேள்விகளும், குழப்பும் வகையில் கேட்கப்படும். அந்நேரத்தில், யோசித்து நிதானமாக பதிலளிக்க வேண்டும்.
நம்மை ஏமாற்றும் வகையில், கேட்கப்படும் கேள்விகளுக்கு உஷாராக பதிலளிக்க வேண்டும். தமிழை பகுத்து படிக்கும் ஆற்றல் இருக்க வேண்டும்.
கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்கள் குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் பாங்கிங் பயிற்சி மையநிர்வாக இயக்குனர் வெங்கடாசலம்: அடிப்படை கணிதம், சூத்திரங்களை முழுமையாக படிப்பதோடு, பயிற்சி செய்து பார்க்க வேண்டும்.
மனப்பாடம் செய்து படிப்பதை விட்டு விட்டு, புரிந்து படிக்க கற்று கொள்ள வேண்டும். தேர்வுக்கு படித்தால் மட்டும் போதாது, படித்ததை தேர்வில் எப்படி பயன்படுத்துவது என்பதையும் கற்று கொள்ள வேண்டும்.
போட்டி தேர்வு, நம் அறிவுக்கு நடத்தப்படும் தேர்வு அல்ல; நம் அறியாமையை சோதிக்க நடக்கும் தேர்வு. தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி இருந்தால், எளிதில் வெற்றி பெறலாம்.
ஆங்கில பாடம் குறித்த எளிய, டிப்ஸ்களை,வழங்கும், பயிற்சி மைய நிர்வாக அதிகாரி வெங்கடாஜலபதி: குழப்பமான மொழியான ஆங்கிலத்தை, அவசியம் கற்று கொள்ள வேண்டும். ஆங்கிலத்தை பொறுத்தவரை, பெரும்பாலும் பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுவது இல்லை.
நன்றி : தினமலர்

பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகளை உடனுக்கு உடன் அதிகாரிகளுக்கு தெரிவிக்க அரசுஉத்தரவு
பள்ளிகளில் ஏற்படும் எதிர்பாரத நிகழ்வுகளை அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உடனுக்கு உடன் கல்வித் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் எதிர்பாரத நிகழ்வுகள் மற்றும் பல்வேறுசம்பவங்கள் குறித்து மாநில அளவில் உள்ள அதிகாரிகளுக்கு தாமதமாகவே தெரிய வருகிறது. இதனால் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதை நிவர்த்தி செய்யும் வகையில் உடனே அனைத்து துறை அலுவலர்களுக்கும் தகவல்களை தெரிவிக்கபள்ளிக் கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு பள்ளியிலும் 14 அம்ச திட்டங்களை செயல்படுத்துதலில் உள்ள குறைபாடுகள், முக்கியமாக மாணவ, மாணவிகளை நேரடியாக பாதிக்கும் சத்துணவு செயல்படுத்துவதில் குறைபாடுகள், மாணவ, மாணவிகளை வழிநடத்துதல், பள்ளிகளில் இருந்து சுற்றுலா அழைத்துச் செல்லுதல், நாட்டுநலப்பணித்திட்டத்திற்கு அழைத்துச் செல்லுதல், இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆசிரியை மற்றும் ஆசிரியர்களின் முரண்பாடன செயல்கள், ஒழுக்கக் கேடுகளைவிளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட எதிர்பாரத சம்பவங்கள் நிறைய ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது குறித்த தகவல்கள் அனைத்தையும் உடனே மேல் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
முதல் கட்டமாக நிகழ்வுகளை கேள்விப்பட்டவுடன், அதை சரியா என உண்மைத் தன்மை குறித்து விசாரித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தகவல்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். அதையடுத்து, அத் தகவலை பள்ளிக் கல்வி துறை இயக்குநர் அலுவலகத்திற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் தெரிவிக்கப்படும். பின்னர் அங்குள்ள அனைத்து துறை உயர் அதிகாரிகளுக்கும் தெரிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், முக்கியமான அசம்பாவிதத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருந்தால் உடனே தலைமையாசிரியர்களே நேரடியாக உயர் அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட தொலைபேசி எண்களான மாநில பள்ளிக் கல்விஇயக்குநர்-28278796, இணை இயக்குநர்(பணியாளர் நிர்வாகம்)-28276340, இணை இயக்குநர்(மேல்நிலைக் கல்வி)-28280186, இணை இயக்குநர்(நாட்டு நலப்பணி திட்டம்)-28204340, இணை இயக்குநர்(தொடக்க கல்வி)-28250523 ஆகியோருக்கு தெரிவிக்கவும் வேண்டும் என பள்ளிக் கல்வி துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர் தேர்வு செய்ய அரசு திட்டம்?
"டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் பணியிடங்கள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் பணியிடங்களை நிரப்ப, 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களை நியமனம் செய்ய, தமிழக அரசு திட்டமிட்டுஉள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில், அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களில், 652 பேரை, பள்ளிக் கல்வித் துறை, "டிஸ்மிஸ்'செய்தது.
மாணவர் நலன் கருதி, புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் வரை, பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கல்வித் துறையின் கோரிக்கையையும்,சுப்ரீம் கோர்ட் நிராகரித்து விட்டது. 652 பேரையும், உடனடியாகப் பணி நீக்கம் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டதால்,அனைவரையும் உடனடியாக, "டிஸ்மிஸ்' செய்து, கல்வித் துறை உத்தரவிட்டது. இதனால், மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் பாடம் எடுக்க, ஆசிரியர் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. மாற்று ஏற்பாடு குறித்து, ஓரிரு நாளில் முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது. புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்து, 652 பணியிடங்களை நிரப்பவும், கூடுதலாகத் தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், 2,000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய, தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது
. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில், "அரசு உத்தரவிட்டால், கம்ப்யூட்டர் ஆசிரியர்களைத் தேர்வு செய்ய தயாராக உள்ளோம்; இதுவரை, உத்தரவு வரவில்லை' என, தெரிவித்தன.

Subscribe to:
Posts (Atom)
கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...