Posts

Showing posts from October 29, 2014
வரும் 30, 31ம் தேதிகளில் "தலைமை ஆசிரியர்" கலந்தாய்வு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நியமன கலந்தாய்வு, வரும், 30, 31ம் தேதிகளில் நடக்கிறது. பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவிப்பு: நடப்பு கல்வி ஆண்டில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன.  இந்த பள்ளி களில், தலைமை ஆசிரியர் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, வரும், 30ம் தேதியும், தற்போது இந்த பள்ளிகளில் பணிபுரிந்து வரும் தலைமை ஆசிரியர் (உயர்நிலைப் பள்ளி) பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு, 31ம் தேதியும் நடக்கிறது.  இணையதள வழியில், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில், காலை, 10:00 மணி முதல், கலந்தாய்வு நடக்கும். மேலும், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில், 450 முதுகலை ஆசிரியரை, பதவி உயர்வு மூலம் நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு, 31ம் தேதி நடக்கும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.
கம்ப்யூட்டர் ஆசிரியர் பணிக்கு பதிவுமூப்பு அறிவிப்பு    ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடத்திற்கு மாநிலபதிவுமூப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு பி.எட்., படிப்புடன் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது பி.சி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1.7.2014 அன்று 57 வயதுக்குள் இருக்க வேண்டும்.  முன்னுரிமைதாரர்: எஸ்.சி., அருந்ததியினர் பொது 31.1.2011 வரை, எஸ்.சி., பொது 3.9.2011 வரை, எம்.பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பொது 3.9.2011, பி.சி.,பெண்கள் 15.10.2012 (ஆதரவற்ற விதவை), பி.சி.,முஸ்லிம் பொது 19.3.2013, பகிரங்க போட்டியாளர் பொது 28.9.1988 வரை.  மாற்றுத்திறனாளிகள்: எஸ்.சி., பெண்கள் 13.9.2014, எஸ்.சி.,பொது 29.9.2014, எம்.பி.சி.,பெண்கள் 29.9.2014, எம்.பி.சி.,பொது 26.9.2014, பி.சி.,பெண்கள் 29.9.2014, பி.சி.,பொது 19.3.2014, பி.சி.,முஸ்லிம் பொது 25.8.2014, பகிரங்க போட்டியாளர் பொது 20.8.2013 வரை.  முன்னுரிமை இல்லாதவர்: எஸ்.டி. பொது 3.9.2011, எஸ்.சி.அருந்ததியினர் பொது 20.12.2010, எஸ்.சி.,பொது 24.4.2008, பி.சி.,பொது 23.2.2007,