29 June 2014

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் வெளியீடு! 

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வுக்கான விடைநகல் ஒருவாரத்தில் இணையத்தில் வெளியீடப்படும் . சென்னையில் டிஎன்பிஎஸ்சி தலைவர்(பொறுப்பு) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்த ஓரிரு வாரங்களில் தேர்வு முடிகளும் வெளியிடப்படும் என்று பாலசுபிரமணியன் கூறியுள்ளார். 

தமிழகம் முழுவதும் அரசு விதிகளின்படி 2,846 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விடைநகல் தேர்வு முடிவையும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.
வழக்குத் தொடர்வோம்! வரலாற்று சாதனை படைத்திருக்கிறது TRB.

கடந்த 2013 லிருந்து ஒரே நிறுவனம் அல்லது வாரியத்தின் மீது அதிக வழக்குகள் தொடரப் பட்ட பெருமைக்குரிய வாரியம் "TRB" என்ற சாதனையை படைத்திற்குக்கிறது. இந்த மதிப்பிற்குரிய சாதனையை லிம்கா, கின்னஸ், போன்ற உலக வரலாற்று சாதனை புத்தகத்தில் இடம் பெற செய்வதோடு சென்னையின் முக்கிய இடங்களிலும் ,ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா நகரங்களிலும் TRB சாதனையை பொன்னெழுத்தில் பொறிக்க வேண்டும். 

ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்த நாட்டில் உள்ள கல்வி முறை,விவசாயம், பொருள் உற்பத்தி போன்றவற்றை தான் சார்ந்துள்ளது. விவசாயம் குறித்த எந்த ஆக்கப் பூர்வமான நடவடிக்கையும் இல்லை. நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு அரசின் அறிவுறுத்தல் இல்லை.விளைவு நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது.நட்ட பயிர்கள் யாவும் நாசமாய் போய்விட்டது. 

AK 47 முதல் PK 57 வரை தொழிற்சாலையில் அவர்கள் எதை வேண்டுமானால் தயாரிக்கலாம்.ஆனால் மனிதன் உயிர் வாழத் தேவையானவற்றில் ஒரே ஒரு நெல் மணியைக் கூட அவர்களால் தயாரிக்க முடியாது. உலக மயமாக்கல் என்ற பெயரில் அயல் நாட்டு தொழிற்சாலைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது.அவர்கள் தேவையான அளவு நம்மை சுரண்டிவிட்டு தங்களது மூட்டை முடிச்சிகளுடன் தங்கள் நாட்டிற்கு திரும்பி விடுகின்றனர்.

உதாரணம்.சென்னையில் இயங்கும் நோக்கியா தொழிற்சாலை. சரி நம் துறைக்கு வருவோம்.2009 ஆண்டு ஒபாமா அமெரிக்காவின் அதிபரான போது அமெரிக்காவின் பொருளாதாரத்தை சீர் செய்ய பல நடவடிக்கை எடுத்தாலும் முக்கியமாக குறிப்பிட வேண்டிய நடவடிக்கை அங்கு வேலை செய்த இந்தியர்களில் 50% இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப் பட்டனர். 

அமெரிக்காவின் பொருளாராதரத்தை சீர் செய்ய வேண்டுமானால் அமெரிக்க குடி மக்களுக்கு வேலை வழங்க வேண்டும்.இந்தியர்கள் பலர் அமெரிக்கா மக்களின் வேலையை பறித்து விடுகின்றனர் என்ற காராணம் சொல்லப் பட்டது.அதோடு இந்தியாவின் IT நகராமான பெங்களூருக்கு வழங்கி வந்த project இன் அளவு சரி பாதியாக குறைக்கப் பட்டது.

இது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள ஒபாமாவிற்கு அவரது நாட்டு மக்களின் மீது உண்மையான அக்கறை இருந்தது.நாடு முன்னேற வேண்டுமென்ற துடிப்பு இருக்கிறது. ஆனால் இந்தியாவிலோ அதற்கு நேர் தலைகீழ்.அரசியல்வாதிகள் தம் சொந்த நாட்டு மக்களை அடிமைகளாகவும் முட்டாள்களாகவும் வைத்திருக்கவே விரும்புகின்றனர்.

நேருவிற்கு பிறகு பாராளுமன்றத்திலும்,காமராஜருக்குப் பிறகு தமிழக சட்ட மன்றத்திலும் திறமையான அமைச்சர்களை நியமித்துக் கொள்வதில்லை. TET குறித்து இதுவரை நூற்றுக் கணக்கான வழக்குகள் பதியப்பட்டுள்ளது.தொடர்ந்து பதியப்பட்டும் வருகிறது.5% தளர்விற்கு எதிராக,சீனியாரிடிக்கு மதிப்பெண் அளிக்கப் படவேண்டும்,+12 மதிப்பெண்ணை நீக்க வேண்டும் என ஒவ்வொருவரும் தங்களுக்கு சாதகமான முறை இதுதான் என நினைத்துக் கொண்டு வழக்குப் பதிகின்றனர். 

ஆனால் நிரப்படும் காலிப் பணியிடங்களின்எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியாமலே வழக்கு பதிவு செய்வதுதான்உலக மகா காமெடி. ஒருவேளை அவர்கள் குறிப்பிடும் அதே முறை G.O வாக வந்தாலும் அவர்களது போட்டியாளர்கள் மாறுவார்களே தவிர, காலிப் பணியிடங்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு 100% வேலை கிடைக்கும் எனற உத்தரவாதம் இல்லை. 

RTI மற்றும் இன்னும் பிற தகவல்களை ஒப்பிட்டு பார்க்கையில் படி BT க்கு 10800 பணியிடங்கள் நிரப்பப் போவதாக தெரிகிறது.ஆனால் இது அதிகாரப் பூர்வத் தகவல் இல்லை.ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் SC,ST பிரிவினரைத் தவிர பிற பிரிவினர்களும்,82-89 பெற்றவர்களும் அதிக பாதிப்புக்குள்ளாவார்கள். 

ஏனெனில் இந்த 10800 பணியிடங்களும் ஏற்கனவே இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பிரித்து வைக்கப் பட்டுள்ளதாகாவும்.அதில் SC,ST பிரிவினருக்கே அதிக காலிப் பணியிடங்கள் இருப்பதாகவும் தெரிகிறது. இப்பொழுது நாம் செய்ய வேண்டியது என்ன? 

இப்போது நிரப்பப் போகும் இந்த 10,800 பணியிடங்கள் எப்படி வந்தது என்று கேட்டால், MAY 2013 ஆம் ஆண்டு வரை காலிப் பணியிடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டதாகவும் இதில் 20,000 பணியிடங்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கி விட்டதாகவும் மீதமுள்ள 10,800 பணியிடங்கள் 2013 ஆம் ஆண்டு TET தேர்வில் தேர்ச்சி பெற்ற நம்மைக் கொண்டு நிரப்பப் போவதாகவும் தெரிகிறது. 

2012 ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2013-MAY வரை உள்ள காலிப் பணியிடங்களை நிரப்பினால் 2013 ஆண்டில் தேர்ச்சி பெற்ற நமக்கு 2014-MAY வரை உள்ள காலிப் பணியிடங்களைக் கணக்கில் எடுதுத்துக் கொண்டு பணி ஆணை வழங்க வேண்டும்.வரும் ஜூலை 10 முதல் சட்ட மன்ற கூட்டத் தொடர் நடைபெறவிருக்கிறது.அப்போது கல்வி மானியக் கோரிக்கையின் போது உண்மை நிலவரம் தெரிந்து விடும். 

ஒருவேளை 10800 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படுமானால் அதிலுள்ள அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வழக்குத் தொடுக்கும் அன்பர்களே, இதுதான் நமக்கு சாதகமான weighatge முறை என நினைத்துக் கொண்டு,தான் குறிப்பிடும் முறையிலேயே weighatge உரை கணக்கிட வேண்டும் என வழக்குத் தொடராமல், TET- 2012 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு MAY-2013 வரையுள்ள காலிப் பணியிடங்களை கணக்கில் கொண்டு நிரப்பப் படும் போது TET-2013 இல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு MAY-2014 வரை உள்ள காலிப் பணியிடங்களும் கணக்கில் எடுத்துக் கொண்டு பணி ஆணை வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடருங்கள்.2013-2014 ஆம் கல்வி ஆண்டில் 20500 காலிப் பணியிடங்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது.ஆதலால் நாம் அனைவரும் பயனடையலாம். 
Source www.kalviseithi.com
FLASH NEWS; முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்குகள் வரும் திங்கட்கிழமை (30.06.2014)விசாரணைக்கு வருகின்றன. 

ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கேதிராக தொடுக்கப்பட்ட ஏராளமான வழக்குகள் (SL.NO 25 TO SL.NO 194)வரும் திங்கட்கிழமை 30.06.2014 நீதியரசர் எஸ். நாகமுத்து (COURT NO. 9) அமர்வில் இடம்பெற்றுள்ளன.ஏற்கனவே நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் அமர்வில் இடம்பெற்றிருந்த PGTRB 2013 கீ ஆன்சர் வழக்கு எண்களும் இடம்பெற்றுள்ளன. 

 GROUPING MATTERS SPECIALLY ORDERED CASES WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD CASES ON VARIOUS GROUNDS TO BE HEARD ON MONDAY THE 30TH DAY OF JUNE 2014 AT 2.15.P.M. 

 SOME CHALLENGING KEY ANSWER WRIT PETITIONS INCLUDING THIS LIST PGTRB 2013 
26.WP.28640/2013
 82.WP.28647/2013 
84.WP.28893/201 
85.WP.28902/2013 
86.WP.29346/2013 TO WP.29349/2013 
87.WP.29539/2013 88.WP.29555/2013
 89.WP.29564/2013 91.WP.29605/2013 
94.WP.29987/2013 95.WP.30006/2013 
103.WP.30927/2013 
116.WP.31294/2013 
119.WP.31352/2013 
128.WP.31590/2013 
129.WP.31674/2013 
132.WP.31755/2013 
137.WP.31769/2013 
141.WP.31868/2013 TO WP.31872/2013 
178.WP.32719/2013 181.WP.33195/2013 
186.WP.34564/2013 187.WP.28587/2013 
188.WP.29464/2013 191.WP.31670/2013 
192.WP.31780/2013 193.WP.31943/2013 
189.WP.32115/2013 
190.WP.30616/2013 TO WP.30618/2013 
திங்கள் அன்று PGTRB வழக்குகள் முடிந்தால் இறுதி பட்டியலை ஜூலை முதல் வாரத்தில் எதிர்பார்க்கலாம். Source www.kalvikkuyil.blogspot.com
டி.இ.டி., ல் தேர்ச்சி பெற்றவர்களை பணியமர்த்துவதில் தாமதம் ! 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, 5 மாதங்கள் கடந்த பிறகும் பணி நியமனம் செய்யாதது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. 

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு இவ்வாறு உத்தரவிட்டார். மனுவில், நான் எம்.எஸ்சி., எம்.எட் படித்துள்ளேன். கடந்த 2013 ஆக.18-ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். 2014 ஜன. 24-ல் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் காலி இடங்களில் பணி அமர்த்தப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. 

ஏராளமான காலி பணியிடங்கள் இருந்த போதிலும், இதுவரை யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளை சந்தித்து விவரம் கேட்டேன். அப்போது, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டவர்களைக் கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், அதுதொடர்பாக தனித்தனியாக கடிதம் அனுப்பப்படும் என்றும் தெரிவித்தனர். 

சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு 5 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படாததால், தேர்வானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். எனக்காக, ஒரு பணியிடத்தை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். 

இம் மனுவை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, மனுவுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
இன்று குரூப் 2 ஏ தேர்வு உதவி ஆணையாளர் உள்பட 2269 பணியிடங்களுக்கான குரூப் 2 ஏ தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. அரசின் பல்வேறுத் துறைகளில் எழுத்தர், உதவியாளர் உள்ளிட்ட 2269 காலி பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சில நாள்களுக்கு முன்பு அறிவித்திருந்தது. இத்தேர்வை எழுத மாநிலம் முழுவதும் 6 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருந்தனர். தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டு அனைவருக்கும் வினியோகிக்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமை இத்தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வுக்காக 32 மாவட்டங்களில் 240-க்கும் மேற்பட்ட மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இத்தேர்வை கண்காணிக்கவும் மைய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...