Posts

Showing posts from June 30, 2013
ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூலை 1) கடைசி நாளாகும். ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் தேர்வுகளுக்கு இதுவரை தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப விற்பனை ஜூன் 17-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்டன. முதல் நாளிலேயே 1.48 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகின. இதையடுத்து, கடந்த இரண்டு வாரங்களில் 7.5 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளன. இதில் சனிக்கிழமை மாலை வரை சுமார் 5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க கடைசி நாளான திங்கள்கிழமை ஏராளமானோர் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் நேரில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.- Dinamalar அரசு” தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., ஆகிய இருஅமைப்புகளும், தமிழக அரசு துறைகளில்,புதிய நியமனங்களை செய்வதில், பெரும் பங்கை ஆற்றி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும், சராசரியாக, இரு அமைப்புகளும், தலா, 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்கும் பணியை செய்து வருகின்றன.நடப்பு ஆண்டிலும், வரும் செப்டம்பருக்குள், 30 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்புகளை வழங்குவதற்கான பணிகளில், இரு அமைப்புகளும், மும்முரமாக ஈடுபட்டுள்ளன. டி.என்.பி.எஸ்.சி.,: குரூப்-4 தேர்வு மூலம், 5,566 பேரை தேர்வு செய்ய, ஆகஸ்ட் 25ல், போட்டித்தேர்வை நடத்துகிறது. இந்த தேர்வை, 6 லட்சம் பேர் வரை எழுத உள்ளனர். இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில், 5,566 பேரும் நியமிக்கப்படுவர். இவர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் வரை, மாதச்சம்பளம் கிடைக்கும்.இதேபோல், சுகாதாரத்துறையில், 2,594 உதவி மருத்துவர்களை நியமனம் செய்ய, செப்ட