Posts

Showing posts from July 9, 2016
தமிழகத்தில் 4 நகரங்களில் ‘நெட்’ தகுதித் தேர்வு: ஜூலை 10ல் நடக்கிறது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான நெட் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் வருகிற 10ம் தேதி நடக்கிறது. அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணி, பி.எச்டி படிக்க இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித் தொகை பெற ‘நெட்’ தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் ஜூன், டிசம்பர் மாதங்களில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான முதல் தேர்வு வருகிற 10ம் தேதி நாடு முழுவதும் 88 முக்கிய நகரங்களில் நடக்கிறது. பொருளாதாரம், அரசியல் அறிவியல், உளவியல், சமூகவியல், வரலாறு, மானுடவியல், வணிகவியல், கல்வியியல், சமூகப்பணி மற்றும் தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், ஒடியா, பெங்காலி, மைதிலி, தெலுங்கு, உருது போன்ற மொழிகள் உட்பட 83 பாடங்களுக்கு நெட் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நான்கு நகரங்களில் நெட் தகுதித் தேர்வு நடக்கிறது. இத்தேர்வு மூன்று தாள்களை உள்ளடக்கியது. முதல் தாள் பொது அறிவு தொடர்பானது. இதில் 60 கேள்விகள் இடம