Posts

Showing posts from November 5, 2016
வாட்ஸ்ஆப் சேவை; சிலருக்கு சிக்கல்? சிம்பியான் ஆபரேட்டிங் சிஸ்டம் (ஓ.எஸ்) கொண்ட மொபைல் போன்கள் மற்றும் சில வகை போன்களில் வரும் டிசம்பர் 31க்கு மேல் வாட்ஸ் ஆப் சேவை கிடைக்காது. இதனை வாட்ஸ்ஆப் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் சில வகை ஸ்மார்ட் போன்களிலும் வாட்ஸ் ஆப் சேவை கிடைக்காது. வாட்ஸ் ஆப் சேவை துண்டிக்கப்படும் போன் வகைகள்: * சிம்பியான் பயன்படுத்தப்படும் மொபைல் போன்கள் * பிளாக்பெர்ரி ஓஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 * நோக்கியா எஸ்40 * நோக்கியா எஸ்60 * ஆன்டிராய்ட் வெர்சன் 2.1 மற்றும் 2.2 பயன்படுத்தப்படும் போன்கள் * வின்டோஸ் போன் 7.1 * ஆப்பிள் ஐபோன் 3 ஜிஎஸ் மற்றும் ஐஓஎஸ் 6 பயன்படுத்தப்படும் ஐபோன்களில் வாட்ஸ் ஆப் சேவை கிடைக்காது. உற்பத்தி நிறுத்தம்: நோக்கியா நிறுவனம் ஏற்கனவே சிம்பியான் கொண்ட மொபைல் போன் உற்பத்தியை நிறுத்தியுள்ள நிலையில், இன்னும் சிம்பியான் பயன்படுத்தப்பட்ட நோக்கியா ஈ6, நோக்கியா 5233, நோக்கியா சி5 03, நோக்கியா ஆசுா 306, நோக்கியா ஈ52 ஆகிய போன்கள் பயன்பாட்டில் உள்ளன.  போனை மாற்றுங்க: இது தொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தனது இணைய பக்கத்தில், இந்த வகை போன்கள், எங்
பிளஸ் 2, 10ம் வகுப்பு: 14 முதல் முன் அரையாண்டு சென்னை: 'பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 14 முதல், முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வுக்கு இடையே, பருவத் தேர்வு நடத்தப்படும். அரசு பள்ளிகளில், இந்த ஆண்டு முதல், பருவத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, முன் அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது.  இந்த தேர்வுக்கான வினாத்தாளில், அனைத்து பாடங்களிலிருந்தும் கேள்விகள் இடம் பெறும். அரசு பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வை சமாளிக்கும் வண்ணம், இந்த தேர்வு நடத்தப்படுகிறது. 'இந்த ஆண்டுக்கான முன் அரையாண்டு தேர்வு, வரும், 14ல் துவங்கி, 25 வரை நடத்தப்படும்' என, பள்ளிகளுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பி உள்ளனர்.
நாளை குரூப் 4 தேர்வு: நவீன கருவிகளுக்கு அனுமதி மறுப்பு குரூப் 4 தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதை எழுதுவோர் செல்லிடப்பேசி உள்ளிட்ட நவீன கருவிகளை எடுத்து வரக்கூடாது என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது. 5,451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 6) நடைபெறும் தேர்வை சுமார் 15 லட்சம் பேர் எழுதவுள்ளனர். இந்தத் தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்:- 301 மையங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கூட நுழைவு சீட்டை www.tnpsc.gov.in எனும் இணையதளத்தில் விண்ணப்ப எண்-பயனாளர் குறியீடு, பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால் அதற்கான காரணத்தையும் இணையதளத்திலேயே அறியலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது கணினியில் பதிவிறக்கம் செய்யும் முன்பு, பாப்-அப் எனும் நிலை அடைக்கப்பட்டிருந்தால் அதனை மாற்றி தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக் கூடத்துக்குள் நுழையும்போதும், அறைக் கண்காண