டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு
ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. கடந்த, 2013ல், நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. பின், தமிழக அரசு சலுகை மதிப்பெண் வழங்கியதால், மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று நடந்து முடிந்துள்ளது. இதிலும், சில மாதங்களுக்கு முன் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், ஆப்சென்ட் ஆனவர்கள் மற்றும் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, இன்று, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுவாக, சான்றிதழ் சரிபார்ப்பில், விடுபட்டவர்களுக்கு, மீண்டும், சென்னையில் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். தற்போது, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், ஆப்சென்ட் ஆனவர்கள் அதிகம் உள்ளதால், மே 13ம் தேதி, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில் நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. இதை, விடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Subscribe to:
Posts (Atom)
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...