Posts

Showing posts from January 13, 2015
பி.எட்., எம்.எட் வகுப்புகள் 2 வருடமாக உயர்த்தப்பட்டதால்புதிய பாடத்திட்டம் துணைவேந்தர் விஸ்வநாதன் பேட்டி பி.எட். மற்றும் எம்.எட். வகுப்புகள் ஒரு வருடத்தில் இருந்து 2 வருடங்களாகஉயர்த்தப்பட்டதால் இரு படிப்புக்கும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது என்று தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜி.விஸ்வநாதன் தெரிவித்தார். 2 வருடமாக உயர்த்தப்பட்டது கல்வித்தரத்தை உயர்த்துவதில் மத்திய அரசும் தமிழக அரசும் குறிக்கோளாக கொண்டு அதற்கேற்றபடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. கல்வித்தரத்தை உயர்த்துவதற்கு முதலில் ஆசிரியர்களின் கல்வித்தரம் உயர்த்தப்படவேண்டும் அதற்காக முதலில் ஆசிரியர் பயிற்சியை செம்மைப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி பி.எட். படிப்பை ஒரு வருடத்தில் இருந்து, 2 வருடங்களாகவும், எம்.எட். படிப்பை ஒருவருடத்தில் இருந்து 2 வருடங்களாகவும் சமீபத்தில் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் நிர்வாகத்திற்கும் பல்கலைக்கழக மானியக்குழு ஒரு கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் உடனடியாக உங்கள் கல்லூர