Posts

Showing posts from February 23, 2013
தமிழ் வழியில் தேர்வானவர்கள் பணிக்கு சேர்வதில் சிக்கல்! சிவகங்கை: ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில், வரலாறு உட்பட மூன்று பாடங்களில், தமிழ்வழி சிறப்பு ஒதுக்கீட்டில் தேர்வான, முதுகலை பட்டதாரிகள், பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.  அரசு துறைகளில் பணியில் சேர, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு, 20 சதவீத சிறப்பு ஒதுக்கீடு உள்ளது. கடந்த செப்டம்பரில், டி.ஆர்.பி., தேர்வில், அரசுப்பள்ளிகளுக்காக, 2000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களில், தமிழ் வழிக்கல்வி ஒதுக்கீட்டில், 100 க்கும் மேற்பட்டோர் தேர்வாகினர்.  தமிழகத்தில் இப்பாடங்களுக்கு தமிழ் வழியில் முதுகலை பிரிவு, ஒரு சில கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. அக்கல்லூரிகள் எந்த பல்கலை நிர்வாகத்தின் கீழ் வருகிறது, அரசு ஒப்புதல் உள்ளதா போன்ற உண்மைத் தன்மை குறித்த ஆய்விற்கு பிறகே, பணியில் சேர முடியும்.இதனால் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.  இந்தப் பாடங்களில் தேர்ச்சி பெற்றோர் கூறுகையில், "ஏற்கனவே விண்ணப்பத்தில் குறிப்பிட்ட படியும், சான்றுகளின் அடிப்படையிலும் தமிழ்வழி