Posts

Showing posts from April 18, 2017
ஏப். 23ல் 'செட்' தேர்வு: 60 ஆயிரம் பேர் பங்கேற்பு உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' நுழைவு தேர்வு, வரும், 23ல் நடக்கிறது. இதில், 60 மையங்களில், 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர, தேசிய அளவிலான, 'நெட்' அல்லது மாநில அளவிலான, 'செட்' தேர்வில், முதுநிலை பட்டதாரிகள் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல, பல்கலை மானியக்குழு விதிகள்படி, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பு முடித்தாலும், உதவி பேராசிரியர் பணியில் சேரலாம்.  இந்நிலையில், தமிழக அரசு நடத்தும் செட் தேர்வு, வரும், 23ல் நடக்கிறது. கொடைக்கானல், தெரசா மகளிர் பல்கலையால், தேர்வு நடத்தப்படுகிறது. சென்னையில், 12 மையங்கள் உட்பட, மாநிலம் முழுவதும், 60 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், 60 ஆயிரத்து, 189 பேர் பங்கேற்கின்றனர். மொத்தம், 25 பாடங்களுக்கு தேர்வு எழுதுகின்றனர்.  ஒவ்வொருவரும், மூன்று தாள்களுக்கு, 350 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுத வேண்டும். அவற்றில், முதல் இரண்டு தாள்களில், தலா, 40 மதிப்பெண்; மூன்றாவது தாளில், 75 மதிப்பெண், கட்டாய தேர்ச்சி மதிப்பெண்