11 April 2022

 புதுச்சேரியில் 1-9 ஆம் வகுப்புகளுக்கான இறுதி தேர்வு தேதி அறிவிப்பு..!



புதுச்சேரி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான இறுதி தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது.


புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அதன்படி, பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான இறுதி தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. 29-ந்தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. இந்த தேர்வுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



 ஆசிரியர் தகுதி தேர்வு பதிவு அவகாசம் 2 நாளில் நிறைவு



ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப பதிவு அவகாசம் நாளை மறுநாள் முடிகிறது. அவகாசத்தை நீட்டிக்க, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்பும் பட்டதாரிகள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம்.


இந்த தேர்வை ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்த வேண்டும். இந்த ஆண்டுக்கான தகுதி தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியான டி.ஆர்.பி., மார்ச் 7ல் அறிவித்தது. தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 14ல் துவங்கியது; வரும் 13ம் தேதியான நாளை மறுநாள் முடிகிறது.தேர்வு எழுத விரும்புவோர், இன்னும் இரண்டு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. பி.எட்., படித்த 50 ஆயிரம் பேருக்கு தேர்வு முடிவுகள் வர வேண்டியுள்ளது. அவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத வசதியாக, விண்ணப்ப பதிவுக்கான அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என, பட்டதாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.கட்டாய கல்வி உரிமை சட்டம் தமிழகத்தில் அமலான பின், தமிழக பள்ளிக்கல்வி துறையில் சேர்ந்த ஆசிரியர்கள் பலர், ஆசிரியர் தகுதி தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, அவர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்க வகையில், விண்ணப்ப காலத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்கியது




விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்கியது.விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும், தன்னார்வ பயிலும் வட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வெளியிடப்பட்ட தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் துவங்கியது.பயிற்சியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் பாலமுருகன் துவக்கி வைத்து, தேர்வுக்கு தயாராகும் வழிமுறை பற்றி பேசினார்.


முன்னாள் மாணவர்கள் தனசேகர், திவ்யா ஆகியோர் பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.முதல் நாள் நடந்த பயிற்சியில் 137 பேர் பங்கேற்றனர். பயிற்சி வகுப்பு வாரம் தோறும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நடைபெறும்.

  மக்கள் நல பணியாளர் மீண்டும் பணியில் சேர தயக்கம


திருப்பூர்:வேலை உறுதி திட்ட ஒருங்கிணைப்பாளர் பணியை மேற்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படுமென அறிவித்தும், பழைய மக்கள் நலப்பணியாளர் போதிய ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிவிட்டனர்.தேசிய வேலை உறுதி திட்டம் அறிமுகம் செய்யப்பட் போது, 2008ம் ஆண்டில், மக்கள் நலப்பணியாளர் நியமிக்கப்பட்டனர்.




இவர்கள், ஊராட்சி அளவில் நடக்கும், வேலை உறுதி திட்ட பணிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் பொறுப்பு வகித்தார்.அப்போது, பணியாளருக்கு, வருகை பதிவேடு விவரம் அடிப்படையில், சம்பளம் வழங்கப்பட்டது. அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கைகோர்த்து, மக்கள் நலப்பணியாளர் மூலம், லட்சக்கணக்கான பணத்தை சம்பாதித்தனர்.அ.தி.மு.க., அரசு, 2011ல் பதவியேற்றதும், மக்கள் நலப்பணியாளரை பணியில் இருந்து நீக்கியது. பணியாளர் ஒருவரை, பணித்தள பொறுப்பாளராக நியமித்தது. தொழிலாளரின் சம்பள விவரத்தை, 'ஆன்லைன்' மூலம் கணக்கிட்டு, வங்கி கணக்கில் வழங்கவும்உத்தரவிட்டது.தி.மு.க., அரசு பொறுபேற்றதும், மக்கள் நலப்பணியாளர் குறித்த விவரத்தை சேகரித்தது. இந்நிலையில், மீண்டும் மக்கள் நலப்பணியாளர் என்ற பெயரில் நியமிப்பதற்கு பதிலாக, வேலை உறுதி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் என்ற பணியிடத்தை தோற்றுவித்துள்ளது.தமிழகததில் உள்ள, பணி நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளருக்கு, முன்னுரிமை அளித்து, பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.




இருப்பினும், நிரந்தர பணியிடம் தோற்றுவிக்காததாலும், போதிய சம்பளம் நிர்ணயம் செய்யாத காரணத்தினாலும், மக்கள் நலப்பணியாளர் பெரும்பாலானோர், மீண்டும் பணிக்கு திரும்ப விரும்பவில்லை.மாதம், 5,000 ரூபாய் சம்பளம், ஊராட்சியின் இதர பணிகளை செய்ய, 2,500 ரூபாய் என, 7,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுமென அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இருப்பினும், 10 ஆயிரம் ரூபாய் வரை எதிர்பார்த்திருந்த, பழைய மக்கள் நலப்பணியாளர்கள் பலருக்கும், இதனால் அதிருப்தியே.




இதுகுறித்து மக்கள் நலப்பணியாளராக பணியாற்றியவர்கள் கூறுகையில், 'வேறு பணிகளை தேர்வு செய்து, மாதம்,15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தற்போது, சம்பாதிக்கிறோம். இனிமேல், மீண்டும் மக்கள் நலப்பணியாளராக பணியாற்ற, 15 ஆயிரம் ரூபாயாவது கொடுக்க வேண்டும்.ஊராட்சி பணியையும் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்; நிரந்தரமான பணி என்றும் கூறவில்லை. எனவே, 10 ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் பணிக்குதிரும்ப விருப்பமில்லை,' என்றனர்.

 ஆசிரியர் தகுதி தேர்வு - இறுதியாண்டு மாணவர்களுக்கு சலுகை



ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுத இறுதியாண்டு படித்துக்கொண்டு இருப்பவர்களும் அதற்கான சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 2022ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் மார்ச் 14 ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்த தேர்வினை எழுத ஏப்ரல் 13அஅம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


இந்நிலையில் ஆசிரியர் பட்டப்படிப்பு பிஎட் (b.ed), தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு (D.ted) இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பம் செய்வதில் சிக்கல் இருப்பதாக புகார் கிளம்பியது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு 2022 எழுத விரும்புபவர்களுக்கான கல்வித்தகுதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தாள்-2 கல்வித்தகுதிக்கு வரையறையில் பட்டப்படிப்பு முடித்து பிஎட் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் தகுந்த சான்றிதல் (Bonafide certificate) அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


அதேபோல் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 எழுத விரும்புபவர்கள் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு இறுதி ஆண்டு தொடக்கக் கல்வி பட்டய படிப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் Bonafide certificate அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பிஎட் இறுதி ஆண்டு மற்றும் தொடக்கக்கல்வி ஆசிரியர் கல்வி பட்டயபடிப்பு இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் Bonafide certificate அடிப்படையாகக் கொண்டு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.




  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...