Posts

Showing posts from March 21, 2013
மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்தஅனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு.  மார்ச் 21ஆம் தேதி தமிழக அரசுசட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்த துறை சார்ந்த அனைத்து விவரங்களும் தாயாற்படுத்தி வைத்து கொள்ளவும், பட்ஜெட் நடக்கும் நாளன்று அனைத்து இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் அவர்களின் அலுவவலக தலைமைஇடத்தில் இருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.   மேலும் பட்ஜெட் நடக்கும் நாட்களில் அலுவலர்கள், எவ்வித வெளி பயணம் மேற்கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி கல்விதுறைக்கு ரூ.16,965 கோடி  பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாகரூ.16,965 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.156.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பாதுகாக்க ரூ.880.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மண்வளம் மற்றும் நீர் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.