Posts

Showing posts from February 22, 2014
முதுகலை ஆசிரியர் வரலாறு பாடத்துக்கான தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கானதிருத்தப்பட்ட புதிய பட்டியலை TRB வெளியிட்டுள்ளது.  முதுகலை ஆசிரியர் வரலாறு பாடத்துக்கான தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கானதிருத்தப்பட்ட புதிய பட்டியலை TRB வெளியிட்டுள்ளது. கடந்த 3 ஆம் தேதி 2011-12 ஆண்டுக்கான வரலாறு,வணிகவியல்,பொருளாதர பாடத்துக்கான முதுகலை ஆசிரியர் தமிழ் வழி இடஒதுக்கீட்டுக்கான தேர்வர்கள் பட்டியலை டிஆர்பி வெளியிட்டது.  இதில் வராலாறு பாடத்துக்கான பட்டியலை மட்டும் டிஆர்பி வாபஸ் பெற்றது இதுகுறித்து டிஆர்பி தனது இணையதளத்தில் RESULT FOR TAMIL MEDIUM HISTORY IS WITHDRAWN FOR COMPUTER VERIFICATION. என தெரிவித்திருந்தது உரிய கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற சிலரது பெயர் விடுபட்டதே அதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே அது சரிசெய்யப்பட்டு . தற்போது 35 பேரடங்கிய திருத்தப்பட்ட புதிய பட்டியலை TRB வெளியிட்டுள்ளது.  இந்நிலையில் 2012 ல் தேர்ச்சிப்பெற்று காத்திருக்கும் தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் தேர்வுபெற்ற அனைவரும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக காத்திருக்கும் தங்களுக்கு அரசு விரைவில் பணி நியமனம் வழங்கவேண்டும் என எதிர்பார்க்
குரூப் - 4 முடிவு வெளியாவதில் கடும் இழுபறி: தேர்வெழுதிய, 12 லட்சம் பேரும், கடும் அதிருப்தி குரூப் - 4 தேர்வு முடிவு வெளியாவதில், ஏழு மாதங்களாக இழுபறி நீடித்து வருவதால், தேர்வெழுதிய, 12 லட்சம் பேரும், தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.,) மீது, கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். கடந்த ஆண்டு, ஆக., 25ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. 5,566 காலி இடங்களை நிரப்ப நடந்த தேர்வை, 12 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவு, டிசம்பருக்குள் ?வெளியாகும் என, தேர்வர் எதிர்பார்த்தனர்.தேர்வாணைய தலைவர், நவநீதகிருஷ்ணனும், "இதோ, விரைவில் வருகிறது... ஜனவரி இறுதிக்குள் ?வெளியிடுவோம்... பிப்ரவரியில் வந்துவிடும்' என, செல்லும் இடம் எல்லாம், பேட்டி கொடுத்தார்.  ஆனால், முடிவு மட்டும் வந்தபாடில்லை. இந்த மாதத்துடன், ஏழு மாதம் முடியப்போகிறது. ஆனாலும், தேர்வு முடிவு, எப்போது வரும் என, தெரியாத நிலை உள்ளது. இம்மாத இறுதிக்குள் வருவதற்கு வாய்ப்பு இல்லை எனவும்,மார்ச், 15 தேதிக்குப்பின் ?வெளியாக வாய்ப்பு உள்ளது எனவும், தேர்வாணைய வட்டாரம் தெரிவிக்கிறது.