Posts

Showing posts from June 15, 2022
Image
  நீட் 2022 தேர்வு விண்ணப்பத்தில் கரெக்‌ஷன் செய்யணுமா? தேர்வர்களுக்கு கடைசி வாய்ப்பு! 2022-ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தோர், விண்ணப்பத்தில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இவ்வருடத்துக்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், அதில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்றுதான் இந்த வசதி தொடங்கியிருக்கிறது என்றபோதிலும், இது நாளையுடன் முடிவடைகிறது. இரண்டு நாள்களுக்கு மட்டுமே இருக்கும் இந்த வசதி மூலம், விண்ணப்பத்தில் பிரிவுகள் ஏதேனும் தப்பாக கொடுத்தவர்கள் தாங்கள் கொடுத்த தரவுகளை மாற்றி அமைத்துக்கொள்ளலாம். விண்ணப்பத்தாரர்கள் எந்தப்பிரிவில் தவறான தரவை கொடுத்தாளர்களோ, அப்பிரிவில் தங்களின் சரியான தகவலை கொடுத்துவிட்டு, அதற்காக ஒரு ஆதார சான்றிதழை ஸ்கேன் செய்து அவர்கள் பதிவேற்ற வேண்டியிருக்கும். இச்சேவையை, neet.nta.nic.in என்ற தளத்தில் உள்ள பின்வரும் Category Correction Window வின் கீழ் இதை அவர்கள் சரிசெய்துகொள்ளலாம். நாளை இரவு 9 மணியுடன் இச்சேவை முடிவடைகிறது. இந்தச் சேவையை பயன்படுத்து
Image
  பள்ளிக் கல்வித்துறையில் 38,114 காலிப்பணியிடங்கள் : விண்ணப்பிக்க கடைசி தேதி..!!?? பள்ளிக்கல்வித்துறையில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 38,114 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத கல்வி அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இளநிலை மற்றும் முதுநிலை என 2 பிரிவுகளில் 38,114 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள இந்த பணிக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளிகளின் நிர்வாகம், மாணவர்களுக்கான புதிய திட்டங்கள், துறைசார்ந்த சர்வே திட்டங்களை செயல்படுத்துதல், விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களுடன் இணைந்து செயலாற்றுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்த கல்வி அலுவலர் பணிக்கு இளைஞர்களை தேர்வு செய்யும் தமிழ்நாடு கல்வி ஊக்கத் தொகை திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் இளநிலை, முதுநிலை ஆகிய இரண்டு பிரி
Image
  முதல்வர் ஸ்டாலின் உடன் தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குழு ஆலோசனை தமிழ்நாடுமாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து பேசினர். தமிழ்நாடு மாநிலத்திற்கென கல்விக் கொள்கையை உருவாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வு... "இம்முறை தேர்வை இப்படி தான் நடத்த வேண்டும்"... தேர்வு வாரியம் முடிவு..!!!! நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு கட்டமாக நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதுவரை எழுத்து தேர்வாக நடந்த தகுதித் தேர்வு இந்த முறை கணினி வழித் தேர்வாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முறையில் தேர்வு நடத்த ஏதுவாக கணினி வசதி உள்ள பள்ளி கல்லூரிகளை தேர்வு செய்யும் பணியில் TRB ஈடுபட்டுள்ளது. மேலும் சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கு பிரத்தியேக மென்பொருள்களை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
Image
  9,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்;ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? - TRB முடிவு! தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு(TET) கடந்த 14-03-2022 முதல் 13-04-2022 வரை, http://www.trb.tn.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் முன்னதாக அறிவித்திருந்தது. அதன்படி,இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.அதே சமயம்,தாழ்த்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பழங்குடியினருக்கு தேர்வு கட்டணம் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டது இதனிடையே,சர்வர் கோளாறால் விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர்.இதனைத் தொடர்ந்து,ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடந்த ஏப்ரல் 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில்,நடப்பு ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வானது வருகின்ற ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 9,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படவுள்ளது
Image
  ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஆசிரியர் தகுதித்தேர்வு? நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகளை நடத்தி நிரப்பி வருகிறது. இந்த தேர்வுகளில் மிக முக்கியமானது ஆசிரியர் தகுதித் தேர்வு. இந்த தேர்வு இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வாகும். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் ஆக விருப்பம் உள்ளவர்கள், கட்டாயம் இந்த தேர்வு எழுதி, தகுதி மதிப்பெண்ணைப் பெற்றிருக்க வேண்டும். மேலும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பி.எட் படிப்புகளை படித்துவிட்டு, ஏராளமானோர் இந்த தகுதித் தேர்வை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். ஆசிரியர் தகுத்தேர்வு எப்போது நடத்தப்படும் என எதிர்ப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளதாக தக
Image
  புதிய மாநில கல்விக்கொள்கை வடிவமைப்பு 13 பேர் கொண்ட குழுவினருடன் முதல்வர் இன்று ஆலோசனை; தலைமை செயலகத்தில் நடக்கிறது மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஒன்றிய அரசு அறிமுகம் செய்த புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழக அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு மாற்றாக மாநிலத்துக்கென பிரத்யேக கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி, மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின், உறுப்பினர்களாக சவீதா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எல்.ஜவகர் நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவன ஓய்வுபெற்ற பேராசிரியர் ராமானுஜம், மாநில திட்டக் குழு உறுப்பினர்கள் சுல்தான் இஸ்மாயில், ராம சீனுவாசன், யுனிசெப் முன்னாள் கல்வி நிபுணர் அருணா ரத்னம், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக்கலைஞர் ட