TET : 5% மதிப்பெண் தளர்வு தமிழக அரசு மேல்முறையீடு செய்கிறது. முதலமைச்சர் தனிப்பிரிவு மூலம் பெற்ற தகவல்.
ஆசிரியர் தகுதி தேர்வு 2013 தேர்வில் 60% தேர்ச்சி மதிப்பென்னாக வைத்திருந்தது பிறகு இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதன் மூலம் பலர் ஆசிரியர்களாக பனிநியமனம் பெற்றனர் பிறகு மதுரை உயர்நீதி மன்ற கிளை 5% மதிப்பெண் தளர்வுக்கு வழிவகை செய்யும் GO 25 அரசானையை ரத்து செய்தது. இதனை தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் இது வரை எந்த மேல்முறையீடும் செய்யாமல் இருந்தது இது குறித்து மதுரையை சேர்ந்த ஜெகன் என்பவர் தமிழக அரசிக்கு முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றை அளித்தார்.
12 October 2014
அரசு பள்ளியில் உதவியாளர் பணி பதிவு தகுதி சரி பார்க்க அழைப்பு
அரசு பள்ளிகளில், ஆய்வக உதவியாளர் பணிக்கான பரிந்துரை பட்டியலைதகுதியுள்ள பதிவுதாரர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்,' என, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:தஞ்சாவூர் மாவட்ட அரசு பள்ளிகளில் புதிதாக அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பணியிடங்களுக்கான கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.ஸி., தேர்ச்சி. வயது வரம்பு, 1.7.2014 நிலையில் முற்பட்ட வகுப்பினருக்கு, 30 வயதும், பி.சி., எம்.பி.சி., பிரிவினருக்கு, 32 வயதும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு, 35 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கல்வித்தகுதியாக மேல்நிலைக்கல்வி, மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்த ஓ.சி., பிரிவினரைத் தவிர்த்து, இதர பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான உத்தேச பரிந்துரை பட்டியல் மற்றும் பதிவு மூப்பு விவரங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. பரிந்துரைப் பட்டியலில் ஆதரவற்ற விதவைப் பிரிவைச் சேர்ந்த அனைத்து பதிவுதாரர்களும் முன்னுரிமை அற்ற பிரிவில், எஸ்.சி.ஏ., 3.2.1993, எஸ்.சி., 3.8.1984, பி.சி.எம்., 6.6.1991, எம்.பி.சி., 22.6.1988, பி.சி.,11.7.1984, ஓ.சி.,19.5.1986 தேதி வரை பதிவு செய்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.தகுதியுடையவர்கள் வரும், 15ம் தேதிக்கு முன் பரிந்துரைப் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பட்டியல் விடுபாடு திருத்தம் வேண்டுவோர், 15ம் தேதிக்கு முன், உரிய ஆவணங்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
3 ஆயிரம் வி.ஏ.ஓ., காலி பணியிடம் : மாநில பொதுச்செயலாளர் தகவல்
''தமிழகத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ., காலி பணியிடங்கள்உள்ளது,'' என கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வரன் கூறினார். ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: கடந்த 1982 முதல் 31 ஆண்டுகளாக வி.ஏ.ஓ., க்களாக பணியாற்றிய 400 பேருக்கு சிறப்பு ஆர்.ஐ., துணை தாசில்தார், தாசில்தார் என பதவி உயர்வு அளிக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 12 ஆயிரத்து 613 வி.ஏ.ஓ., பணியிடங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. ஓய்வின் அடிப்படையில் காலி பணியிடங்கள் மேலும் அதிகரித்து வருகிறது. 4 ஆண்டு பணி மூப்பு உள்ளவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பதவி உயர்வு ஒதுக்கீட்டை 60 சதவீதமாக அதிகரிக்க வேண்டும். மாநிலம் முழுவதும் அனைத்து வி.ஏ.ஓ., க்களுக்கும் ஒரே மாதிரியான பதவி அதிகாரம் வழங்க வேண்டும். பட்டா மாறுதல் உத்தரவு விதிமீறல் அதிகாரத்தை முறைப் படுத்த வேண்டும். ஓய்வு வயதை 60 ஆக உயர்த்த வேண்டும். பங்களிப்புடன் கூடிய புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களுக்கு வழங்குவது போல், கூடுதல் பணிக்கேற்ப சம்பளம் வழங்க வேண்டும். இதர துறை ஊழியர்களுக்கு வழங்கியது போல் தேர்தல் பணி சிறப்பு ஊதியம் வி.ஏ.ஓ.,க்களுக்கும் வழங்க வேண்டும். சங்க பிரதிநிதிகளுடன் அரசு கூட்டு கலந்தாய்வு நடத்தி, பிரச்னைகளை களைய வேண்டும், என்றார்.
Subscribe to:
Posts (Atom)
ஒரே நாளில் 1,231 நர்ஸ்கள் பணி நியமனம்.. மேலும், 2417 காலி பணியிடம் நிரப்பப்படும் - முதல்வர் ஸ்டாலின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம்...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...