26 November 2021

 சுமார் 11,000 காலி இடங்களுக்கு நடத்தப்பட்ட போலீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு. எந்த இணையதளத்தில் பார்ப்பது..?



கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற சீருடைப்பணியாளர் தேர்வில் தற்காலிகமாக தேர்வான நபர்களின் விவரம் வெளியாகி உள்ளது..



தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உள்ளூர் காவல் நிலையங்கள், ஆயுதப்படைகளில் காலியாக உள்ள 3,784 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்கள், சிறப்பு காவல்படையில் 6,545, சிறைத்துறையில் 119, தீயணைப்புத்துறையில் 1,311 என மொத்தம் 11,812 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு கடந்த ஜூலை மாதம் உடல்திறன் தேர்வுகள் நடத்தப்பட்டது..


 

இந்நிலையில் சீருடைப்பணியாளர் தேர்வில் தற்காலிகமாக தேர்வான நபர்களின் விவரம் உள்ளது.. 2020, 21 -ல் நடந்த எழுத்து தேர்வு, உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது..

3,065 பெண்கள், 3 மூன்றாம் பாலினத்தவர் உள்பட 11,812 பேரின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 3,845 பேர் ஆயுதப்படைக்கும், 6,545 பேர் சிறப்பு காவல் படைக்கும், 129 பேர் சிறைத்துறைக்கும், 293 பேர் தீயணைப்பு துறைக்கும் தேர்வாகி உள்ளனர்..

 கனமழை காரணமாக நாளை (27.11.2021) 14 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :



1. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி ) 


2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி , கல்லூரி ) 


3. புதுக்கோட்டை ( பள்ளி , கல்லூரி ) 


4. நெல்லை ( பள்ளி , கல்லூரி ) 


5. நாகை ( பள்ளி , கல்லூரி ) 


6. அரியலூர் ( பள்ளி , கல்லூரி ) 


7. பெரம்பலூர் ( பள்ளி , கல்லூரி ) 


8. காஞ்சிபுரம் ( பள்ளி , கல்லூரி ) 


9. திருவள்ளூர் ( பள்ளி , கல்லூரி ) 


10. தஞ்சாவூர் ( பள்ளி , கல்லூரி ) 


11. திருச்சி ( பள்ளி , கல்லூரி ) 


12. சென்னை ( பள்ளி , கல்லூரி ) 


13. ராமநாதபுரம் ( பள்ளி , கல்லூரி ) 


14. செங்கல்பட்டு ( பள்ளி , கல்லூரி ) 


புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



 தமிழகம் முழுவதும் மேல்நிலைப்பள்ளிகளில்.. ரூ.10,000 ஊதியம்.. அரசு அதிரடி உத்தரவு..!!!



தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,774முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் நிரப்ப பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கபடும் 2,774 பேருக்கு மாத ஊதியமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும், அதற்கான ஊதிய தொகையாக ஐந்து மாதங்களுக்கு ரூ.13.87 கோடி நிதி விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கனமழை காரணமாக இன்று (26.11.2021) 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :


* திருவாரூர் ( பள்ளிகளுக்கு மட்டும்) 


* தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரி ) 


* நெல்லை ( பள்ளி, கல்லூரி ) 


* புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி ) 


* ராமநாதபுரம் ( பள்ளிகளுக்கு மட்டும்) 


* விருதுநகர் ( பள்ளி, கல்லூரி ) 


* மதுரை பள்ளிகளுக்கு மட்டும்)


* அரியலூர் ( பள்ளி, கல்லூரி ) 


* திண்டுக்கல் ( பள்ளி, கல்லூரி ) 


* தேனி ( பள்ளி, கல்லூரி ) 


* தென்காசி ( பள்ளி, கல்லூரி ) 


* பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரி ) 


* சிவகங்கை ( பள்ளிகளுக்கு மட்டும்) 


* திருச்சி ( பள்ளிகளுக்கு மட்டும்) 


* தஞ்சை ( பள்ளி, கல்லூரி ) 


* மயிலாடுதுறை பள்ளி கல்லூரி


* நாகை பள்ளி கல்லூரி


* கடலூர் பள்ளிகளுக்கு மட்டும்


* கள்ளக்குறிச்சி பள்ளிகளுக்கு மட்டும்


* செங்கல்பட்டு பள்ளிகளுக்கு மட்டும்


* கன்னியாக்குமரி ( பள்ளி, கல்லூரி ) 


* சென்னை ( பள்ளி, கல்லூரி ) 


* காஞ்சிபுரம் (பள்ளிகளுக்கு மட்டும்)


* திருவண்ணாமலை பள்ளிகளுக்கு மட்டும்


*விழுப்புரம் (பள்ளி, கல்லூரி)


*திருவள்ளூர் ( பள்ளிகள் மட்டும்)


* புதுச்சேரி பள்ளி கல்லூரிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை





 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...