Posts

Showing posts from March 6, 2022
Image
 M.S.,Ph.D., படிப்புகளில் சேர. மார்ச் 31ஆம் தேதி கடைசி நாள்..!!! அண்ணா பல்கலைக்கழகத்தில் M.s., மற்றும் ph.d படிப்புகளில் சேர மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. சேர விரும்புவர்கள் https//cfr.annaunivedu என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். சென்னை, மதுரை, திருநெல்வேலி, கோவை ஆகிய 4 வளாகங்களில் கல்லூரிகளில் சேருவதற்கு உதவித்தொகை வீட்டு வாடகைப்படி உடன் சேர்த்து ரூ 31,000 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image
  ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ள பள்ளிகள் கணக்கெடுப்பு
  புதிய கல்வி கொள்கை தேர்வுக்கு தனி சான்றிதழ் புதிய கல்வி கொள்கைப்படி நடத்தப்படும் தேர்வுகளுக்கு தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது.மாநில பாடத் திட்டத்தில் படிக்கும் 10ம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தேர்வு அட்டவணையில் பிளஸ் 2 தொழில் கல்வி பாடப் பிரிவு மாணவர்களுக்கு மட்டுமின்றி மற்ற பிரிவு மாணவர்களுக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் தனியாக ஒரு தொழிற்கல்வி பாடத் தேர்வு நடத்தப்படுகிறது.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை அடிப்படையில் இத்தேர்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க உள்ளனர்.  தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தக் கூடாது என்ற அரசின் நிலைப்பாடு உள்ளதால் கூடுதலாக நடத்தப்படும் தொழிற்கல்வி பாடத்துக்கான மதிப்பெண்ணை பொது தேர்வு மதிப்பெண் பட்டியலில் சேர்க்க வேண்டாம் என்று பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. பொது தேர்வு சான்றிதழில் வழக்கமான முக்கிய பாடங்களின் மதிப்பெண் மட்டுமே இடம் பெற வேண்டும் என்றும் தொழிற்கல்வி பாடங்களின் மதிப்பெண்களை தனியே குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் பள்
Image
  TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு  TNPSC யில் கணக்கு வைத்துள்ளவர்கள் ஆதார் எண்ணை அந்த கணக்குடன் இணைப்பதற்கு கடைசி தேதி ஏப்ரல் 30 வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் தமிழ்நாடு அரசு சென்ற ஜனவரி 20 ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அது என்னவென்றால், தமிழ்நாடு அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பல துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகளை அறிவித்துள்ளது.மேலும் இந்த பிரிவில் சுமார் 5831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக கூறியுள்ளனர். இந்த தேர்வுகளுக்கு பதவிகளாக, நேர்முகத் தேர்வு கொண்ட குரூப் 2 தேர்வின் கீழ் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், சார் பதிவாளர், லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், குற்றப்பிரிவு சிறப்பு உதவியாளர் ஆகிய 116 பணியிடங்களும் நிரப்பிட உள்ளன. இந்த நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி, டிஎன்பிஎஸ்சியில் நிரந்தரப் பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைவர
Image
  உதவித்தொகைக்கான திறனறி தேர்வு: 1.73 லட்சம் பேர் பங்கேற்பு சென்னை:எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த திறனறி தேர்வில், பெரும்பாலான கேள்விகள் சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் இருந்து இடம் பெற்றன. நாடு முழுதும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, அவர்களின் குடும்ப பொருளாதார அடிப்படையில், உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்கும் வகையில், திறனறி தேர்வு நடத்தப்படுகிறது.மத்திய அரசின் சார்பில், மாநில அரசுகளே இந்தத் தேர்வை நடத்தி, மாணவர்களை தேர்வு செய்கின்றன. இதன்படி, தமிழகத்தில் 6,995 மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிதல் தேர்வு, 826 மையங்களில் நேற்று நடந்தது; 1.73 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.மனத்திறன் மற்றும் படிப்பறிவு திறன் ஆகிய இரண்டு வினாத்தாள்களில், 90 மதிப்பெண்களுக்கு கேள்விகள் இடம் பெற்றன. சிறந்த விடைகளை தேர்வு செய்யும் வகையில், கணினி வழி திருத்தம் செய்யும் விடைத்தாளில், இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வில் மொத்தம், 40 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவோர் தேர்ச்சி பெறுவர். நேற்றைய வினாத்தாளில், தமிழக பாட திட்டம் மற்ற
Image
  தமிழக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு தொடர்பாக முக்கிய அறிவிப்பு பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!!! தமிழகத்தில் கடந்த இரண்டு வருடமாக தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதனால் வருடந்தோறும் ஆசிரியர்களுக்கு நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு இரண்டு வருடங்களாக நடைபெறவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியதை தொடர்ந்து வழக்கம்போல பள்ளிகள் நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவிவருகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வு அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. அதனால் நடப்பு நிதியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பொது மாறுதல் குறித்த பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க சில நிபந்தனைகளையும் அறிவித்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் இடமாறுதல் பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு போன்றவை தொடங்கியது. இந்நிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு நடைபெற இ
Image
  சனிக்கிழமைகளில் சரியும் மாணவர் வருகை! - வார இறுதி நாட்களில் விடுமுறை அறிவிக்க கோரிக்கை! உலகம் முழுவதும் கொரானா பாதிப்பு காரணமாக பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது. பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளைக் காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி கற்பிக்கும் இனிய பொற்காலம் வீணாவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். இந்நிலையில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்களின் கற்றல் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் கல்வி கற்கும் நேரம் முழுவதும் வீணானது. இருப்பினும் தமிழகத்தில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இதன் வழியாக மாணவர்கள் ஓரளவிற்கு கல்வி கற்று வந்தாலும் பள்ளிச் சூழலில் கல்வி கற்பதை போன்று முழுமையான கல்வியை இதில் பெற முடியவில்லை, என்பதும் மாணவர்கள் சக நண்பர்களுடன் கலந்துரையாடி பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதும் இதன் மிகப் பெரிய குறையாகும். இரண்டாம் அலை பாதிப்பிலிருந்து மீண்டு 2021, செப்டம்பர் 1 ஆம் தேதியிலிந்து 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள
Image
  போட்டி தேர்வு பயிற்சி வகுப்பு துவக்க விழா நானும் உங்களை போல் மாணவியாக இருந்தேன்: கலெக்டர் நெகிழ்ச்சி பேச்சு காஞ்சிபுரம்: நானும், உங்களைப்போல் மாணயிவாக அமர்ந்து இருந்தேன். கடும் உழைப்புக்கு பின் இப்போது, இந்த இடத்தில் அமர்ந்துள்ளேன் என கலெக்டர் ஆர்த்தி நெகிழ்ச்சியடன் பேசினார்.காஞ்சிபுரம் மாவட்டம், வேலை வாய்ப்புத்துறை அலுவலகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் ஆர்த்தி கலந்து கொண்டு பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது. நானும் சில ஆண்டுகளுக்கு முன், உங்களைப்போல் மாணயிவாக அமர்ந்து இருந்தேன். கடும் உழைப்புக்கு பின் இப்போது, இந்த இடத்தில் அமர்ந்துள்ளேன். மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்வதில் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும். அந்த வகையில் மாணவர்கள், அவர்களது பள்ளி, கல்லூரி படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகள் ஆகியவற்றை பயன்படுத்தி, தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.மாணவர்களில் சிலர் குழுவாக ஒன்றிணைந்த