Posts

Showing posts from April 16, 2013
டி.இ.டி., தேர்வு அறிவிப்பு:  மாத இறுதிக்குள் வெளியீடு "டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்" என துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன. பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்" நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது.    இதைத்தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். ஆசிரியர் காலி இடங்கள் எண்ணிக்கை மற்றும் எப்போது தேர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.  இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இன்னும், 10 நாட்களுக்குள் வெளிவரும்" என, தெரிவித்தன. அறிவிப்பு வெளியானதும், ஒன்றரை மாத இடைவெளிக்குப்பின், தேர்வு நடக்கும்என, தெரிகிறது. எனவே, ஜூன் இறுதியில், தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது."அப்ஜ
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்துக்கு 10 மார்க் போனஸ் சிவகங்கை : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு கணித வினாத்தாளில் பகுதி1ல் 15 ஒரு மதிப்பெண் கேள்விகள்,பகுதி 2ல் 10 இரண்டு மதிப்பெண் கேள்விகள், பகுதி 3ல் 9 ஐந்து மதிப்பெண் கேள்விகள், பகுதி 4ல் 2 பத்து மதிப்பெண் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதில் பகுதி 3ல் கேட்கப்பட்ட 5 மதிப்பெண் கேள்விகள் ப்ளூ பிரிண்ட் அடிப்படையில் கேட்கப்படவில்லை. அதிலும் சில கேள்விகள் கடினமாக இருந்தன.  கட்டாயமாகஎழுத வேண்டிய 45வது கேள்வியில், பாடப்புத்தகத்தில் இல்லாத கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. இதையடுத்து கணிதத் தேர்வில் அதிகப்படியான மாணவர்கள் தோல்வியை தழுவும் நிலை ஏற்பட்டது. சென்டம் எடுப்பவர்கள் எண்ணிக்கையும் குறையும் என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.  இந்நிலையில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நேற்று துவங்கியது. இதில் கணித பாடத்திற்கு கொடுக்கப்பட்ட ‘ஆன்சர் கீயில்‘ 2 ஐந்துமார்க் வினாக்களுக்கு போனசாக 10 மார்க் கொடுக்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.  மொத்தம் எழுத வேண்டிய 9 கேள்விகளில் 7 கேள்விகள் சரியாக எழுதி, 2 கேள்வி