14 June 2014

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் காணலாம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டியது கட்டாயம். ஆசிரியர் தேர்வு வாரியம் பல முறை ஆசிரியர் தேர்வை நடத்தி உள்ளது. இந்த தேர்வு முன்பு அனைவருக்கும் பொதுவாக நடத்தப்பட்டது. சமீபத்தில் தனியாக சிறப்பு தேர்வு நடத்த வேண்டும் என்று பார்வையற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறன் கொண்ட பி.எட். படித்த பட்டதாரிகள் பேராட்டம் நடத்தினார்கள். இதையொட்டி அவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. முடிவு வெளியீடு அதன்படி கடந்த மே மாதம் 21ந்தேதி தமிழ்நாடு முழுவதும் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 4 ஆயிரத்து 477 பேர் எழுதினார்கள். இவர்களின் தேர்வு முடிவு நேற்று இரவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்ல தேர்வுக்கான கேள்வி பதிலும் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 933 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். சான்றிதழ் சரிபார்த்தல் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறந்த பாட நிபுணர்களால் விடை சரிபார்க்கப்பட்டு அதன் பின்னர் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று வி.ஏ.ஓ தேர்வு: 243 மையங்களில் 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெறவுள்ள கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) தேர்வினை 10 லட்சத்து 8 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். இதற்காக, மாநிலம் முழுவதும் 243 தேர்வு மையங்களில் 3 ஆயிரத்து 628 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. சில தேர்வுக் கூடங்கள் வெப்கேமிரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா தெரிவித்துள்ளார். இது குறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம் முழுவதும் உள்ள தேர்வுக் கூடங்கள் ஒளிப்பதிவு செய்யப்படும். மேலும், அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேர்வுக் கூடத்தின் நடவடிக்கைகளையும் கண்காணித்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலருக்கு அறிக்கை அனுப்ப வசதியாக, தேர்வுக் கூடத்துக்கு ஒரு ஆய்வு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தவிர்த்து, அனைத்து தேர்வு மையங்களையும் ஆய்வு செய்ய மாவட்ட வருவாய் அலுவலர், துணை ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அவர்களுக்கு இணையான பதவியில் உள்ள அலுவலர்களைக் கொண்டு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் சர்ச்சைக்குரிய தேர்வுக்கூடங்கள் அனைத்தும் வெப்கேமிரா மூலம் தேர்வாணைய அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படும். நன்கு கவனிப்பது அவசியம்: ஒரு மாவட்டத்தில் அல்லது தாலுகாவில் ஒரே பெயரைக் கொண்ட சில தேர்வுக் கூடங்கள் அமைந்துள்ளன. எனவே, விண்ணப்பதாரர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக் கூட முகவரியை நன்கு கவனித்து சரியான தேர்வுக் கூடத்துக்கு உரிய நேரத்தில் சென்றடைய வேண்டும். தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடம் குறித்து சந்தேகம் ஏதேனும் இருந்தால், தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக்கூட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். செல்போன், கால்குலேட்டருக்கு தடை: தேர்வு எழுதச் செல்லும் விண்ணப்பதாரர்கள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்லக் கூடாது. அவ்வாறு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது விடைத்தாள்கள் செல்லாததாக்கப்படும். தேர்வு எழுவதில் இருந்து விலக்கி வைக்கப்படுவர் என்று தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா எச்சரித்துள்ளார்.

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...