Posts

Showing posts from May 16, 2014
பாரதீய ஜனதா கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் கல்வி தொடர்பான சில முக்கிய அம்சங்கள்: *கல்வித்திட்டம்,ஆசிரியர்களுக்கான ஊதிய விகிதம் ஆகியவை, ஆய்வு செய்யப்பட்டு, மாற்றி அமைக்கப்படும் *தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அதிகளவில் ஏற்பட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் *பற்றாக்குறையை தீர்க்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் *அனைவருக்கும் கல்வி திட்டம் - சர்வ சிக்ஷ அபியான்' திட்டத்தை ஆய்வு செய்யவும், அன்றாட தகவல்களை பதிவு செய்யவும் புதிய அமைப்பு உருவாக்கப்படும். மேலும், கல்வியறிவின்மையை முற்றிலும் ஒழிக்கும் விதமாக, அனைவருக்கும் கல்வித் திட்டம் விரிவுபடுத்துவதுடன், வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் *இடைநிலை கல்வி, தனித்திறன் மேம்பாடு ஆகியவற்றை பரவலாக்கி, பள்ளிகள் வாயிலாக, கிராமப்புற, பழங்குடியின மற்றும் பிற சிக்கலான பகுதிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்படும் பள்ளிக் கல்வித்திட்டம் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, நாட்டின் தேவைக்கேற்ப, ஆற்றல் வாய்ந்த, மன அழுத்தம் இல்லாத, கவர்ச்சியான திட்டமாக மாற்றி அமைக்கப்படும் *பள்ளிக் கல்வியை தொடரவும், இறுதி செய்யவும், ப
ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிதாக வெயிட்டேஜ் வழங்கும் முறையை அரசு அறிவித்த பிறகே ஆசிரியர் நியமனம் ஆசிரியர் தகுதித் தேர்வில் புதிதாக வெயிட்டேஜ் வழங்கும் முறையை அரசு அறிவித்த பிறகே ஆசிரியர் நியமனம் இருக்கும் என தெரிகிறது ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்சரிபார்ப்பில் ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29,518 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு கடந்த ஜனவரியில் சான்றிதழ்சரிபார்ப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு, இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப்பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீத மதிப்பெண்சலுகை வழங்கப்பட்டது. மதிப்பெண் சலுகையையடுத்து, ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதலாக 43 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் தாளில்கூடுதலாக தேர்ச்சி பெற்ற 17 ஆயிரத்து 996 பேருக்கு மார்ச், ஏப்ரல்மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. இரண்டாம் தாளில் கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 25,196 பேருக்கு மே 6 முதல் 12 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. முதல் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 411