Posts

Showing posts from April 25, 2023
Image
  டி.என்.பி.எஸ்.சி. மூலம் மின் வாரியத்தில் 200 காலியிடங்கள் நிரப்ப ஒப்புதல் அதன்படி, பொதுத்துறை நிறுவனங்களில் வரும் மின்சார வாரியத்தின் காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட உள்ளன. அதற்கான அறிவிப்பை தமிழக அரசின் எரிசக்தி துறை அரசாணையாக வெளியிட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 107வது வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், 400 உதவி எலக்ட்ரிக்கல் என்ஜினீயர், 50 உதவி மெக்கானிக்கல் என்ஜினீயர், 60 உதவி சிவில் என்ஜினீயர், 600 எலக்ட்ரிக்கல் தொழில்நுட்ப உதவியாளர், 300 இளநிலை உதவியாளர், 8 ஆயிரம் கள உதவியாளர் என மொத்தம் 10 ஆயிரத்து 260 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.  அரசு கவனமாக பரிசீலித்து சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆணைகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,260 இடங்களில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி.யை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உடனடியாக அணுகும். மேலும் தமிழ்நாடு மின
Image
  பிளஸ் - 2 பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு... காரணம் இதுதான்? தமிழ்நாட்டில் மே 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் 13-ம் தேதி தொடங்கிய 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த 3-ம் தேதி நிறைவடைந்தன. இதற்கான தேர்வு முடிவுகள் மே 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, மே 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளதால் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வேறு தேதிக்கு மாற்ற பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வுக்கு முன்பாக தேர்வு முடிவுகள் வெளியானால் மாணவர்கள் மனதளவில் பாதிக்கப்படக் கூடும் என்பதால், இரண்டு நாட்களுக்குப் பிறகு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
Image
 'தினமலர்' நடத்தும் 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு: ஏப்., 30ல் கோவையில் நடக்கிறது தமிழக மாணவர்கள், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வில் வெற்றி பெறும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில், 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு, வரும் 30ம் தேதி கோவையில் நடக்கிறது.'தினமலர்' நாளிதழ் சார்பில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில், கல்வி சார்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 'நீட்' தேர்வு எழுத தயாராகும் மாணவர்களின் அச்சத்தை போக்கவும், அவர்களுக்கு வழிகாட்டும் வகையிலும், 'நீட்' மாதிரி தேர்வு கோவையில் நடத்தப்படுகிறது. 'தினமலர்' மற்றும் 'அலன்' நீட் பயிற்சி மையம் இணைந்து நடத்தும் இத்தேர்வு, கோவை, அவிநாசி ரோடு, பீளமேட்டில் உள்ள, பி.எஸ்.ஜி., பப்ளிக் பள்ளி வளாகத்தில், வரும் 30ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:15 வரை நடக்கிறது.'நீட்' தேர்வுக்கு தயார்படுத்திக் கொண்டிருக்கும் மாணவர்கள், தங்களை சுயமாக பரிசோதித்துக் கொள்ள இத்தேர்வை பயன்படுத்திக்கொள்ளலாம்; அனுமதி இலவசம். பங்கேற்க
Image
  வெளியானது உதவி வனப் பாதுகாவலர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்... பதிவிறக்கம் செய்வது எப்படி? உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாள் 13.12.2022-ன் வாயிலாக அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு வனப்பணி உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு (கணினி வழித் தேர்வு) மே 5 ஆம் தேதி முற்பகல் மட்டும் நடைபெற உள்ளது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் தேர்வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in-ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.