13 February 2014

15,000 பி.எட்., பட்டதாரி ஆசிரியருக்கு அரசு பணி வழங்க கோரி மனு. 

தமிழகத்திலுள்ள வேலையில்லா கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி (பி.எட்.,) ஆசிரியர்கள் 15,000 பேருக்கு பள்ளிகளில், அரசு பணிவாய்ப்பு வழங்க வேண்டும்" என தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த வேலையில்லா கம்ப்யூட்டர் சயின்ஸ் (பி.எட்.,) ஆசிரியர்கள், தஞ்சையைச் சேர்ந்த பாலமுருகன் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் நேற்று வந்தனர்.தொடர்ந்து இவர்கள் அளித்த மனுவை கலெக்டர் சுப்பையன் வேறு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்ததால், கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் பிரிவு அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர். 

மேற்கண்ட கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: தமிழகளவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி ஆசிரியர்கள் (பி.எட்.,) படிப்பு முடித்து விட்டு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள் வாழ்வாதாரம் பாதித்து, குடும்பம் நடத்த வழியின்றி தவிக்கின்றனர்.அரசு பள்ளிகளில் கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு உள்ளது. இவற்றில் போதுமான காலிப்பணியிடங்கள் இருந்தும், அப்பணியிடத்தில் வேலையில்லா பட்டதாரிகளை பணி நியமனம் செய்யாமல், காலம்தாழ்த்தப்பட்டு வருகிறது.

அதனால் போதுமான கம்ப்யூட்டர் அறிவு இல்லாமலேயே மாணவ, மாணவியரும் மேற்படிப்பை தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.ஸி., வரை தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடம் புதிதாக உருவாக்கப்படும் என, அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. 

ஆனாலும், பாடப்பிரிவை உருவாக்காமல் உள்ளனர். நடப்பு 2014-15ம் கல்வியாண்டு முதல், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தை பள்ளிகளில் கட்டாய பாடமாக அறிவித்து, வேலையின்றி தவிக்கும் 15 ,000 பட்டதாரி ஆசிரியர்களை (பி.எட்.,) அரசு பணியில் நியமிக்க வேண்டும். இத்தகைய கோரிக்கையை முதல்வர் ஜெ., நிறைவேற்றி, பணிவாய்ப்பின்றி தவிக்கும் 15,000பேர்களுக்கு, மறுவாழ்வு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
அரசு உதவி பெறும் பள்ளிகளை நாடும் தகுதித்தேர்வு தேர்ச்சியாளர்கள்- அரசுப் பள்ளிகளில் குறைந்த காலியிடங்கள் எதிரொலி.

அரசுப் பள்ளிகளில் நிரப்பப்பட வுள்ள ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகமாக இருப்ப தால், குறைந்த கட் -ஆஃப் மார்க் உள்ளவர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். 

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர, ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 12,596 பேரும், பட்டதாரி ஆசிரியர்கள் 14,496 பேரும்தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அண்மையில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணை 60 சதவீ தத்தில் இருந்து 55 சதவீதமாகக் குறைத்து அரசு உத்தரவிட்டது. இதன்படி, தேர்ச்சி பெற 150-க்கு 82 மார்க் பெற்றால் போதும். இதன்மூலம் இடஒதுக்கீட்டுப் பிரிவினரில் கூடுதலாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றிருப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

16 ஆயிரம் காலியிடங்கள் ஆனால், தகுதித்தேர்வு மூலமாக 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும், 14 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங் களையும் நிரப்ப அரசு திட்டமிட் டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, நிரப்பப்படவுள்ள ஆசிரியர் பணி யிடங்களுடன் ஒப்பிடும்போது, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களின் எண்ணிக்கை 2 மடங்கு அதிகம்.எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் வேலை உறுதி கிடையாது. 

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களைப் பொறுத்தவரையில் 14 ஆயிரம் காலியிடங்கள் என்றாலும், பாடவாரியான காலியிடங்கள் இன்னும் தெரியவில்லை. பாடவாரியான காலியிடங் களும், ஒவ்வொரு பாடத்திலும் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றுள்ள னர் என்ற பட்டியல் தெரிந்த பின்னரே , வேலை உறுதியா? இல்லையா? என்பதை அறிய முடியும். 

ஒருசில பாடங்களில் காலியிடங்கள் இருக்கக்கூடும்,ஆனால், தேர்ச்சி பெற்றவர்கள் தேவையான அளவு இருக்க மாட்டார்கள். அதேபோல், ஒருசிலவற்றில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருப்பார் கள். காலியிடங்கள் குறைவாக இருக்கலாம். 

இந்த நிலையில், கட்- ஆஃப் மார்க் குறைவாக இருப்பவர்கள் தங்களுக்கு அரசுப் பள்ளிகளில் வேலை உறுதி இல்லை என கருதுவதால், அரசு உதவி பெறும் பள்ளிகள் பக்கம் பார்வையைத் திருப்பத் தொடங்கியுள்ளனர். இதற்காக உதவி பெறும் பள்ளிகளுக்குச் சென்று காலியிடங்கள் குறித்த விவரங்களையும் அறிந்த வண்ணம் உள்ளனர்.
டி.இ.டி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களே (முதல்தாள்)ஆசிரியர்குரலின் வேண்டுகோள்:

1.அருகில் உள்ள அரசுபள்ளிக்கு செல்லுங்கள்,அங்கு ஆசிரியர் மாணவர் விகிதத்தை பாருங்கள். 
2.உங்களுக்கு அதிர்ச்சியாயிருக்கும்.பரவாயில்லை. 
3.அந்த தலைமையாசிரியருடன் பேசுங்கள். 
4.இம் மாதம் முதல் அப்பள்ளிக்கு சென்று மாணவர் சேர்க்கை உயர்த்த உதவி செயுங்கள். 
5.மாணவர் சேர்க்கை இருந்தால் மட்டுமே உங்களுக்கு பணி. 
6.இது சிறிய ஆலோசனை ,இருப்பினும் ஒவ்வோர் பள்ளிக்கும் ஓரிருவர் ஆர்வம் காட்டினால் இந்த எண்ணம் வெற்றியாகும். வாழ்த்துக்கள்!
"டெட்' தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி: 60 ஆயிரம் பேரின் நிலை என்ன?-தினமணி

அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 15 ஆயிரம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களே உள்ளதால் மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர்களாகும்தகுதியை மட்டுமே பெற்றுள்ளனர். இப்போது பணி நியமனம் செய்யப்படுபவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனங்களில் முன்னுரிமை கிடைக்கும். மேலும் அடுத்த ஆண்டுக்கான பணி நியமனத்திலும் இவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

 இப்போது தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் பேருக்கு முதலில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகே, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

 இந்த ஆண்டு நியமிக்கப்படும்15 ஆயிரம் ஆசிரியர்களைத் தவிர மீதமுள்ளவர்களின் நிலை என்ன என்று தேர்வர்கள் சந்தேகம் எழுப்பினர். இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராவதற்கானஅடிப்படைத் தகுதி மட்டுமே. 

அந்த வகையில் இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும்தகுதியைப் பெற்றுள்ளனர். முதலில் இவர்களுக்கு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். பிறகு, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும். அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பணி நியமனம் கோரி ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். 

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஆண்டு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். 

இடைநிலை ஆசிரியர்கள்: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டயப் படிப்பு அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். தகுதியான விண்ணப்பதாரர்களில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் போக, எஞ்சியவர்கள் தேர்வு செய்யப்படாதவர்களாகக் கருதப்படுவர். 

இவர்கள் அனைவரும் அடுத்து நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தங்களது மதிப்பெண்ணை அதிகரிப்பதற்காகஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம். அதேநேரத்தில், ஒரு தேர்வில் பெற்ற தேர்ச்சி ஏழரை ஆண்டுகளுக்குச் செல்லும் என்பதால், அடுத்து வரும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கும் இவர்கள் விண்ணப்பிக்கலாம். 

அதோடு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனம் பெறுவதற்கான தகுதியையும் இவர்கள் பெறுவார்கள். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் என்பது அப்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் அடிப்படையில் இருக்கும். 

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது பணி நியமனத்துக்காக விண்ணப்பிக்கும்தகுதியை மட்டுமே வழங்கும். பணி நியமனத்தை வழங்காது. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. 

இந்த வழக்குகள் முடிந்த பிறகு, இதுகுறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த 2012 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. 

எனவே, இதில் ஆசிரியர் தேர்வு, தேர்ச்சி பெற்றவர்களின் நிலை போன்ற பிரச்னைகள் எழவில்லை. இப்போது 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதையடுத்து 46 ஆயிரம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் இப்போது 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...