5 February 2014

இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போதைய நிலையே தொடர வழக்கு.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 

3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது. பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் , இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் அறிவிக்கப்பட்டது.

 இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் தற்போதைய நிலையே தொடர வழக்கு மனுதாக்கல் செய்திருந்தார். 

அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: தொழில் பிரிவு மாணவர்களுக்கு பிராக்டிகல் தேர்வு மூலமே 400 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதனால்பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் . 

எனவே இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்தில் தற்போதையநிலையே தொடரவேண்டும் எனவும் வெயிட்டேஜ் முறையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் செய்யவேண்டும் எனக்கூறும் அரசணை 252 ஐ இரத்து செய்திட வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இன்று (05.02.2014) நீதியரசர் சுப்பையா முன் மனு விசாணைக்கு வந்தது.மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் விஜயன் ஆஜரானார்.வழக்கினை இன்று விசாரித்த நீதிபதி சுப்பையா இது குறித்து அரசின் பதிலை தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு. 

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் திரு.ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் திரு.சத்தியநாரயணன் அடங்கிய முதன்மை அமர்வில் முதல் வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது.

 இந்த வழக்கின் ரிட் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த ஒருங்கிணைப்பாளர்கள், அரசின் எதிர் மனு தாக்கலால் இந்த முடிவு ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என சமாதானம் அடைந்தனர். எனினும் வழக்கில் வெற்றியடைவதே நோக்கம் என்ற குறிக்கோளுடன் உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வரும் வாரத்தில் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
May be 76000 Tet candidates passed? - Dinamalar

புதிய தேர்வர்களுக்கு இந்த மாத இறுதியில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என்றும், புதிய ஆசிரியர் நியமனம் இப்போதைக்கு இல்லை என்றும் தினமலர் செய்திதாள் செய்தி வெளியிட்டுள்ளது. இதுபோன்ற பல்வேறு குழப்பங்கள் நிலவி வரும் சூழ்நிலையில் இதுகுறித்து டி.ஆர்.பி தெளிவான பதிலை விரைவில் வழங்க வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்க்கின்றனர். 
Source Dinamalar and www.padasalai.com
ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதியானவர்களுக்கு பணி நியமன உத்தரவு எப்போது?

ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுடன், தற்போது மதிப்பெண் சலுகை மூலம் புதிய பட்டியலில் இடம்பிடிப்பவர்களின் சான்றிதழ்களும் அடுத்த இரு வாரங்களுக்குள் சரிபார்க்கப்பட்டு முடிக்க விரைவானநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .

பின்னர் வேலை நியமன உத்தரவு தயாரிக்கப்பட்டு பாடம் வாரியாக இந்த கல்வி ஆண்டிலேயே ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட உள்ளவர்கள் விபரம் அறிவிக்கப்படும். இவர்கள் அனைவருக்கும் வரும் 24ம் தேதி (ஜெயலலிதா பிறந்த நாள்) முதல்வர் கையால் சென்னையில் வைத்து ஆசிரியர் பணி நியமன உத்தரவு வழங்கப்படலாம் என தெரிகிறது. 

கடந்த 2012ம் ஆண்டு நடந்த தேர்வில் எஸ்சி., எஸ்டி பிரிவில் அதிக தேர்வர்கள் தேர்ச்சி பெற வில்லை. இதனால், அவர்கள் பிரிவில் 400 காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. தற்போது இடஒதுக்கீடு பிரிவினருக்கு சிறப்பு வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்பிரிவினருக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்க வழி ஏற்பட்டுள்ளது. Source Dinakaran
முதுகலை பட்டதாரி தமிழ் பணி நியமனம் எப்போது? பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்.

தற்போது சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட .முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எப்போது பணி நியமன ஆணை வழங்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம் அளித்தார். பள்ளிக்கல்வித்துறையை பொருத்தவரையில், ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்த்ஹு தெரிவு பட்டியல் கிடைக்கப் பெற்ரதும் அரசுடன் ஆலோசித்து கல்ந்தாய்வு உள்ளிட்ட பணி நியமன ஆணை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார் தற்போது நிரப்பப்படவுல்ல 2881 காலியிடங்களும் 2011-12 ஆம் கல்வியாண்டுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு. 

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. 

அதில் இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமேதகுதியானது எனவும் இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

 ஒரு வருட பட்டம் சார்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது. தீர்ப்பு நகல் நாளை மறுநாள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்தீர்ப்பு சார்பான முழு விவரம் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது
ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கோரிய மனுக்கள் தள்ளுபடி. ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் சலுகை கேட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. பழனிமுத்து, கருப்பையா, ரமேஷ் உள்ளிட்டோர் இதுதொடர்பாக மனு தாக்கல் தெய்திருந்தனர். தேசிய ஆசிரியர் கல்வி வாரிய விதிகளின்படி மதிப்பெண்ணில் சலுகை கோரி அவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். பிறமாநிலங்களைப் போல தமிழகத்திலும் சலுகை வேண்டும் என அவர்கள் கோரியிருந்தனர்.
இரட்டைப்பட்டம் தீர்ப்பு இன்று உறுதி இரட்டைப்பட்டம் வழக்கின் தீர்ப்பு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் முதலில் வருகிறது. எனவே தீர்ப்பின் முழு விபரம் காலை 11.00 மணியளவில் தெரியவரும்.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...