TNTET- வேண்டும் பதிவுமூப்பு -தினமலர்
டி.இ.டி., தேர்வை எதிர்த்து, கோர்ட்டில், மேல் முறையீடு சம்பந்தமாக, தேர்வர்கள் வழக்கு தொடர்வது, கின்னஸ் சாதனையின் உச்சிக்கே சென்று விட்டது.டி.ஆர்.பி., அலுவலகத்தில், பஞ்சாயத்து தீர்ப்பதற்கு என்றே, ஒரு பிரிவை திறந்து, இது தொடர்பாக வரும் தேர்வர்களுக்கு, பதில் சொல்வதற்கென்றே, 100 பேரையாவது நியமிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
தமிழகத்தில் மட்டும் தான், இத்தேர்வு முறை வகுக்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில், 20, 15 ஆண்டுகள் என, பதிந்து, ஓய்வில்லாமல் அலைந்து சென்றவர்களுக்கு, குறைந்தபட்ச, 'போனஸ் மார்க்' போட, தமிழக முதல்வர், கண்டிப்பாக கருணை காட்ட வேண்டும். அண்டை மாநிலங்களில் எல்லாம், பதிவு மூப்பிற்கு, மார்க் போடுகின்றனர்.டி.இ.டி., தேர்வுமுறை வழிவகுத்த குழுவில், ஆசிரியர்களை, அதாவது அனுபவமிக்கவர்களை சேர்த்து, அவர்களின் மேலான ஆலோசனைகளையும் ஏற்று, தேர்வில், பதிவு மூப்பிற்கும் மார்க் பதிவு செய்ய வேண்டும்.
11 May 2014
உதவி பேராசிரியர் பணி நியமனம்: அரசாணை வெளியிட கோரிக்கை
--- தின மலர் நாளேடு
"உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணிக் காலத்திற்கும், மதிப்பெண் வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் நிர்வாகிகள், உயர்கல்வித்துறை செயலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.
அதற்கான தகுதிகளாக, யு.ஜி.சி., "நெட், ஸ்லெட்' தேர்ச்சி மற்றும் பி.எச்.டி., பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏதேனும் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தால், அப்பணிக் காலத்திற்கு, ஆண்டுக்கு, இரண்டு மதிப்பெண் வீதம், 15 மதிப்பெண் வழங்கப்படுகிறது. பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவிப் பேராசிரியர் தகுதியான, யு.ஜி.சி., "நெட், ஸ்லெட்' மற்றும் பி.எச்.டி., போன்றவற்றை முடித்துள்ளனர். ஆனால், அவர்களால், உதவிப் பேராசிரியர் பணிக்கு, செல்ல முடியவில்லை. ஏனெனில், அவர்களின் பணிக்காலம், கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவதில்லை. எனவே, அவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு, தகுதி பெற்ற காலம் முதல், அவர்களின் பணிக்காலத்திற்கு, ஆண்டுக்கு, இரண்டு மதிப்பெண் வழங்க வேண்டும். இதற்கான தனி அரசாணையை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, தமிழக தமிழாசிரியர் கழகம் சார்பிலும், மனு கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு; 20 ஆயிரம் இடங்கள் "போணி' ஆகுமா?
-- தின மலர் நாளேடு
இரண்டாண்டு, ஆசிரியர் பயிற்சி படிப்பில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 20 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு, வெறும், 9,000 பேர் தான், இந்த படிப்பில் சேர்ந்தனர். இதனால், இந்த ஆண்டு, ஆசிரியர் பயிற்சி இடங்கள், பெரிய அளவிற்கு, "போணி' ஆகுமா என, தெரியவில்லை.
மோகம் குறைந்துவிட்டது பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, "காஸ்ட்லி'யான படிப்பாக, ஆசிரியர் பயிற்சி படிப்பு இருந்தது. தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 3 லட்சம் ரூபாய் வரை, இடங்களை விற்றனர். அந்தளவிற்கு, ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, முட்டி மோதினர். கடந்த, ஐந்து ஆண்டுகளில், எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையிலான பணி நியமனம் மாறி, மாநில பதிவு மூப்பாக மாறியது. தற்போது, ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயமும் வந்துவிட்டது. முக்கியமாக, அரசு ஆரம்ப பள்ளிகளில், வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது. இடைநிலை ஆசிரியர் நியமனம், மிக குறைவாக நடக்கிறது. இதனால், இந்த படிப்பு மீது, மாணவர் மத்தியில், மோகம் முற்றிலும் குறைந்துவிட்டது.
50 பள்ளிகள் மூடல் : இதனால், ஆண்டிற்கு, 10 ஆயிரம் பேர் தான், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்கின்றனர். "போணி' ஆகாத, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு, 50க்கும் அதிகமான பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதுபோன்ற சூழலில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்காக, வரும், 14ம் தேதி முதல், ஜூன், 2ம் தேதி வரை, முதன்மை கல்வி அலுவலகங்களில், விண்ணப்பம் வழங்கப்படும் என, இயக்குனரகம் அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும், 37, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் உள்ளன. மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகள், 42, தனியார் பள்ளிகள், 400ம்
உள்ளன. அனைத்துப் பள்ளிகளிலும் சேர்த்து, அரசு ஒதுக்கீட்டின் கீழ், 6,000 இடங்கள் உள்ளன. மொத்த இடங்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இந்த இடங்கள், எந்தளவிற்கு, "போணி'
ஆகும் என, தெரியவில்லை.
"சீட்' கிடைக்க வாய்ப்பு : கடந்த ஆண்டு, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என, அனைத்திலும் சேர்த்து, வெறும், 9,000 மாணவர்கள் தான், ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்ந்தனர். இதில், அரசு பள்ளிகளில், 2,100 பேர் சேர்ந்தனர். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு, சேர்க்கை குறையுமா, அதிகரிக்குமா என, தெரியவில்லை. எனினும், சேரும் மாணவர்களில், பெரும்பாலானோருக்கு, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தாராளமாக, "சீட்' கிடைக்க வாய்ப்பு உள்ளது.
Subscribe to:
Posts (Atom)
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...

-
பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் பணிநிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் சென்னையில் உண்ண...
-
அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இட...
-
விஏஓ உள்பட 3935 காலி பணியிடங்கள் குரூப் 4 தேர்வுக்கு போட்டி போட்டு விண்ணப்பம்: வகுப்பு சான்றிதழ் பதிவு குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கம் விஏஓ...