Posts

Showing posts from December 23, 2022
Image
  ஓராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்ப திட்டமா?.. டிஎன்பிஎஸ்சி விளக்கம்..! அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணை தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023 ஆம் ஆண்டிற்கான போட்டித் தேர்வுகளின் அட்டவணை வெளியிட்டதில். ஓராண்டு முழுவதும் 10 தேர்வுகள் மூலம் 1,754 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படவுள்ளன என சமூக ஊடகங்களிலும் சில பத்திரிக்கைகளிலும் வெளிவந்துள்ளது. ஊடகங்களில் வெளியான தகவல்கள் முழுமையாக இல்லாததால், தவறான புரிதலுக்கு வழிவகுக்கும் நிலையில், அவற்றை மறுத்து, பின்வரும் விவரங்கள் வெளியிடப்படுகின்றன.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வோர் ஆண்டும் பல்வேறு துறைகளிலிருந்து நேரடி நியமனத்திற்காக பெறப்படுகின்ற காலிப் பணியிடங்களுக்கான மதிப்பீடுகளின் அடிப்படையில், போட்டித் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு வருகிறது. ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்பட்ட இந்த அட்டவணை முதற்கட்டமாக தகவல்களை அளிக்கும் அட்டவணையாகும். இது தொடர்ந்து கூடுதல் பணியிடங்களுக்கான கேட்புகள் பெறப்படப்பட அட்டவணையில் சேர்த்து
Image
  பொறியியல் பட்டத்துடன் பி.எட்- பட்டதாரி ஆசிரியராக நியமிக்க உத்தரவு தமிழக அரசு அறிவிப்பின்படி பொறியியல் பட்டம் பெற்று பிஎட் படித்ததுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவரை பட்டதாரி ஆசிரியராக நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2015-ம் ஆண்டு தமிழகத்தில் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வழிகாட்டுதல்படி, பொறியியல் பட்டதாரிகளும் பிஎட் படிக்கலாம் என்றும், ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற உரிய பாடப்பிரிவுகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவர் என தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 2015-17 காலகட்டத்தில் பிஎட் கணிதம் படிப்பில் சேர்ந்து, ஆசிரியர் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்ற சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ஏ.ராக சைனி பிரியா, பொறியியல் முடித்து பிஎட் முடித்தவர்களை கணக்கில் கொள்ளாமல், பிற இளநிலை கலை, அறிவியல் பாடங்களில் பிஎட் முடித்தவர்களையே பட்டதாரி ஆசிரியர்களாக நியமித்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த
Image
  கொரோனா காலத்தில் 'ஆல் பாஸ்' அறிவிக்கப்பட்ட நிலையில் 10ம் வகுப்பு மதிப்பெண் கேட்கும் தேசிய தேர்வு முகமை ஜெஇஇ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல்: தமிழக மாணவர்கள் கடும் அவதி ஜெஇஇ என்னும் நுழைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண்கள் பதிவிட வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிதுள்ளதால் தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள என்ஐடி, ஐஐடி ஆகிய ஒன்றிய தொழில் கல்வி நிறுவனங்களின் மூலம் நடத்தப்படும் பிஇ, பிடெக், பிஆர்க், பிபிளான் படிப்புகளில் மாணவ மாணவியர் சேர்ந்து படிக்க ஜெஇஇ என்ற ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த தேர்வு நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. அதில் முதன்மைத் தேர்வு, சிறப்பு தேர்வு என்ற அளவில் இரண்டாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடத்தப்படுகிறது.  இந்த தேர்வின் மூலம் மாணவர்களின் மன அழுத்தம் குறைவதாக கூறப்படும் நிலையில், அந்த தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் தான் அவர்களுக்கான இடங்களை பெற தகுதியாக இருக்கிறது. இதற்காக மாணவ மாணவியர் மேற்கண்
Image
  தனியாரிடம் அரசு பணிகளை ஒப்படைக்கும் அரசாணை: ரத்து செய்ய சங்க நிர்வாகிகள் கோரிக்கை தனியாரிடம் அரசு பணிகளை ஒப்படைக்க வெளியிட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் 'டி' பிரிவு பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.மதுரம், அகில இந்திய சங்க தலைவர் கணேசன் ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கவுரவ தலைவர் எஸ்.வெங்கடேசலு, பொதுச்செயலாளர் எஸ்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் வருமாறு: தமிழகத்தில் ஏழை, எளிய, மிகவும் தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் குழந்தைகள் வேலைவாய்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.  இதுபோன்ற லட்சோப லட்சம் இளைஞர்களின் கனவை பொய்பிக்கும் வகையில் தற்போது டி மற்றும் சி பிரிவு பணியாளர்களை தனியார்மயம் ஆக்கும் விதமாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்துவிட்டு, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Image
  ஆசிரியர் தகுதி தேர்வு.. சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.. மொத்தம் 21,543 பேர் தேர்ச்சி.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!!!! தமிழகத்தில் ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு கடந்த அக்டோபர் 14 முதல் 19ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழை trb.tn.nic.in என்ற இணையதளத்தில் மூன்று மாதம் வரை பதிவிறக்கம் செய்யலாம். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர அரசு நடத்தும் போட்டி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.