Posts

Showing posts from August 19, 2014
TNTET : ஆசிரியர்கள் நியமனத்தில் 5சதவீத மதிப்பெண் விவகாரம்: ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு நோட்டீஸ்-Dinamani News ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். மனு விவரம்:ஆசிரியர்களை தேர்வு செய்யும் விதிமுறைகளை தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (என்ஜிடிஇ) வகுத்து உள்ளது. இதன்படி தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வுகளை நடத்துகிறது. இதில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்கள், பிற்பட்ட மற்றும் மிகவும் பிற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 5 சதவீத சலுகை மதிப்பெண் மதிப்பெண் வழங்கப்படுகிறது. மேலும், கல்வித்தகுதி அடிப்படையில் கூடுதலாக வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த முறையில் 2013 ஆக.17 மற்றும் 18ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர்களுக்கான தகுதிகளை மட்டுமே நிர்ணயிக்க மத்திய அரசு என்
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள், பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை; உயர்நீதிமன்றம் ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மேலும் தொடரப்பட்ட புதிய அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக கருதி செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்கு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். மேலும் பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை.பணிநியமனம் அனைத்தும் வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது.
11 ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்.!!! 11ஆயிரத்து 900 ஆசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளனர் என்று பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் கூறினார். சபிதா பேச்சு: தஞ்சையில் நடந்த 5 மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் சபிதா பேசியதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா தரமான கல்வியை வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகள் முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். மேலும், ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உத்தரவிட்டு கடந்த மூன்று ஆண்டுகளில் 53 ஆயிரத்து 288 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில்11ஆயிரத்து 900 ஆசிரிய ஆசிரியைகள் நியமனம் செய்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவினை வழங்க உள்ளார். மாணவர்கள் கல்வி இடைநிற்றல் தவிர்க்கும் பொருட்டு ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். தரம் உயர்வு: 1200 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 42 தொடக்கப்பள்ளிகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத் தொகையும், விலையில்லா மடிக்கணினியும் வழங்க
TET ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் - உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கைது... ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி தொடர் உண்ணாவிரதம். இரவிலும் போராட்டம் தொடர்வதால் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு. போராட்டத்தை கைவிட போராட்டக்காரர்கள் மறுப்பதால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்படும் நிலை. source Thanthi TV
TET வெயிட்டேஜ் முறைக்கு எதிர்ப்பு: பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் உண்ணாவிரதம்-puthiyathalaimurai பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். கல்வி முறையில் ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றம் காரணமாக மதிப்பெண் விகிதத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக பட்டதாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதனால், தகுதித்தேர்வில் 90க்கும் அதிகமா‌ன மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக பதவி கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குறை கூறினர். புதிய அரசாணையின்படி, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், 12ம் வகுப்புக்கு 10, பட்டப்படிப்பிற்கு 15, பி.எட் படிப்பிற்கு 15, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 60 என்கிற ரீதியில் மொத்தம் 100 மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. இந்த முறையால், தகுதித்தேர்வில் 90க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், பள்ள