Posts

Showing posts from February 27, 2014
சென்னை உயர்நீதிமன்றத்தில் TET PAPER I & II வழக்குகள் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன . சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ளTRB அனைத்து வழக்குகளும் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டன. மார்ச் மாதம் நீதிபதிகள் சுழற்சி முறையில் மாறும் காரணத்தால் வேறு புதிய நீதிபதி வழக்கினை விசாரிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கும் மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை கேட்டு வழக்கு தாக்கல் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு-Dinathanthi  2012–ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு, தகுதி மதிப்பெண்ணில் 5 சதவீத சலுகை வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டம், புலிவளத்தை சேர்ந்தவர் பி.மகேஸ்வரி. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– தேர்வில் தோல்வி நான் பி.எஸ்சி. (வேதியியல்) மற்றும் பி.எட். பட்டங்கள் பெற்றுள்ளேன். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், ஆசிரியர் பணிக்கு, ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த உத்தரவிட்டுள்ளது.  இதன் அடிப்படையில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த 2012–ம் ஆண்டு மார்ச் 7–ந்தேதி தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கலந்து கொண்டு, 85 மதிப்பெண் பெற்றேன். ஆனால், தேர்வில் 90 மதிப்பெண் (60 சதவீதம்) எடுத்தால் மட்டுமே வெற்றி என்று தமிழக அரசு தகுதி மதிப்பெண் நிர்ணயம் செய்திருந்ததால், நான் தோல்வி அடைந்தேன். மதிப்பெண்ணில் சலுகை