21 April 2024

 TNPSC குரூப் 1 தேர்வுக்கு அப்ளை பண்ணியாச்சா? இன்னும் 1 வாரம் தான் இருக்கு!




தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்பவதற்கான குரூப் 1 தேர்வு (Group 1) அறிவிக்கையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்று வெளியிட்டுள்ளது.


காலியிடங்கள்:


துணை ஆட்சியர்

துணைக் கண்காணிப்பாளர் (வகை-1)

உதவி ஆணையர் (வணிக வரி)

கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர்

ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்

மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அலுவலர்

உள்ளிட்ட 7 பதவிகளுக்கான 90 காலியியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதற்கான விண்ணப்பங்கள் (28-03-2024 )இன்று முதல் தொடங்குகிறது. விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியே மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இதற்காக விண்ணப்பிக்க , https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பத்தார்களுக்கான அறிவுறுத்தல்களை நன்றாக படித்து , தேர்வுக்கான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்கிறோம் என உறுதி செய்த பின்னர் விண்ணப்பிக்கவும்.

வயது:


இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும் மற்றும் 34 வயது க்கு மேல் இருக்க கூடாது. ஒதுக்கப்பட்ட பிரிவுகளுக்கான அரசின் வயது வரம்பு தளர்வுகள் பொருந்தும்.

கல்வித் தகுதி:


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு எழுத குறைந்தபட்சம் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பதவிகளுக்கு ஏற்ப கல்வித் தகுதிகள் மாறுபடும். அதை அதிகாரபூர்வ அறிக்கையில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

முக்கியமான நாட்கள்:


விண்ணப்பங்கள் சமர்ப்பித்தற்கான கடைசி தேதி: 27.04.2024 11.59 P.M

விண்ணப்பத் திருத்தும் காலம்: 02.05.2024 12.01 A.M முதல் 04.05.2024 11.59 P.M

தேர்வு நாள் : 13.07.2024 காலை 09.30 மணி முதல் மதியம் 12.30 வரை

விண்ணப்பிக்கும் முறை


ஒருமுறைப் பதிவு மற்றும் இணைய வழி விண்ணப்பம் https://www.tnpsc.gov.in/ அல்லது www.tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணைய இணையத் தளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். தேர்வர் ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருப்பின், அவர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலாம்

தேர்வு முறை:


ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு - I (குரூப்-I சர்வீசஸ்) இரண்டு தொடர்ச்சியான நிலைகளைக் கொண்டுள்ளது:

(i) முதன்மைத் தேர்வுக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதல்நிலைத் தேர்வு (அப்ஜெக்டிவ் வகை); மற்றும்

(ii) பல்வேறு பதவிகளுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதன்மைத் தேர்வு (எழுத்து மற்றும் நேர்காணல்) இருக்கும்.


இந்தத் தேர்வுகளில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ தேர்வுகள் அமையும் பின்னர், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு நியமிக்கப்படுவர். முழு விபரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையை பார்க்கவும்.

 வேலைவாய்ப்பக பதிவுதாரா்களின் எண்ணிக்கை 54.25 லட்சம்: தமிழக அரசு



வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.25 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து, மாநில அரசின் சாா்பில் சாா்பில் வெளியிடப்பட்ட தகவல்:


தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை மாா்ச் மாத நிலைவரப்படி 54,25,114-ஆக உள்ளது. அவா்களில் 25 லட்சத்து 134 போ் ஆண்கள். 29,24,695 போ் பெண்கள். பதிவு செய்தவா்களில் 285 போ் மூன்றாம் பாலினத்தவா்கள்.


வயது வாரியாக பதிவுதாரா்கள்: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவா்களில் வயது வாரியான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. அதாவது, 18 வயதுக்குள்ளான பள்ளி மாணவா்கள் 10.83 லட்சம் பேரும், 19 முதல் 30 வயது வரையிலான பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 23.92 லட்சமும், 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் 17.03 லட்சம் பேரும் உள்ளனா்.


மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதால், அவா்களும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்களது பெயா்களைப் பதிவு செய்து வைத்துள்ளனா். மொத்தமாக பதிவு செய்துள்ள 1,49,647 மாற்றுத்திறனாளிகளில், 99,680 போ் ஆண்கள். 49,967 போ் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 NEET UG 2024: நீட் தேர்வு சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் எப்போது வெளியாகும்? முக்கிய அப்டேட்




தேசிய தேர்வு முகமை (NTA) இளங்கலை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET UG) சிட்டி இன்டிமேஷன் ஸ்லிபை ஏப்ரல் 22 ஆம் தேதி திங்கட்கிழமை வெளியிடும்.


நீட் தேர்வு சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் சீட்டு - https://neet.ntaonline.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் வெளியான பிறகு, நீட் தேர்வு ஹால் டிக்கெட் வழங்கப்படும். 


நீட் தேர்வு மே 5 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நீட் தேர்வு நகர மையத் தகவல் சீட்டுகள் மற்றும் அனுமதி அட்டைகளை சரிபார்த்து பதிவிறக்கம் செய்ய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழையலாம்.



நீட் தேர்வு சிட்டி ஸ்லிப்: பதிவிறக்குவது எப்படி?


படி 1: அதிகாரப்பூர்வ நீட் இணையதளத்தைப் பார்வையிடவும்


படி 2: முகப்புப் பக்கத்தில் கிடைக்கும் சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் இணைப்பைக் கிளிக் செய்யவும்.


படி 3: உள்நுழைய தேவையான சான்றுகளை (விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி) உள்ளிடவும்.


படி 4: சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப் கிடைக்கும்.


படி 5: எதிர்கால குறிப்புக்காக பதிவிறக்கி சேமிக்கவும்.


நீட் தேர்வு அனுமதி அட்டையில் மாணவரின் விவரங்கள் அல்லது அவரது புகைப்படம் மற்றும் கையொப்பங்களில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், விண்ணப்பதாரர் உடனடியாக தேசிய தேர்வு முகமையின் உதவி எண்ணை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அணுக வேண்டும். 


இதுபோன்ற சந்தர்ப்பங்களில், விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதி அட்டையுடன் மருத்துவ நுழைவுத் தேர்வில் எழுதுவார்கள் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இருப்பினும், பதிவில் திருத்தங்கள் செய்வதற்கு தேசிய தேர்வு முகமை தேவையான நடவடிக்கையை பின்னர் எடுக்கும்

 அரசு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்



அரசு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளியில் சேர்க்கை பெற விரும்புவோர், நாளை (ஏப்.22) முதல் விண்ணப்பிக்க பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.


இதுதொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியதாவது:குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009-ன் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் சேரும் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை கட்டணம் செலுத்தும்.


அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு நாளை (ஏப்.22) முதல் rte.tnschools.gov.in என்றஇணையதளம் வாயிலாகஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் மே 20-ம் தேதி ஆகும்.விண்ணப்பப் பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.


 ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால், அந்த பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

 ரயில்வே போலீஸ் வேலை வாய்ப்பு; 4,208 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிக்கலாம்!



ரயில்வே பாதுகாப்பு படையில் (Railway Protection Force) காலியாக காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மொத்தம் 4,208 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 14.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


கான்ஸ்டபிள் (Constable)


காலியிடங்களின் எண்ணிக்கை: 4,208


ஆண்கள்: 3,577


பெண்கள்: 631


கல்வித் தகுதி : இந்த பதவிகளுக்கு 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 


வயதுத் தகுதி : 01.07.2024 அன்று 18 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.


சம்பளம்: ரூ. 21,700 


தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 


கணினி வழி தேர்வு 120 மதிப்பெண்களுக்கு 90 நிமிட கால அளவில் நடைபெறும். இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness) 50, திறனறிதல் (General Intelligence & Reasoning) 35, கணிதம் (Numerical Aptitude) 35 என மொத்தம் 120 கேள்விகள் கேட்கப்படும். 


விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250


விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.05.2024


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...