20 August 2014

TET பட்டதாரி ஆசிரியர்கள் சென்னையில் 3-வது நாளாக உண்ணாவிரதம். 3-வது நாளாக உண்ணாவிரதம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை எம்.ஜி.ஆர் சதுக்கம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.3-ஆவது நாளாக நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். வெயிட்டேஜ் முறையை ரத்து‌ செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கி பணியமர்த்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த மூன்று நாட்களாக மேற்கொண்டு வரும் பட்டதாரி ஆசிரியர்களின் போராட்டத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் தொடர் போராட்டம். ஆசிரியர்தகுதித் தேர்வில் வெயிட்டேஜ்மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் செவ்வாய் கிழமை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வளாகத்தை முற்றுகையிட முயன்ற பட்டதாரி ஆசிரியர்கள் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப் பட்டவர்கள் குழுக்களாக வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளதாகவும்,அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் மற்ற ஆசிரியர்கள் தெரிவித்தனர். அமைதியான முறையில்,கோரிக்கைகளை மனுவக அளிக்க முயன்ற தங்களை காவல் துறையினர் கைது செய்ததாகவும் ஆசிரியர்கள் கூறினர். பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று வள்ளுவர் கோட்டத்தின் முன்பு உண்ணாவிரதம் மேற்கொண்ட ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டத்தை தொடர்ந்த அவர்களை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.
தமிழகத்தில் 12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்-Dinamalar 'நடப்பு ஆண்டில் 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்,''என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சபிதா தெரிவித்தார். திண்டுக்கல்லில் ஐந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி தலைமையில் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை செயலர் பேசியதாவது: அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 90 சதவீதமாக உள்ள தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது.கல்விக்குயில்பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருந்த விருதுநகர், 3வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 16 க்கும்; 17 ல் இருந்த திண்டுக்கல் 19 க்கும்; 9ல் இருந்த தேனி 15வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. அதேபோல், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 4ம் இடத்தில் இருந்த விருதுநகர் 5வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 11 க்கும்; 21ல் இருந்த திண்டுக்கல் 22 க்கும்; 17ல் இருந்த தேனி 25ம் இடத்திற்கும் சென்றுள்ளன.கல்விக்குயில்இதை சரிசெய்ய வேண்டும். அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். நான்கு ஆண்டுகளில் காலியாக இருந்த 76,684 பணியிடங்களில் 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த ஆண்டு 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்,என்றார்.-

 டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ விண்ணப்பிப்பதற்கு நாளை கடைசி நாள்.. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் நடத்தப...