10 July 2016

200 பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும்

தமிழகத்தில் 200 உயர்நிலைப்பள்ளிகளை மேல்நிலைப்பள்ளிகளாகத் தரம் உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு முதுநிலைபட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழுக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாநிலத்தலைவர் மணிவாசகன் தலைமையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்,பள்ளிகளுக்கு போதிய ஆசிரியர்கள் தேவை என்ற அடிப்படையில் மேலும் 5ஆயிரம் முதுகலை ஆசிரியர்பணியிடங்களை உருவாக்கி நிரப்ப வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக மொழியாசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஆன்லைன் கலந்தாய்வு முறையில் உள்ள குறைகள்களையப்பட்டு முறையாக கலந்தாய்வு நடத்த வேண்டும். அகில இந்திய நுழைவு தேர்வுகளில் தமிழக மாணவர்கள் அதிகளவில் வெற்றிபெறவும், கல்வித்திறனை மேம்படுத்திடவும், 80சதவீதத்திற்கு மேல்அறிதல், புரிந்துகொள்ளுதல், திறன் வெளிப்படுத்துதல்,நடைமுறைக்கேற்ப பயன்படுத்துதல் என்ற முறையில் வினாத்தாள்கள் அமையவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மண்டலச்செயலர் செல்வம், மாவட்டச்செயலர் தாமரைச்செல்வம், அமைப்புச்செயலர் கோவிந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
" டெட்" தேர்வுகள் இல்லை ! - ஆசிரியர் தேர்வு வாரியம் திடீர் முடிவு
more details your see
www.ednnet.in
பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம் பி.எட். சேருவதற்கே ஆசிரியர் தகுதித் தேர்வு அவசியம்: கல்வித் தரத்தை மேம்படுத்த கல்வியாளர்கள் யோசனை.

தகுதியான ஆசிரியர்களை, அரசுப் பள்ளிகளுக்கு தேர்வு செய்ய தமிழக அரசு பி.எட் (B.Ed), டி.டி.எட் (D.T.Ed) படித்தவர்கள் கட்டாயம் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாய மாக்கி உள்ளது.

அதனால், தற்போது அரசு ஆசிரியர் ஆவதற்கு பி.எட், டி.டி.எட் மட்டுமே அடிப்படைத் தகுதியாக கருத முடியாது. அதேநேரத்தில், பிளஸ் 2, இள நிலை, முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் யார் வேண்டுமானா லும் பி.எட், டி.டி.எட் படிப்பில் சேரலாம், ஆசிரியராகலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.

‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர் ஆகலாம். அதற்கு அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லை. அரசின் இந்த நடவடிக் கையை தனியார் பள்ளி நிர்வாகங் கள் சரியாக பயன்படுத்திக் கொண்டதால், ஆசிரியர் பயிற்சி முடித்தும் அரசுப் பள்ளிகளில் பணி வாய்ப்பு கிடைக்காதவர்கள், மாற்றுத் துறைகளுக்குச் செல்ல முடியாமல் தனியார் பள்ளிகளில் 2 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் கொத்தடிமைகளைப் போல பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகளை பார்க்கும்போது, அரசுப் பள்ளி ஆசிரியர்களைவிட, டெட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவ, மாணவிகளை அதிக தேர்ச்சி விகிதம், மதிப்பெண்கள் எடுக்க வைத்து சாதிக்கின்றனர். அதனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியர்களை நம்பி, அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், வசதியானவர்கள் மற்றும் நடுத்தர மக்கள், தங்கள் குழந்தைகளை கூடுதல் மதிப்பெண், ஆங்கிலக் கல்வி பெற தனியார் பள்ளிகளில் சேர்ப்பது அதிகரித்து உள்ளது.

அதனால், தனியார் பள்ளிகள் ஆதிக்கம் கிராமங்கள் வரை பெருக ஆரம்பித்துள்ளதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் ஊதியத்துக்காக கல்வித்துறை ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியும், அரசுப் பள்ளி ஆசிரியர் களால் தனியார் பள்ளி ஆசிரியர் களைப்போல் ஏன் சாதிக்க முடிய வில்லை என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழத் தொடங்கி உள்ளது.

இதுகுறித்து காந்திகிராம பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் ஜாகீதா பேகம் கூறும்போது, “பி.எட், டி.டி.எட் சேருவதற்கே தகுதித்தேர்வை அவசியம் நடத்த வேண்டும். ஒருவரை ஆசிரியர் பயிற்சி படிக்க வைத்துவிட்டு, அதற்குப் பின் தகுதித் தேர்வு மூலம் அவர் தகுதி பெறவில்லை எனக் கூறுவது அவசியமில்லாதது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பின்லாந்து போன்ற கல்வியில் சிறந்து விளங்கும் மேலை நாடுகளில் ஆசிரியராவது கடினமான காரியம். ஆசிரியர் கல்வியில் சேரவே பல படிநிலைகளைத் தாண்ட வேண்டும். நமது நாட்டில் தரமான கல்விச் சூழலை மீட்டெடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை” என்றார்.

கல்வியில் பின்தங்கிய அரசுப் பள்ளிகள் ஜாகீதாபேகம் மேலும் கூறும்போது, “சர்வதேச அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் அடைவுத் திறனை சோதிப்பதற்கு, சர்வதேசக் கூட்டமைப்பு ஒன்று, 74 நாடுகளில் PISA என்ற ஆய்வை நடத்தியது. இதில், இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறது” என்றார்.
வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை'யில்...இனி 6-ம் வகுப்பில் இருந்துஆங்கிலக் கல்விதான்!'

மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் தேசிய கல்விக் கொள்கை குறித்து, பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டுள்ளது மனிதவள மேம்பாட்டு அமைச்சகம். 'வருகிற 31-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது மத்திய அரசு.

இதுகுறித்து மாநில அரசு மௌனமாக இருப்பது வேதனையளிக்கிறது' என்கின்றனர் கல்வியாளர்கள். தேசிய அளவில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு.

இதன்படி, பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகும், கல்லூரி படிப்புகளில் சேர மாணவர்கள் தகுதித் தேர்வு எழுத வேண்டும்; ஆறாம் வகுப்பில் இருந்து ஆங்கிலக் கல்வி, ஐந்தாம் வகுப்பு வரையில் மட்டுமே ஆல் பாஸ் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு, இணையதளத்தில் மட்டுமே கருத்துக் கேட்புகளை நடத்திக் கொண்டிருக்கிறது." இந்திய மொழிகளில் இதுபற்றிய அறிவிப்புகளை வெளியிடாமல், ஆங்கிலத்தில் கருத்துக் கேட்பு குறித்து விவரித்துள்ளனர்.

தேசிய கல்விக் கொள்கையை வரையறுப்பதில்கூட, அந்நிய மொழியில் கருத்துக் கேட்பு நடத்துவது கண்டனத்திற்குரியது. தேசிய கல்விக் கொள்கை குறித்து, மாநில அரசிடம் என்ன மாதிரியான கடிதப் போக்குவரத்தை மத்திய அரசு நடத்தியது என்பது குறித்துஎந்த விவரங்களும் தெரியப்படுத்தப்படவில்லை" என ஆதங்கப்படுகிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.

மேலும் அவர், " இப்படியொரு கருத்துக் கேட்பு நடப்பதே, பலருக்கும் தெரியவில்லை. இவை அமல்படுத்தப்பட்டால், மாநில அரசின் சுயாட்சி அதிகாரம் என்பது முற்றிலும் பறிபோய்விடும்.மாநிலத்திற்கென்று உள்ள மொழி, கல்வி, கொள்கை முடிவெடுக்கும் திறன் போன்றவை முற்றிலும் அடிபட்டுப் போய்விடும். அதற்கான முன்முடிவுகள் அனைத்தும் சுப்ரமணியன் கமிட்டி பரித்துரைத்ததேசிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றிருக்கின்றன. எந்த மொழியில் படிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமை.

தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆங்கில மொழியை பிரதானப்படுத்தியே கல்விக் கொள்கை அமைந்திருக்கிறது. சுமார் 230 பக்கங்களில் அவர்கள் தெரிவித்துள்ள பரிந்துரைகள் அனைத்தும், நமது கல்வி முறைக்கு எதிராகவே உள்ளது.

இவற்றை மாநில அரசுகள் ஏற்றுக் கொண்டால், வரும் காலங்களில் கல்வி குறித்த முடிவுகளை மத்திய அரசே எடுக்கும். மாநில அரசுகள் வைக்கும் பொதுத் தேர்வுகளுக்கு எந்தவித மதிப்பும் இருக்காது. அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னதாக பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தியதாகச் சொல்கிறார்கள். அவர்கள் யாரையும் சந்தித்துப் பேசவில்லை என்பதுதான் உண்மை.

இப்படியொரு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக, தமிழக அரசியல் கட்சிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரிடமும், குழுவின் பரிந்துரைகளை விரிவாக எடுத்துக் கூறி, அவர்களின் கருத்துக்களைக் கேட்க முன்வர வேண்டும்.

இதற்கு குறைந்தபட்சம் ஆறு மாதம் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசுக்கும் மாநில முதலமைச்சருக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறோம். தேசிய கல்விக் குழுவின் அபாயங்கள் குறித்து வருகிற 14-ம் தேதி சென்னை பல்கலைக்கழகத்தில் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் நாம் முன்னெச்சரிக்கையாக இல்லாவிட்டால், கல்வியில் இன்னும் பல பத்தாண்டுகள் பின்னோக்கிய நிலைக்குத்தான் தள்ளப்படுவோம். இதை பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்" என்றார் கவலையோடு.

'இணையதளத்தில் பெயரளவுக்குக் கருத்துக் கேட்பு வைபவத்தை நடத்திவிட்டு, ஏதோ ஒரு நாளில் நாடாளுமன்றத்தில் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுவிடக் கூடாது' என அச்சப்படுகின்றனர் கல்வியாளர்கள்.
TNPSC:அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முதன்மை தேர்வை தள்ளிவைக்க வேண்டும் விண்ணப்பதாரர்கள் கோரிக்கை.

அடுத்தடுத்து தேர்வுகள் வருவதால் குரூப்-1 முதன்மை தேர்வை தள்ளிவைக்கவேண்டும் என்று தேர்வுக்காக விண்ணப்பித்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரூப்-1முதன்மை தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 முதன்மை (மெயின்) தேர்வு முடிவுகளை கடந்த மாதம் 17-ந் தேதி வெளியிட்டது. மேலும் நேர்முக தேர்வுக்கான சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் நடந்தது. இதற்கான நேர்முகத்தேர்வு தேதிகள் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில் 2015-16-ம் ஆண்டுக்கான குரூப்-1 முதன்மை

தேர்வு இம்மாதம் 29, 30 மற்றும் 31-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. ஏற்கனவே எழுதிய தேர்வின் நேர்முக தேர்வுக்கு தயாராகுவதா? இல்லை முதன்மை தேர்வுக்கு தயாராகுவதா? என்ற குழப்பத்தை தேர்வு எழுதுபவர்கள் இடையே ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து தேர்வுகள் முதன்மை தேர்வினை தள்ளிவைத்து 2014-15-ம் ஆண்டுக்கான நேர்முக தேர்வினை முதலில் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்டோரின் பட்டியலை வெளியிடுவதன் மூலம்தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீண்டும் 2015-16-ம் ஆண்டுக்கான தேர்வு எழுதுவதில் இருந்து விலகுவார்கள்.

இதன் மூலம் முதன் முறையாக முதன்மை தேர்வு எழுதுவோர் பயன்பெறுவார்கள். இம்மாதம் 31-ந் தேதி பாரத ஸ்டேட் வங்கி பணிகளுக்கான முதன்மை தேர்வு, ஆகஸ்டு 7-ந் தேதி நடைபெற உள்ள மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும்முதல் நிலை தேர்வு என அடுத்தடுத்து தேர்வுகள் உள்ளது.

தேர்வு தள்ளிவைக்க வேண்டும் இந்த தேர்வுகளை பெரும்பாலானோர் எழுத உள்ளதால் இம்மாதம் 29, 30 மற்றும் 31-ந் தேதி நடைபெற உள்ள குருப்-1 முதன்மை தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தள்ளிவைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் இடையே உள்ளது. இதற்கிடையே குரூப்-1 நேர்முக தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது கோரிக்கையுடன் கூடிய மனுவினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு சமர்பித்துள்ளனர்.
TET நிபந்தனை ஆசிரியர்கள் - தமிழக முதலமைச்சருக்கு வேண்டுதல் மடல்: மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின்மேலான பார்வைக்காக... வணக்கம்.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் 23.08.2010 க்குப் பிறகு அரசு, அரசு உதவி பெறும்,சிறுபான்மையினர் பள்ளிகளில் முறையாக நியமனம் பெற்று தமிழகம் முழுவதும்பணியாற்றி வரும் சுமார் மூவாயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் வாழ்வாதார பாதுகாப்புவேண்டி எழுதும் கடிதம்.

எங்களின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டுள்ள நிலையை எடுத்துக் காட்டி நல்லதீர்வை வேண்டி இக் கடிதம் எழுதியுள்ளோம். ஆசிரியப் பணி நியமனங்களில் ஆசிரியர்தகுதித் தேர்வு நடைமுறையில் வரும் முன்னர் ஏற்கனவே பல ஆண்டுகளாக அமலில் உள்ளகல்வித் துறையின் உரிய நடைமுறைகளான அரசின் வழிகாட்டுதலுடன் அரசு பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பட்டதாரிஆசிரியர்களாக அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக பதிவுப்பட்டியல் பெற்றும், நாளிதழ்களில் விளம்பரம், கல்வித் துறையின் அங்கீகாரம்பெற்று பள்ளிக் குழுவின் நேர்முகத் தேர்வு மற்றும் இனச்சுழற்சி முறை போன்றபலவகையான தெரிவு முறைகளில் தேர்வு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித் துறையின் முழுஒப்புதலுடன் பட்டதாரி ஆசிரியப் பணியாற்றி வருகின்றோம்.

மாண்புமிகு தமிழக முதல்வராக தாங்கள் ஆட்சி் பொறுப்பு ஏற்ற பின்னர் தான்நிரந்தர ஆசிரியர் பணியிடத்தில் நாங்கள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வரும் சூழலில் இன்று தங்களது ஆட்சிக் காலத்திலேயே எங்கள்பணிக்குஆபத்து உருவாகியுள்ளதை எண்ணி மிகுந்த வேதனையும் மனக் குழப்பமும் அடைந்துள்ளோம்.

அம்மா, தற்போதைய நடைமுறையில் எங்களுக்கென புதிதாக பணியிடம் உருவாக்கவோ,சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தவோ, சான்றிதழ்கள் சரிபார்க்கவோ வேண்டியதேவை இருக்காது என்பதையும் தங்களது மேலான கவனத்தில் தெரிவிக்கின்றோம். பணிப்பாதுகாப்பு இல்லாமல் எங்களில் பலர் இன்று வரை ஊதியம், ஊக்க ஊதியம்,வளரூதியம், தகுதிகாண் பருவம் போன்ற பல பிரச்சனைகளில் நிம்மதியை முழுவதும்தொலைத்து விட்டு பணிபுரியும் சூழல்.கருணை உள்ளத்துடன் விரைவில் ஒரு நல்ல தீர்வு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்மிகவும் மன உளைச்சலை வெளிக்காட்டாது பணியில் இருக்கின்றோம்.

கட்சிக்காக உழைத்தவர்கள், தங்கள் ஆட்சி மீண்டும் அமைய பாடுபட்டவர்களின் குடும்ப பிள்ளைகளும் இதில் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.மேலும் முறையாக தகுதிக்காண் பருவத்தையும் முடித்தும் பல மாதங்கள் ஆகிவிட்டன.

பணிப்பாதுகாப்பற்ற மனவேதனையிலும் ஒரு மன நிறைவான வெற்றியாக நாங்கள் கருதுவது,எங்களிடம் கடந்த ஐந்து வருடங்கள் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்பல்வேறு பாடப் பிரிவுகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றும், சிலர் மாவட்ட,மாநில அளவில் தரம் பெற்றும் உள்ளனர் என்பதன் மூலமாக ஆசிரியப் பணி அறப்பணி என்றஎண்ணத்துடன் எங்களது ஆசிரியர் தகுதியினை ஒவ்வொரு ஆண்டும் அர்ப்பணிப்புஉணர்வுடன் நிலைநிறுத்தி வருகின்றோம்.

இதற்கிடையில், எங்களது நிபந்தனைப் பணிக்காலம் எதிர் வரும் நவம்பரில் முடியும்என்ற நிலையில், ஒவ்வொரு நாளையும் எண்ணிக் கொண்டு வாழ்வா, சாவா என்ற வாழ்க்கைப்போராட்டத்துடன் நகர்த்திக் கொண்டு இருக்கும் எங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்விலிருந்து முழுமையான விலக்கு அளித்து எங்களின் குடும்ப வாழ்வாதாரம்பாதுகாக்க உதவுமாறு பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.

தாயுள்ளம் கொண்ட அம்மா,மாண்புமிகு தமிழக முதல் அமைச்சராகிய தாங்கள் மனது வைத்தால் TET நிபந்தனையில்பணியில் உள்ள எங்களுக்கு ஒரு தவிர்ப்பு ஆணை மூலம் விடுவிக்க இயலும்.பல மாதங்களாக எங்களது சூழலை எடுத்துக் காட்டி நிறைய நாளிதழ்களிலும், கல்விசார்ந்த இணைய தளங்களிலும் செய்திகள் வெளிவந்தன.தங்கள் மேலான கவனத்தில் கொண்டு சேர்க்க ஒரு சில ஆசிரியர் சங்கங்களை நாடியும்யாரும் உதவ முன்வரவில்லை.ஆதியும் அந்தமுமான தங்களால் அன்றி எங்களுக்கு யாராலும் முழுமையான தீர்வைத் தரஇயலாது.

நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சென்னைக்கு வந்து தங்கள் அலுவலகத்தில் நேரில்மனு அளிக்க ஒருங்கிணைப்பு செய்யக் கூட எங்களிடம் மனதளவில் தெம்பு இல்லை.TET லிருந்து முழுவதும் விலக்கு தங்களால் மட்டுமே சாத்தியம் என்பதை பட்டதாரிஆசிரியர்பணியில் உள்ள நாங்களும் எங்களது குடும்பங்களும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன்,கண்களில் பெருக்கெடுக்கும் கண்ணீருடன் அன்புமிகு அம்மாவாகிய தங்கள் மீதானநம்பிக்கையை விடாமல் நல்ல தீர்வுக்கு காத்திருக்கிறோம்.எங்களைக் காப்பாற்றுங்கள்.

இப்படிக்கு,தங்களது உண்மையுள்ள,ஆசிரியர் தகுதித் தேர்வு நிபந்தனைகளுடன் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்.( அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள்.தமிழகம் ) செய்திவெளியீடு : தென்னகக் கல்விக் குழு, கோவை.

  எய்ம்ஸ் மருத்துவமனைகளில் செவிலியர் வேலை; 3,500 காலிப்பணியிடங்கள்..!புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மட்டும் 446 காலிப்பணியிடங்கள் உள்ளன ...