Posts

Showing posts from December 4, 2021
Image
பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்  பள்ளிக் கல்வித்துறையின் அணைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மாவட்டல் கல்வி அலுவலபயிற்சி மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் அவகளுக்கான ஆய்வுக்கூட்டம் 23.11.2202 அன்று சென்னை -85 , கோட்டூர்புரம் . அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்த முக்கிய விவரங்கள் இத்துடன் இணைத்து தக்க நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்  பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்  அனுப்பியுள்ளார். அதில் ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் புதிய ஆசிரியர்கள் நியமனம் குறித்தும் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைப்பு : விவாதிக்கப்பட்ட விவரங்கள் பள்ளிக்கல்வி  * Transfer Counselling சார்ந்து இந்தமாதம் இறுதியில் அரசானை வெளியிடப்படவுள்ளது இப்பணிகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்க்கப்பட்டு மாத இறுதிக்குள் முடித்து புதுப்பணியிடங்கள் கோரவும் ' உத்தேசிக்கப்பட்டுள்ளது. * மாவட்டங்களில் புதிய மாணவ
  தமிழ்நாட்டில் அரசு காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பும் அளவுக்கு நிதி இல்லை : பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு நடத்தப்படும் தேர்வுகளில், தமிழ் மொழிப்பாடம் கட்டாயம் என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசு நேற்று வெளியிட்டது. இதுகுறித்து தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் இனிவரும் காலங்களில், எந்த அரசு தேர்வாக இருந்தாலும் தேர்வு எழுதுவோருக்கு அடிப்படை தமிழ் புலமை கட்டாயம் இருக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. அனைவருக்குமான ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற நோக்கத்தில் நம் முதலமைச்சர் தெளிவாக இருக்கிறார். தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்காக 14 முதல் 15 லட்சம் பேர் வரை தேர்வு செய்துகொள்ளலாம். ஆனால் தற்போது 10 லட்சத்திற்கும் குறைவானவர்களே அரசு பணியில் இருக்கிறார்கள். மீதம் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் அளவுக்கு தமிழக அரசிடம் நிதி இல்லை. அரசு தேர்வு எழுதுவோருக்கு வயது வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தப்பட உள்ளது. இன்னும் ஓரி
  4.5 லட்சம் காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை தமிழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 4.5 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட இணைச் செயலாளர் வினோத்ராஜ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் பெரியசாமி, மாநில பொதுச்செயலாளர் செல்வம் சிறப்புரை ஆற்றினர். இதில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. மாவட்டத் தலைவராக கண்ணதாசன், மாவட்ட செயலாளராக பாண்டி, மாவட்ட பொருளாளராக மாரி, துணை நிர்வாகிகளாக மூவேந்தன், காளிதாஸ், மூகாம்பிகை, முத்துக்குமார், வினோத்ராஜா, ராமமூர்த்தி, செந்தில்வேல், முத்துராஜ் தேர்வு செய்யப்பட்டனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர், ஊர்ப்புற நூலகங்கள், எம்ஆர்பி செவிலியர்கள், கணினி இயக்குனர்கள், கல்வித்துறை பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பணியாற்றும் சுகாதார ஊழியர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் டிபிசி ஊழியர்கள், பொதுத்துறை பல்நோக்கு மருத்துவமனை பணியாளர