Posts

Showing posts from February 20, 2024
Image
 மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு(CTET) முடிவுகள் வெளியீடு
Image
  60,567 பேருக்கு அரசு வேலை; துறை வாரியாக விபரம் வெளியீடு அரசு அறிக்கை: தமிழக அரசுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் பணியானது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் போன்றவை வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது. வெவ்வேறு துறைகளில் காலி பணியிடங்களுக்காக, ஜன., 2024 ஜனவரி வரை, 27,858 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.  இதுதவிர, பல்வேறு அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, 32,709 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.நீதித்துறையில், 5,981 பணியிடங்கள்; பள்ளிக்கல்வித் துறையில், 1,847; வருவாய்த் துறையில், 2,996; மக்கள் நல்வாழ்வுத் துறையில், 4,286; ஊரக வளர்ச்சித் துறையில், 857; உயர்கல்வித் துறையில், 1,300; காவல், நகராட்சி நிர்வாகம், வேளாண்மை, சமூக நலம் உள்ளிட்ட மற்ற துறைகளில், 15,442 பணியிடங்களும், அந்தந்த துறைகளின் வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி நேரடியாக நிரப்பப்பட்டுள்ளன. அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், 60,567 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Image
 " 2025-26 கல்வியாண்டு முதல், ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு" - மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்! வரும் 2025-26 கல்வியாண்டு முதல், ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டத்தை (NCF) மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பொதுத் தேர்வுகள் நடத்தும் முறையில் பெரிய அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதாவது, ஓராண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் மாணவர்களுக்கு போதுமான கால அவகாசம் வழங்குவதற்காக இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்தது. மேலும், 2 பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டாலும், மாணவர்கள் 2 தேர்வுகளில் எந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கிறார்களோ அதையே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டங்களின் கீழ் பயிலும் மாணவர்களுக்கும் இந்த முறை பொருந்தும் எனவும் த
Image
  +2 பொதுத்தேர்வு. இன்று ஹால் டிக்கெட் வெளியீடு..! தமிழ்நாடு , புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று தங்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்க செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு குறித்து கால அட்டவணை ஏற்கனவே பள்ளி கல்வித்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மார்ச் 1-ம் தேதி முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 1 ஆம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி பொதுத்தேர்வு நிறைவடைகிறது. 12 ஆம் வகுப்பை தொடர்ந்து 11-வது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொது தேர்வுக்கான ஹால் டிக்கெட் குறித்த விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 1ஆம் தேதி தமிழ்நாடு , புதுச்சேரியில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்ட
Image
  ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத்தேர்வு
Image
 விழுப்புரம் மாவட்டத்தில் 69,263 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்
Image
  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 1000 மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது