Posts

Showing posts from February 21, 2022
Image
  டி.ஆர்.பி., தேர்வு தேர்வர்கள் அதிருப்தி கோவை: ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு அவசரகதியில் நடத்தப்பட்டதாக தேர்வர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வுகள் கடந்த, 12ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.இந்நிலையில், மைய ஒதுக்கீட்டில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதால் பலர் தேர்வில் பங்கேற்கவில்லை என தேர்வர்கள் தெரிவித்தனர். குறிப்பாக, நகரின் மையப்பகுதிகளில் பல கல்லுாரிகள் இருந்தும், தொலைதுாரங்களில் மையங்கள் ஒதுக்கியதால் அவர்கள் அலைக்கழிப்புக்கு ஆளாகினர்.பாண்டிச்சேரியை சேர்ந்த ரம்யா கூறுகையில், ''ஆங்கிலத்தேர்வை இரு தினங்களுக்கு முன்பு எழுதினேன். கோவில்பாளையம் பகுதியில் ஒரு கல்லுாரியில் மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.அம்மையத்திற்கு வந்தவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தான். இங்கு, 87 பேருக்கு, 42 பேர் மட்டுமே வந்திருந்தனர். ஆப்சென்ட் ஆனவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது,'' என்றார்.தேர்வு கண்காணிப்பாளர் ஒருவர் கூறுகையில், 'தேர்தல், திருப்புதல் தேர்
Image
  TNPSC முக்கிய அறிவிப்பு!     குரூப் 2 , குரூ 2 ஏ தேர்வுகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் , TNPSC இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள் , அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை உடனடியாக இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைத்து , OTR கணக்கு மூலமாகவே நாளை மறுநாள் ( பிப் .23 ம் தேதி ) முதல் குரூப் 2 , குரூ 2 ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது .
Image
  2.5 லட்சம் பேர் பங்கேற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நிறைவு தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் பேர் பங்கேற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி பயிற்றுநர் (கிரேடு-1) ஆகிய பதவிகளில் 2,207 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கணினிவழித் தேர்வு கடந்த 12 முதல் 20-ம் தேதி வரை நடைபெற்றது. ஏற்கெனவே தமிழ், வணிகவியல், மனையியல், இந்திய கலாச்சாரம், இயற்பியல் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு காரணமாக சனிக்கிழமை மட்டும் தேர்வுகள் நடைபெறவில்லை. கடைசி நாளான நேற்று கணினி அறிவியல் பாடத் தேர்வு நடைபெற்றது. சென்னையில் தேர்வெழுதிய சிலர் கூறும்போது, ``கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்வுடன் ஒப்பிடும்போது, தற்போது வினாத்தாள் மிகவும் எளிதாகவே இருந்தது'' என்றனர். பொதுவாக, போட்டித் தேர்வுகள் முடிவடைந்ததும் கீ ஆன்ஸர் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுகளுக்கான கீ ஆன்ஸர் ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்
Image
  டிஎன்பிஎஸ்சி மூலம் இனி இந்த பதவிகளுக்கும் ஆட்கள் தேர்வு?.. உயர்கல்வித்துறை அதிரடி முடிவு..!!!! டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல் உயர்கல்வியை மாநிலம் முழுவதும் பரவலாக்குவதற்காக தமிழ்நாடு மாநில உயர்கல்வித்துறை என்பது தொடங்கப்பட்டுள்ளது. இந்த உயர்கல்வித்துறை சமூகத்தின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டு சட்டங்கள், கொள்கைகள், விதிமுறைகள் மற்றும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை அடிப்படை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. இந்த நிலையில் மாநில உயர்கல்வித்துறை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் நியமனம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அந்தந்த பல்கலைக்கழகங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் நியமனத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்த பணி நியமனம் சரியான இட ஒதுக்கீடு மற்றும் சரியான கல்வி முறையை பின்பற்றாமல் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. அந
Image
  திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை டிஎன்பிஎஸ்சி வெளியீடு போட்டித் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு காலஅட்டவணையை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டது. அதில் 21 போட்டித் தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகும் மாதம், ஒவ்வொரு தேர்வு மூலம் நிரப்பப்படும் காலியிடங்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தற்போது திருத்தப்பட்ட புதிய தேர்வு காலஅட்டவணையை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டுள்ளது. அதில்கூடுதலாக, தேர்வு எந்த மாதத்தில்நடத்தப்படும், அதன் முடிவுகள் எந்த மாதம் வெளியிடப்படும். நேர்காணல், கலந்தாய்வு எப்போது நடத்தப்படும் ஆகிய விவரங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. அரசு பணியில் சேர விரும்பும்இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராகவும், தேர்வு முடிவுகள், நேர்காணல், கலந்தாய்வு விவரங்களை அறிவதால் உத்வேகத்துடன் தேர்வுக்கு படிப்பதற்கும் தேர்வு கால அட்டவணை பெரிதும் உதவும்.