Posts

Showing posts from June 20, 2014
ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான TET -2 சான்றிதழ் சரிபார்ப்பு கடிதம் வெளியிடப்பட்டுள்ளது ஜூலை 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.
TNTET:பணி நியமனத்தில் முன்னுரிமை கோரி உண்ணாவிரதம்- nakkheeran News பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் உண்ணாவிரதம் சென்னையில் நடைபெற்றது. ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.சான்றிதழ் சரிபார்ப்பை முதலில் (ஜனவரி 21-28) முடித்தவர்களுக்கு பணிநியமனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.வெயிட்டேஜ் முறையில் தகுதித் தேர்விற்கு அதிக மதிப்பெண் தர வேண்டும். பதிவு மூப்பிற்கு மதிப்பெண்கள் தர வேண்டும். பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு தேவையில்லாத +2 மதிப்பெண்களை அறவே நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60%க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. TNTET: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60%க்கு மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றோர் அமைப்பினரின் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம்: ஆசிரியர் தகுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கு வேண்டியும்,ஆசிரியர் தகுதித்தேர்வில் மதிப்பெண்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சதவீதத்தை 60% திலிருந்து 85% உயர்த்த கோரியும் தற்போது சென்னை சேர்பாக்கம் வாலாஜா சாலையில் அரசு விருந்தினர் மாளிகை அருகில் ஒரு நாள்அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது(11 AM) வரை சுமார் 300 பேர் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.விரிவான தகவல் விரைவில்...
விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர் வெளியீடு: 3 மாதத்தில் தேர்வு முடிவுகள். டிஎன்பிஎஸ்சி சமீபத்தில் நடத்திய விஏஓ தேர்வுக்கான கீ ஆன்சர், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், 3 மாதத்திற்குள் தேர்வின் முடி வுகளை வெளியிடவும் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,342 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்ப கடந்த 14ம் தேதி எழுத்து தேர்வை நடத்தியது. இதற்காக மாநிலம் முழுவதும் 243 மையங்களில் 3,628 தேர்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம், 10 லட்சத்து 8,662 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 7 லட்சத்து 63 ஆயிரம் பேர் மட்டுமே தேர்வு எழுதி னர். 2 லட்சத்து 45 ஆயிரத்து 662 பேர் தேர்வு எழுத வரவில்லை.இந்நிலையில் விஏஓ எழுத்து தேர்வுக்கான விடைகளை (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி தனதுஇணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சியின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in, www.tnpsc exams.net பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்சர் கீயில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் வருகிற 24ம் தேதிக்குள் தெரிவிக்கலாம். இது குறித்து ட
2,846 காலி பணியிடங்களை நிரப்ப29ம் தேதி குரூப் 2 போட்டி தேர்வு சென்னை:தமிழக அரசின், பல துறைகளில், குரூப் 2 நிலையில் காலியாக உள்ள, 2,846 இடங்களை நிரப்ப, வரும், 29ம் தேதி போட்டி தேர்வு நடக்கிறது.தகுதியான தேர்வர்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில், நேற்று, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: வரும், 29ம் தேதி காலை, 'குரூப் 2ஏ' (நேர்முகத் தேர்வு அல்லாத பணியிடங்கள்) தேர்வு நடக்கிறது. 2,846 பணியிடங்களை நிரப்ப, இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இதை, 6.25 லட்சம் பேர் எழுத உள்ளனர். தகுதிவாய்ந்த தேர்வர்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தில், ( www.tnpsc.gov.in) ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது. நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர் பட்டியலும், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. 'ஹால் டிக்கெட்' கிடைக்காத விண்ணப்பதாரர், நிராகரிப்பு பட்டியலில், தங்களின் பெயர் உள்ளதா என பார்க்க வேண்டும்.உரிய தகுதியுடன், சரியான முறையில் விண்ணப்பித்து, உரிய தேர்வு கட்டணத்தை செலுத்திய
பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதம் உயர காரணம் என்ன?கல்வி துறை செயலர் புதிய தகவல் ''பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியதற்கு, அரசு பள்ளிகளில், ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பியது தான் காரணம்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா தெரிவித்தார்.சலசலப்பு:சமீபத்தில் நடந்து முடிந்த இரு பொதுத் தேர்வுகளிலும், தேர்ச்சி சதவீதம், 90ஐ தாண்டியது. வழக்கமாக, தேர்ச்சி சதவீதம், 90க்குள் தான் இருக்கும். இந்த முறை, 90ஐ கடந்ததுடன், அதிகமான பாடங்களில், 'சென்டம்' எடுத்தவர்கள் எண்ணிக்கையும், கணிசமாக அதிகரித்தது.இதனால், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, தேர்வு முடிவு, பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. கல்வியாளர்கள், டாக்டர்கள் உட்பட பலர், தேர்வு முடிவை விமர்சித்துஉள்ளனர். மாணவர்கள், அதிக மதிப்பெண் குவித்ததால், பொறியியல், 'கட்-ஆப்' மதிப்பெண் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, 11 மாணவர்கள் மட்டுமே, 'கட்-ஆப்' மதிப்பெண், 200க்கு 200 எடுத்தனர். கடும் போட்டி:ஆனால், இந்த ஆண்டு, 271 மாணவர்கள், 200க்கு 200 மதிப்பெண் பெற்றுவிட்டனர். மேலும், 'ர