Posts

Showing posts from March 11, 2022
Image
  டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மார்ச் 23 வரை அவகாசம்! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2 மற்றும் குரூப்-2A பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களின் விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வரும் மார்ச் 23ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குரலா ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ ஆகியப் பணிகளுக்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 23ஆம் தேதி முதல் மார்ச் 23ஆம் தேதி வரை பெறப்படுகிறது. திருத்தம் செய்ய வாய்ப்பு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த தேர்வர்கள் தாங்கள் இறுதியாக சமர்ப்பித்த பிறகு, சில தகவல்களை தவறாக உள்ளீடு செய்து விட்டதாகவும் அவற்றை திருத்தம் செய்ய அனுமதிக்க வேண்டியும் தேர்வாணையத்தைத் தொடர்பு கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட காரணங்களுக்காக விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதன் மூலம் வெற
Image
  சென்னையில் TNPSC குரூப் 2 இலவசப் பயிற்சி: அம்பேத்கர் கல்வி மையம் அழைப்பு தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குரூப் 2 மற்றும் 2aவிற்கான முதல் நிலைத் தேர்வு 2022-ல் வரும் மே மாதம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளிவந்து மாணவர்கள் வேகமாக விண்ணபித்தும் வருகின்றனர். 5800க்கும் மேலான காலிப் பணியிடங்களை அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து மாணவர்களுக்கு உடனடியாக குரூப் 2 மற்றும் 2a போட்டித் தேர்வுக்கு இலவசப் பயிற்சியளிக்க Dr. அம்பேத்கர் கல்வி மையம் தயாராகி உள்ளது. ஏற்கெனவே Tnpsc குரூப் 1 முதல்நிலைத் தேர்வில் (Prelims) வெற்றிபெற்ற மாணவர்கள் முதன்மைத் தேர்வைச் சிறப்பாக எழுதியுள்ள நிலையில் அவர்களும் குரூப் 2 மற்றும் 2a மாதிரி தேர்வை (Test batch and discussion) எழுதத் தயாராக உள்ளனர். மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள குறுகிய கால இடைவெளியே உள்ளதால் மாதிரித் தேர்வை தொடர்ந்து விரிவான கலந்துரையாடலையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாண்டு தேர்வாணையம் நடத்த உள்ள தேர்வில் மாணவர்களுக்குத் தகுதி நிலையை நிர்ணயம் செய்யவும் தயாராகி வருகிறது. சூழ்நிலைகளைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி உறுதியாகத
Image
  TNPSC தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் சிக்கல் - ஆணையத்திடம் வைத்த முக்கிய கோரிக்கை!!! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலின் காரணமாக போட்டித்தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பல்வேறு அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் பற்றிய அறிவிப்பு வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி 2 -க்கான தேர்வை அறிவித்துள்ளது. மேலும் 5000-க்கும் அதிகமான பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது, நேர்முகத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு வருகின்ற மே 21-ஆம் தேதி தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய இருப்பதாகவும் மற்றும் இதற்கான விண்ணப்பங்கள் www.tnpsc.gov .in என்ற இணையதளத்தில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாகி உள்ளது. இதையடுத்து விண்ணப்பங்களை மார்ச் 23-ஆம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் வழக்கமாக ஒரு முறை பதிவு செய்த பின்னே தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியது அந்த ஆணையத்தின் நடைமு
Image
  தமிழ்நாடு அரசு தேர்வாணையப் பணியாளர் ஆணையத் தேர்வு விண்ணப்பத்தில் தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பு கிடைக்குமா? தமிழ்நாடு அரசு தேர்வாணையப் பணியாளர் ஆணையத் தேர்வு விண்ணப்பத்தில் தவறுகளை திருத்துவதற்கான வாய்ப்பை செயல்படுத்த விண்ணப்பதாரர்கள் கோரியுள்ளனர்.தமிழ்நாடு அரசு தேர்வாணைப் பணியாளர் ஆணையம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தேர்வு தொகுதி இரண்டுக்கான தேர்வை அறிவித்துள்ளது. அதில் 5500க்கும் அதிகமான நேர்முகத் தேர்வு, மற்றும் நேர்முகத்தேர்வு அல்லாத பணியிடங்களுக்கு மே 21 ல் தேர்வு நடத்தி பணி நியமனம் செய்ய உள்ளது. இதற்கான'ஆன்லைன்' www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 23 வரை விண்ணப்பிக்க அறிவித்துள்ளது. 'ஆன் லைன் ' விண்ணப்பத்திற்கு 'ஓரு முறை பதிவு' செய்து அதன் பின்னரே தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியது ஆணையத்தின் நடைமுறையாக உள்ளது. இதில் பலர் தங்களது ஒரு முறை பதிவு எண் மற்றும் கடவுச் சொல்லை மறந்து விடுகின்றனர். ஆனால் அதை இணையத்தில் மீட்க அதில் பதிவு செய்துள்ள அலைபேசி எண் மற்றும் இ.மெயில் முகவரி அவசியம்.இல்லாதவர்கள் மீட்க முடியாமல் தவிக்கின்றனர். அது போல
Image
  காவலர் எழுத்துத்தேர்வு நுழைவுச்சீட்டை நாளை முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் : புதுச்சேரி அரசு அறிவிப்பு புதுச்சேரி : புதுச்சேரியில் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டினை இணையதளத்திலிருந்து நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது புதுச்சேரி காவல்துறையில் காவலர்கள் 390, ரேடியோ டெக்னீசியன் 12 மற்றும் டெக் ஹேண்ட்லர் 29 என மொத்தம் 431 பணியிடங்களை நிரப்ப பிப்ரவரியில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல்தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் 7,530 பேர் பங்கேற்றதில், ஆண்கள் 2,207, பெண்கள் 687 என 2,894 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் ரேடியோ டெக்னீசியன் பிரிவுக்கு மட்டும் நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக தேர்வு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து புதுச்சேரி அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு புதுச்சேரியில் 7 மையங்களில் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளதாகவ
Image
  தமிழக அரசு பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு. கலந்தாய்வில் புதிய வழிமுறைகள்.. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!!! மார்ச் 14-ஆம் தேதி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதற்கான விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட வழக்கம்போல் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு பின் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் தொடங்கியுள்ளதால் அரசு பள்ளிகளில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளது. தற்போது பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான கலந்தாய்வு வருகிற மார்ச் மாதம் 14ஆம் தேதி நடைபெற உள்ளது என பள்ளி கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கலந்தாய்விற்கான வழிமுறைகள் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் மாவட்ட வாரியாக பெறப்பட்ட பணியாளர்கள் நிர்ணய பட்டியலில் ஏதேனும் கூடுதலான ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பதிவுக்கான கலந்தாய்வில் கலந்து கொண்டு அதில் அவர்களுக்கு தலைமையாசிரியர் பதவி
 50 சதவீதத்துக்கு கீழ் வருகைப்பதிவு; அதிகரிக்கிறது ஆசிரியர்கள் விடுப்பு : கற்பித்தல் பணியில் பாதிப்பு கோவை:பள்ளிகளில் 50 சதவீதத்திற்கும் கீழ், ஆசிரியர்கள் வருகைப்பதிவு குறைந்து வருவதால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.தமிழகம் முழுக்க, ஆசிரியர்கள், மாணவர்கள் வருகைப்பதிவு, எமிஸ் இணையதளத்தில், தினசரி 'அப்டேட்' செய்யப்படுகிறது. கோவை மாவட்டத்தில், சமீபகாலமாக ஆசிரியர்கள் வருகைப்பதிவு குறைந்து வருவதாக, ஏற்கனவே தலைமையாசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதிக மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் பற்றாக்குறை, வாரத்தில் ஆறு நாட்களும் பணி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம், கற்பித்தல் அல்லாத பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்துதல் உள்ளிட்ட, பல்வேறு பணிச்சுமைகளால், மருத்துவ விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.விடுப்பில் உள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக, பணியில் இருப்பவர்கள், வகுப்பை கையாள்வதால், இரட்டை பணிச்சுமை நிலவுவதாக, புகார் எழுந்துள்ளது.  இதை உறுதி செய்யும் வகையில், மாநில அளவில், எமிஸ் இணையதளத்தை ஆய்வு செய்த போது, ஆசிரியர்கள் வருகைப்பதிவு குற
Image
  TN TRB 1060 காலிப்பணியிடங்கள்.. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு..!!!! தமிழகத்தில் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் இயங்கி வருகிறது. இந்த வாரியத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். அதன்படி அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 2017 ம் ஆண்டு கணக்கீட்டின்படி விரிவுரையாளர் பணியிடத்தில் 1060 காலிப் பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த வருடம் பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8-ம் தேதி (8.12.2021) முதல் 13-ம் தேதி வரை(13.12.2021) 15 பாடங்களுக்கு காலை, மாலை நேரங்களில் 10 பிரிவுகளாக தேர்வு கணினி மூலமாக நடத்தப்பட்டது. தற்போது இந்த பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுமுடிவு மற்றும் இறுதி விடைக் குறிப்புகளை TN TRB வெளியிட்டு உள்ளது. அதாவது இறுதி விடைக்குறிப்புகளை trb.tn.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தி