18 December 2022

 தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க! (District Educational Officer job)




தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பள்ளிக் கல்வித்துறை பணியில் அடங்கிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை (District Educational Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.01.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.


காலியிடங்களின் எண்ணிக்கை: 11


கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், புவியியல், வரலாறு, வணிகம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் B.T. or B.Ed முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ. 56,900 – 2,09,200


வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC, BC, BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.


தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


முதல்நிலைத் தேர்வு 300 மதிப்பெண்களுக்கு கொள்குறி வகை தேர்வாக நடைபெறும். இதில் 175 பொது அறிவு வினாக்கள் மற்றும் 25 கணித வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.


முதன்மைத் தேர்வு நான்கு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 40.


இரண்டாம் மற்றும் மூன்றாம் தாள் பொது அறிவு. இது தலா 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு தலா 3 மணி நேரம்.


நான்காம் தாளில் Education பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இது 300 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.


விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.


தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.


விண்ணப்பம் செய்வது எப்படி?


விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.


ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.


மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.01.2023


இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/37_2022_DEO_TAM.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

 அரசுக் கல்லூரிகளில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணி! மாதம் ரூ.20,000 ஊதியம்! அசத்தல் அறிவிப்பு!






அரசுக் கல்லூரிகளில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாகவும் பணி நாடுநர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.



தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ.20,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பின் விவரம் வருமாறு;


அரசு கலை அறிவியல் கல்லூரி

 

தமிழ்நாடு அரசு கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப்பேராசிரியர் பணியிடங்களில் 4000 பணியிடங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டு அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.


1895 பணியிடங்கள்

 


இப்பணியிடங்கள் தவிர, மீதம் காலியாக உள்ள 1895 பணியிடங்களுக்கு மாணாக்கர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான கல்வி சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது.


கவுரவ விரிவுரையாளர்கள்

 


இக்காலிப்பணியிடங்களுக்கு கௌரவ விரிவுரையாளர்களை தெரிவு செய்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் பல்கலைக் கழக மானியக் குழு வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்வித் தகுதி பெற்றுள்ள பணி நாடுநர்களிடமிருந்து பெற்று கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.


பணிநாடுநர்கள் தங்கள் விண்ணப்பத்தினை இணையதளத்தில் பதிவிட வசதியாக www.tngasa.in என்ற இணையதளம் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.


ரூ.20,000 ஊதியம்

 


கௌரவ விரிவுரையாளர் பணியில் சேர தகுதி பெற்ற பணிநாடுநர்கள் 15.12.2022 முதல் 29.12.2022 வரை பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.20,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.

 டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக்: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஏமாற்றம்





TNPSC Group Examinations: 2023 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு கால திட்ட அட்டவணை (TNPSC Annual Planner) தேர்வர்களிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.


தேர்வு அட்டவணையில் குரூப் 1, குரூப் 2/2ஏ தேர்வு பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவுமில்லை. மேலும், குரூப் 4 தேர்வுக்கான அறிவிக்கை 2023 நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், 2024ல் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த தேர்வு திட்டம், தமிழகத்தில் உள்ள குறிப்பாக நடுத்தர மற்றும் கிராமப்புற இளைஞர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை உருவாக்கக் கூடியாதாக உள்ளது. குறிப்பாக, குரூப் 1 தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு இருப்பதால், தற்போது 38 வயதில் இருக்கும் பலர் மீண்டும் ஒருமுறை தேர்வெழுதும் வாய்ப்பை இழக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


கடந்த 10 ஆண்டுகால தேர்வு அட்டவணை:


2020, 2021 ஆண்டுகள் தவிர்த்து, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு மிகவும் சிக்கலான சூழ்நிலையை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தற்போது எதிர்கொள்ள உள்ளனர்.

2012


குரூப் 1 (2011-2013) தேர்வு - 25 பணியிடங்கள்


கிராம நிர்வாக அலுவலர் தேர்வு - 1870,


குரூப் 4 தேர்வு - 10718 பணியிடங்கள்

2013


குரூப் 1 தேர்வு - 79 காலியிடங்கள் ,


குரூப் 2 தேர்வு - 1064 காலியிடங்கள் ,


குரூப் 4 தேர்வு - 5566 காலியிடங்கள்

2014


குரூப் 4 தேர்வுகள் - 4963 காலியிடங்கள் ,


குரூப் 2ஏ தேர்வுகள் - 2,846 காலியிடங்கள்

2015


குரூப் 2 (2014-2015 மற்றும் 2015-16) தேர்வுகள் - 1863 பணியிடங்கள்


கிராம நிர்வாக அலுவலர் (2014 -15) தேர்வுகள் - 813 பணியிடங்கள்


குரூப் 1 தேர்வுகள் - 74 பணியிடங்கள்


குரூப் 2 ( 2014-15, 2015-16) தேர்வுகள் -1241 (நேர்காணல் பணியிடங்கள் )

2016


குரூப் 1 தேர்வு - 85 பணியிடங்கள் ,


குரூப் 4 (2015- 16) தேர்வு -5451 பணியிடங்கள்


2017


குரூப் 2ஏ நேர்காணல் இல்லாத தேர்வு (2017 -18) - 1,953 பணியிடங்கள் ,


குரூப் 4 ( 2015-2016, 2016-2017 and 2017-2018 ) தேர்வு - 9351 பணியிடங்கள்,


2018 குரூப் 2 நேர்காணல் தேர்வு - 1199

2019


குரூப் 4 (2018-2019, 2019-2020) தேர்வு - 6491 பணியிடங்கள் ,


குரூப் 1 தேர்வு (2016 - 2019) - 139 பணியிடங்கள்

2020 குரூப் 1 தேர்வு - 79 (கொரோனா தொற்று பொது முடக்க நிலை)

2021 கொரோனா தொற்று பொது முடக்க நிலை

2022


குரூப் II-IIஏ தேர்வு - 5413 பணியிடங்கள்,


குரூப் 4 தேர்வு -7301 பணியிடங்கள் ,


குரூப் 1 தேர்வு - 92 பணியிடங்கள்



குறிப்பு : மேற்படி அட்டவணையின் படி , தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய ஆண்டு அதிகப்படியான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது.


முன்னதாக, கடந்த 2001 முதல் 2006 ஆண்டு வரையிலான காலகட்டத்தில், பொருளாதார நிதிநெருக்கடி காரணமாக, குரூப் 1, 2,4 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருந்தது. 2006ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பிறகே, ஆட்சேர்ப்பு நடைமுறை இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியது.

 

டிஎன்பிஎஸ்சி ஆட்சேர்ப்பு அறிவிப்பு




கடந்த 10 ஆண்டுகளில், கொரோனா காலக்கட்டங்களிலும் கூட, ஆட்சேர்ப்பு அறிவிக்கை தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வந்தது. ஆனால், தற்போது மிகவும் இறுக்கமான போக்கை தமிழ்நாடு அரசு கடைபிடிப்பதாக டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே, பொருளாதார நிச்சயமற்றத் தன்மை காரணமாக தனியார் துறையில் உள்ள முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநில அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் மேற்கொள்ள வேண்டுமே தவிர இறுக்கமான போக்கு தேவையில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

  தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு ...