Posts

Showing posts from March 11, 2017
TNTET - 2017 : ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவசப் பயிற்சி   ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்  அரசுத் துறை நிறுவனமான தாட்கோ மூலம் நடத்தப்பட உள்ளது. இந்த இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்பும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின  மாணவ-மாணவிகள், 60 சதவீதம் கல்வித் தகுதியைப்  பெற்றிருக்க வேண்டும். Click Here To Apply விண்ணப்பங்களைதாட்கோவின்   http://training.tahdco.com  இணையதளத்தில்  பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக  அரசு அறிவித்துள்ளது.
TRB - 1,111 பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்: பாடவாரியாக காலியிடங்கள் விவரத்தை வெளியிடுமாறு விண்ணப்பதாரர்கள் கோரிக்கை ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் (பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு) தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், முந்தைய தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும், முன்பு குறிப்பிட்ட தகவல்களை உறுதி செய்துகொள்ளவும் நேற்று சிறப்பு வசதி செய்யப்பட்டது.அதன்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வு வாரிய இணையதளத் துக்கு (www.trb.tn.nic.in) சென்று விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியைக் குறிப் பிட்டு தேவையான விவரங்களை பதிவேற்றம் செய்யலாம்.கூடுதல் கல்வித்தகுதி, அண்மை யில் பிஎட் முடித்திருந்தால் அதன் மதிப்பெண், தமிழ் வழியில் படித்திருந்தால் அதுபற்றிய விவரம், புகைப்படம், டிஜிட்டல் கையெ ழுத்து உள்ளிட்ட விவரங்களையும் பதிவேற்றம் செய்யலாம். இவ் வாறு ஆன்லைனில் அனைத்து விவ ரங்களையும் உள்ளீடு செய்த பிறகு
TRB - TET Online Updation எப்படி சரிபார்ப்பது? ஆசிரியர் தேர்வு வாரியமானது தகுதித் தேர்வில் ஏற்கனவே (2012,2013,2014 SPECIAL ) தேர்ச்சி பெற்ற தகுதியான தேர்வர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர்களை நிரப்ப உள்ளது. (i) ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம்பெற்றவர்கள் (ii) ஏற்கனவே தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருகை தராதவர்கள் (iii) பி.எட்., பயின்ற ஆண்டே ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி அந்த கல்வியாண்டே பி.எட்., தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் (vi) சான்றிதழ் சரிபார்ப்பின்போது பணித்தெரிவுக்கு உரிய தகுதி பெறாமல் தற்போது தகுதிபெற்றவர்கள் ஆகியோர்கள், மீளவும் வாய்ப்பு வழங்கவேண்டி விண்ணப்பித்துள்ளார்கள். ஆகவே,தற்போது Paper II-ல் தேர்ச்சி   பெற்ற (Selected Candidates)  தகுதியான தேர்வர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- II பதிவு எண் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அறியலாம். பதிவெண் நினைவில் கொள்ளாதவர்கள் பெயர் மற்றும் பிறந்த நாள் விவரம் பதிந்து விவரங்கள் அ
'செட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையுடன் முடிகிறது அவகாசம் உதவி பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நாளையுடன் முடிகிறது. அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், உதவி பேராசிரியராக பணிபுரிய, மத்திய அரசின், 'நெட்' அல்லது மாநில அரசின், 'செட்' தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதில், தேர்ச்சி பெறாதவர்கள், யு.ஜி.சி., விதிகளின்படி, பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பை முடிக்க வேண்டும். தமிழகத்தில், மாநில அரசின், 'செட்' தகுதி தேர்வு, தமிழக அரசால், பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. மாநில அரசு சார்பில், கொடைக்கானல், தெரசா பல்கலை மூலம், ஏப்., 23ல் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, பிப்., 12ல் துவங்கியது. 'செட்' இணையதளத்தில், விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, நாளைக்குள் வழங்க வேண்டும். நாளைக்குள் விண்ணப்பிக்காதோர், தாமத கட்டணம், 300 ரூபாயுடன், மார்ச், 19க்குள் விண்ணப்பிக்கலாம் என, தெரசா பல்கலை தெரிவித்துள்ளது.