31 July 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும் : ஜெயலலிதா அறிவிப்பு

சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்ப தாவது:– பி.எட். படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள 906 பழங்குடியினப் பட்டதாரிகளுக்கு, அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதி பெற ஏதுவாக, 66 லட்சம் ரூபாய் செலவில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் வாயிலாகவும், ஆசிரியர் பட்டயப் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் பி.எட். பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற 500 ஆதி திராவிடர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் தகுதிபெற வழிவகை செய்யும் வகையில்; 55 லட்சம் ரூபாய் செலவில் தனியார் பயிற்சி நிறுவனங்கள் வாயிலாகவும் பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு பட்டியல் தயார் - தினகரன்

தமிழகத்தில் 15 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப பட்டியல் தயாராகியுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்தில் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற 42 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரத்து 726 பேர் தேர்வு பெற்றனர். மேலும் 4,224 இடைநிலை ஆசிரியர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
'நடப்பாண்டில் 300 பள்ளிகள் தரம் உயர்வு'-Dinamalar

 சென்னை : ''நடப்பாண்டில், 300 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 

சட்டசபையில், நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: 25 மாவட்டங்களில், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரின், 128 குடியிருப்புப் பகுதிகளில், 128 துவக்கப் பள்ளிகள் துவக்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும், ஒரு தலைமை ஆசிரியர், ஒரு இடைநிலை ஆசிரியர் நியமிக்கப்படுவர். 

பள்ளிக்கு, சத்துணவு சமையலறை, குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 19.43 கோடி ரூபாய் செலவாகும். 19 மாவட்டங்களில் உள்ள, 42 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு, தலா, மூன்று பட்டதாரி ஆசிரியர் நியமிக்கப்படுவர். ஒவ்வொரு பள்ளிக்கும், மூன்று கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தரப்படும். 

இதற்கு, ஆண்டுக்கு, 9.28 கோடி ரூபாய் செலவாகும். நடப்பு கல்வியாண்டில், 50 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக, தரம் உயர்த்தப்படும். இவற்றுக்கு, தலா ஒரு தலைமை ஆசிரியர், ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். 

இதன்மூலம், 1.20 கோடி ரூபாய் ஆண்டுக்கு செலவு ஏற்படும். மேல்நிலைப் பள்ளிகளாக, தரம் உயர்த்தப்பட்ட, மாநகராட்சி மற்றும் நகராட்சி பள்ளிகளில், தமிழ், வரலாறு, பொருளாதாரம், வணிகவியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். நடப்பாண்டில், 100 மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இப்பள்ளிகளுக்கு, 100 தலைமையாசிரியர்கள், 900 முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் உருவாக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு, 31.82 கோடி செலவாகும். 

விபத்தில் பெற்றோர் இறந்துவிட்டாலோ, நிரந்தர முடக்கம் ஏற்பட்டாலோ, அவர்களின் குழந்தைகளை, பிளஸ் 2 வரை படிக்க வைக்க, அரசு டிபாசிட் செய்யும், 50 ஆயிரம் ரூபாய், 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். 2,057 பள்ளிகளின் கழிப்பறைகளை பராமரிக்க, 160.77 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். 

1 முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கையெழுத்து பயிற்சி ஏடுகள்; 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஓவியப் பயிற்சி ஏடுகள்; 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள், இலவசமாக வழங்கப்படும். நீலகிரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், ஐந்து உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்கப்படும்.

 இவற்றுக்கு, ஐந்து முழுநேர ஆசிரியர்களும், மூன்று பகுதி நேர ஆசிரியர்களும் நியமிக்கப்படுவர். துவக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும், துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு, 72.90 கோடி ரூபாயில், 1,175 கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10, பிளஸ் ? மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, நாட்காட்டியுடன் கூடிய குறிப்பேடு வழங்கப்படும். இவ்வாறு, ஜெயலலிதா அறிவித்தார்.

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...