Posts

Showing posts from April 5, 2022
Image
  கடந்த 5 நாளில் 7,382 காலி பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வுக்கு 1.44 லட்சம் பேர் விண்ணப்பம்! டிஎன்பி.எஸ்.சி 7,382 காலி பணி இடங்களுக்கு குரூப்-4 தேர்வை டிஎன்பிஸ்சி வெளியிட்டுள்ள நிலையில், இந்த தேர்வுக்கு 1.44 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ) 274 இடங்கள், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2108, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3) 1024, ஸ்டோர் கீப்பர் 1 என 7138 இடங்கள் மற்றும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில், குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. மேலும் 81 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கான இடங்களும் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மாதம் 30ம் தேதி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து குரூப்4 தேர்வுக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறத
Image
  புதிய கல்வி கொள்கைக்கு வல்லுநர் குழு அமைப்பு- முதல்வர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் த.முருகேசன் தலைமையில், சான்றோர்கள் மற்றும் வல்லுநர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில், "பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், அறிவுச் சுடர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா, நல்லாட்சி தந்த நாயகராகவும், நற்றமிழ் வளர்த்த புரவலராகவும், சொல்லாலும், செயலாலும், எழுத்தாலும் தமிழைப் போற்றிய முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோர் வகுத்துத் தந்த சமூக நீதிப் பாதையில் முனைப்போடு செயல்பட்டு வரும் கழக அரசு, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அனைத்துத் தொழிற்கல்வி இடஒதுக்கீட்டுப் பிரிவுகளிலும், 7.5 விழுக்காடு இடங்கள் முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்து, அவர்களது கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே ஏற்று நடைமுறைப்படுத்தி வருவதோடு, 10ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு அரசுத் தேர்வுகளில் மாநில அளவிலும், மாவட்ட அளவ
Image
  ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்போகுது - பதிவு செய்வது எப்படி? தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டித் தேர்வில் கலந்து கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 09.04.2022 அன்று முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயனடைய விரும்பும் நபர்கள் 08.04.2022 என்ற தேதிக்குள், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் சென்று பதிவு செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகி
Image
  10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் எப்படி இருக்கும்?- அன்பில் மகேஷ் பேட்டி 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வில் நடத்தப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப் படாது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அடுத்த மாதம் நடைபெற உள்ள 10 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்கு தயாராகுதல், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல், பள்ளிக்கட்டிடங்களில் நிலை உள்ளிட்ட பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்றும், இன்றும் நடைபெற்றது. இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிறப்பாக செயல்பட்ட காஞ்சிபுரம், திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "தேர்தலுக்காக கொடுத்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றுகிறோம். அந்த வக
Image
  அண்ணா பல்கலை: 3 மாதங்களில் தயாராகிறது புதிய பொறியியல் பாடத்திட்டம் இளநிலை பொறியியல் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கான புதிய பொறியியல் பாடத்திட்டம் இன்னும் மூன்று மாதங்களில் தயாராகிறது. நிகழ் கல்வியாண்டு முதல் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவா்களுக்குப் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு இரண்டாவது பருவத்திலேயே புதிய பொறியியல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருக்கும் பொறியியல் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் ஆகவிட்டதாக துணைவேந்தர் ஆர். வேல்ராஜ் தெரிவித்துள்ளார். பொறியியல் படிப்பினை முடிக்கும் மாணவா்களுக்கு வேலை கிடைப்பதில் தொடா்ந்து சிக்கல் இருந்துவருகிறது. இந்த நிலையில் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு பெறும் வகையில் பாடத்திட்டம் மாற்றம்செய்யப்படும் என உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி அறிவித்திருந்தாா். இந்தநிலையில் பொறியியல் படிப்பிற்கான நான்கு ஆண்டு பாடத்திட்டங்களும் மாற்றப்படவுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்துவரக
Image
  ஒருங்கிணைந்த இன்ஜினியர் பதவிக்கு ஜூன் 26ம் தேதி எழுத்து தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தமிழக அரசின் மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் காலியாக உள்ள ஆட்டோ மொபைல் இன்ஜினியர் 4 இடங்கள், மின்துறையில் ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர் 8 இடம், வேளாண்மை துறை உதவி இன்ஜினியர்-66 இடங்கள், நெடுஞ்சாலை துறை உதவி இன்ஜினியர்-33, தொழில் துறை பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உதவி இயக்குனர்-18, பொதுப்பணித்துறையில் உதவி இன்ஜினியர் 309 இடங்கள், தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு மையத்தில் போர்மேன் 7 இடங்கள், டெக்கினிக்கல் அசிஸ்டெண்ட் 11, தமிழ்நாடு பஞ்சாயத்து மேம்பாட்டு சேவை துறையில் உதவி இன்ஜினியர் 92 இடங்கள் என 549 இடங்கள் நிரப்பப்படுகிறது. மேலும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் உதவி இன்ஜினியர் 64 இடங்கள், மெட்ராஸ் மெட்ரோபாலிட்டன் வளர்ச்சி ஆணையத்தில் உதவி இன்ஜினியரில் 13 இடங்கள் என 77 நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கு அறிவிப்பு வெளியான நாளில் இருந்து டிஎன்பிஎஸ்சி ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடங்கியது. தேர்வுக்கு அடுத்த மாதம் 3ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எழுத்து தேர
Image
  TNTET தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்திற்கு. இன்னும் 9 நாட்கள் மட்டுமே. மிஸ் பண்ணிடாதீங்க.!!!!! மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று உள்ளது. தற்போது தொற்று குறைந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் துவங்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசின் சார்பில் பல தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வும் சமீபத்தில் அறிவித்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி கடந்த மாதம் 7ஆம் தேதி வெளியிட்டிருந்தது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம்.இது பிளஸ் 12 மற்றும் பி. எட் படித்து முடித்த மாணவ மாணவிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி , பி சி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த தேர்
Image
  பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பகுதிநேர ஆசிரியா்கள் சங்க திருப்பூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பழ.கெளதமன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 16,459 பகுதிநேர சிறப்பாசிரியா்கள் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனா். இந்த ஆசிரியா்கள், உடற்கல்வி, இசை, ஓவியம், கணினி, தையல் பயிற்சி போன்ற பாடங்களை எடுத்து வருகின்றனா். ஆசிரியா்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்ட நிலையில், நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் வீதம், வாரம் 3 நாள்கள் என மாதத்தில் 12 அரை நாள்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.7,700 ஆகவும், தற்போது ரூ.10 ஆயிரமாகவும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, தற்போது பொறுப்பேற்றுள்ள திமுக அரசு தோதல் அறிக்கையிலும், பள்ளி கல்வித் துறை அமைச்சரின் அறிவிப்பிலும் பகுதிநேர சிறப்பாசிரியா்கள் பணி நிரந்