27 August 2016

ஆசிரியர் பயிற்சி விரிவுரையாளர் தேர்வு: 194 பேரின் விண்ணப்பம் நிராகரிப்பு.

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 272 இளநிலை விரிவுரையாளர், விரிவுரையாளர், முதுநிலை விரிவுரையாளர் பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப படிவங்கள் ஜூலை 15 முதல் 30-ம் தேதி வரை வழங்கப்பட்டன.

இந்த நிலையில், இப்பணி களுக்கு விண்ணப்பித்தவர்களில் 194 பேரின் விண்ணப்பங்கள் உரிய கல்வித் தகுதியின்மை, அதிக வயது, விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்யாமை உட்பட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டுள் ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

நிராக ரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் பட்டியலை பெயர் மற்றும் நிரா கரிப்புக்கான காரணம் உள்ளிட்ட விவரங்களுடன் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
புவியியல் பட்டதாரி ஆசிரியர் சங்கம், வேலையில்லா பட்டதாரி தமிழாசிரியர் சங்கம், அனைத்து மாவட்ட பதிவுமூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் இணைந்து நடத்தும்

"ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம்"

நாள் :30/08/2016
இடம் : சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை, சென்னை.

மே மாதம் 2010ல் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் வாரீர்! வாரீர் !!வாரீர் !!!

TET: சிறுபான்மை பள்ளிகளுக்கு TET கிடையாது - MADRAS HIGH COURT JUDGEMENT COPY

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...