Posts

Showing posts from April 15, 2022
Image
  தமிழ்நாட்டில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பு: தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் 76 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்ப தாக தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித் துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 30 ஆம் தேதி வரை, மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவல கங்களில் பதிவு செய்துள் ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட் டுள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக் காக 76,24,726 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் ஆண்கள் 35,63,672 பேர். பெண்கள் 40,60,817 பேர் பெண்கள். 237 பேர் மூன்றாம் பாலினத்தவர். பதிவு செய்துள்ளவர் களில், 18 வயதுக்கு உட் பட்ட பள்ளி மாண வர்கள் 16,73,803 பேரும், 19 முதல் 23 வயது வரை யுள்ள உள்ள கல்லூரி மாண வர்கள் 17,32,820 பேரும், 24 முதல் 35 வயது வரையுள் ளவர்கள் 28,82,193 பேரும் உள் ளனர். அதுபோலவே 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 13,24,170 பேரும், 58 வயதிற்கு மேற்பட்ட வர்கள் 11,070 பேரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பதிவு செய்து காத்திருக்கும் மாற
Image
  விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பல்வேறு தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Image
  தொலைதூரக் கல்வி விவகாரம்.. அண்ணாமலை பல்கலை முக்கிய அறிவிப்பு..! அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் நடத்தும் படிப்புகள் குறித்து விரைவில் சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செயல்பட்டு வரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொலைதூரக் கல்வி மூலம் பயின்று வருகின்றனர். இந்நிலையில், '2015-ம் ஆண்டுக்குப் பிறகு தொலைதூரக் கல்வி மூலம் இங்கு வழங்கப்படும் பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு அங்கீகாரம் இல்லை. அதன் காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு பல்கலைக்கழகம் தான் பொறுப்பேற்க வேண்டும்' என, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சமீபத்தில் அறிவித்தது. இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தற்போது சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககம் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பல்வேறு வகையான படிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த படிப்புகள் அங்கீகரிக்கப்ப
Image
  தனியாா் பள்ளிகளில் இலவச சோக்கை: ஏப். 20 முதல் விண்ணப்பிக்கலாம் சிறாா்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி தனியாா் பள்ளிகளில் இலவச மாணவா் சோக்கை பெற ஏப்.20 ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியது: இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களில் ஏழைக் குழந்தைகள் சோக்கப்படுவா். இந்தத்திட்டத்தில் எல்கேஜி அல்லது ஒன்றாம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவா்கள் 8 ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை. அதன்படி நிகழாண்டுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஏப். 20-இல் தொடங்கி மே 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளிக் கல்வித் துறையின் இணையதளம் பெற்றோா் விண்ணப்பிக்க வேண்டும். தங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளில் அதிகபட்சமாக 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினா் என்பவா்கள் ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவா், எச்ஐவியால் பாதிக்கப்ப