10 November 2012


குரூப்-4 ‌தேர்வு: நவம்பர் 18ம தேதி கலந்தாய்வு-10-11-2012

:
சென்னை: ஜூலையில் நடந்த, குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, இம்மாதம், 18ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், கலந்தாய்வு நடக்கும் என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்.
தேர்வாணையம், தட்டச்சர், சுருக்கெழுத்தர், இளநிலை உதவியாளர் உள்பட, குரூப்-4 நிலையில், 10 ஆயிரத்து 793 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 7ம் தேதி, போட்டித் தேர்வை நடத்தியது. 12.33 லட்சம் பேர் விண்ணப்பம் செய்ததில், 10 லட்சம் பேர், தேர்வில் பங்கேற்றனர்.
இதன் முடிவுகள், சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடராஜ் கூறுகையில், குரூப்-4 தேர்வில், தேர்வு பெற்றவர்களுக்கு, 18ம் தேதி முதல், தேர்வாணைய அலுவலகத்தில் கலந்தாய்வு நடக்கும். குரூப்-1 முக்கியத் தேர்வின் முடிவு, விரைவில் வெளியிடப்படும்&' என, நிருபர்களிடம் தெரிவித்தார்.

கல்வி உரிமை சட்டத்திற்கான காலக்கெடு நீட்டிப்பா?-10-11-2012


மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின், 60வது கூட்டம், டில்லியில் நேற்று நடைபெற்றது. மாநில கல்வி அமைச்சர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்ற, இந்தக் கூட்டத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு கூறியதாவது:புதுடில்லி: கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்துவதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள காலக்கெடு, 2013 மார்ச் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பல்லம் ராஜு கூறினார்.
ஆறு முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி அளிப்பதை, அடிப்படை உரிமையாக்கி கொண்டு வரப்பட்டது, "குழந்தைகளுக்கான, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம், 2009 இந்த கல்வி உரிமைச் சட்டத்தை, அனைத்து மாநிலங்களும், 2013 மார்ச் மாதத்திற்குள் அமல்படுத்த வேண்டும் என, காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  கூட்டுறவு வங்கிகளில் 2,000 உதவியாளர் பணியிடங்கள்; ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்பது எப்படி? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட...