Posts

Showing posts from September 24, 2013
நெட் தேர்வில் தகுதி மதிப்பெண் யுஜிசி நிர்ணயிக்க அதிகாரம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு. விரிவுரையாளர்களுக்கான தேசிய தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை நிர்ணயிக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) அதிகாரம் உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2012 ஜூன் 24-ம் தேதி நடைபெற்ற நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு முன்னதாக யு.ஜி.சி. தகுதி மதிப்பெண்ணை நிர்ணயம் செய்து முடிவுகளை வெளியிட்டது.மொத்தம் 5 லட்சம் பேர் எழுதிய இத்தேர்வில் 2 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். அவர்களில் ஒவ்வொரு பாடத்திலும் முற்பட்ட வகுப்பினருக்கு 65 சதவீத மதிப்பெண்ணும், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 60 சதவீத மதிப்பெண்ணும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு 55 சதவீத மதிப்பெண்ணும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டது.அதன்படி, 43,974 பேர் விரிவுரையாளராகும் தகுதியைப் பெற்றனர். ஒருசில பாடங்களில் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே தேர்ச்சியடைந்துள்ளதால் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை க
ஆசிரியர் தகுதித் தேர்வு: ரத்து கோரிய வழக்கு தள்ளுபடி ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆசிரியர் பணி என்பது வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் பணி அல்ல. கல்வியின் தரமும் குழந்தைகளின் நலனும் முக்கியமானது என்று உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்க விரும்பும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழக அரசு 15.11.2011-ஆம் தேதி அறிவிப்பாணையை வெளியிட்டது. இதை எதிர்த்து டி.எஸ். அன்பரசு உள்பட 94 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ஏற்கெனவே தங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் கோரினர். தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பாணையின்படி, இவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதத் தேவையில்லை எனவும், எதிர்காலத்தில் ஏற்படும் காலிப்பணிய