2 December 2015

CTET: பிப்., 21ம் தேதிஆசிரியர் தகுதி தேர்வு
மத்திய அரசின், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், தனியார், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'சிடெட்' என்ற ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.

மாநில பள்ளிகளில் பணியாற்ற, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., நடத்தும், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதில், மத்திய அரசு தேர்வில் வெற்றி பெற்றவர்களால், மாநில அரசு பள்ளிகளில் பணியில் சேர முடியும்.

வரும், 2016க்கான, 'சிடெட்' தேர்வுக்கு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் தேர்வு, பிப்., 21ம் தேதியும், இரண்டாவது தேர்வு, செப்., 18ம் தேதியும் நடக்கிறது. தமிழக அரசின், 'டெட்' தேர்வு, இரண்டு ஆண்டுகளாக நடக்கவில்லை. எனவே, மத்திய அரசின் தேர்வில், தமிழகத்தை சேர்ந்த பட்டதாரிகள், அதிக அளவில் பங்கேற்கலாம் என, தெரியவந்துள்ளது.
Flash News-கனமழை :8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (02.12.2015) விடுமுறை அறிவிப்பு.
*திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை
*கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
*புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

  நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையில் விண்ணப்பிப்பது எப்படி? கடந்த இரண்டு மூன்று தினங்களாக செய்தி ஊடகங்களை கலக்கி கொண்டு இருப்பவர் நடிகர்...